பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 காகிதம்‌

166 காகிதம் தற்போது காகிதம் தயாரிக்கும் முறையில் பலவிதப் புதுமைகள் புகுத்தப்பட்ட போதும்,மேலே விளக்கப்பட்ட முறையின் அடிப்படையிலேயே இன்றும் காகிதம் தயாரிக்கப்படுகிறது. தொடர்ச்சி யாகக் காகிதத் தயாரிப்பில் ஈடுபடும் கருவிகளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை உருளை எந்திரம் (cylinder machine), ஃபோர்ட்ரைனியர் எந்திரம் (Fourdrinier) ஆகியவையாகும். முதல் முறையில் கம்பி வலை பொருத்தப்பட்ட ஓர் உருளை இழைக்குழம்பு (fibre slurry) நிரம்பிய தொட்டி ஒன்றில் பொருத்தப்பட்டு உருளை சுழலும் போது. இழைக்குழம்பு வலையின் மேற்பரப்பில் படிகிறது. குழம்பில் உள்ள நீர் வலையின் உட்பகுதி வழியே வெளியேறி வலையின் மேற்பரப்பில், காகிதத் தகடு தோன்றும். இந்த ஈரத்தகடு உருளையின் மேல் பகுதியிலிருந்து நீக்கப்பட்டுப் பின்னர் பல உருளைகள் வழியே செலுத்தப்பட்டு, அமுக்கி நீரை அகற்றி, நீராவியால் சூடாக்கப்பட்ட உருளையின் மேல் செலுத்தப்பட்ட பின் இத்தகடு உலர்த்தப்படுகிறது. ஃபோர்ட்ரைனியர் முறையில் தொடர்ச்சியாக ஓடும் கம்பி வலையின் மீது இழைக்குழம்பைச் செலுத்தி, நீரை வடிகட்டிக் கிடைக்கும் ஈரமான காகிதத் தகட்டைத் தொடர்ச்சியாக வெளியே எடுக்க வேண்டும். ஃபோர்ட்ரைனியர் கருவி சிக்கலான அமைப்புடையது. இது படம் 7,8,9,10,11,12-இல் கொடுக்கப்பட்டுள்ளது. படம் 7. ஃபோர்ட்ரைனியர் காகித எந்திரத்தின் ஈரப்பகுதி. எத்தில் இவற்றைத் தவிர மாவுப்பொருள்கள். கார்ப மத்தில் செல்லுலோஸ், ஹைட்ராக்சி செல்லுலோஸ் போன்றவை கூழ் இழைகளின் ஒட்டும் இயல்பைக் கூட்டும். காகிதத்தின் ஈர வலிமையை (wet strength) உயர்த்த, யூரியா ஃபார்மால்டிஹைடு பல்லுறுப்பி மெலமின் - ஃபார்மால்டிஹைடு பல்லு றுப்பி ஆகியவை காகிதக் கூழில் சேர்க்கப்படுகின்றன. இவற்றைத் தவிர, காகிதத்தில் தேவையான இயல்பைப் பெறவும், காகிதத்தைத் தயாரிக்கும் போதும், உலர்த்தும்போதும் உரிய பண்புகளைப் பெறவும் சில குறிப்பிட்ட சேர்மங்களைக் கூழுடன் சேர்த்துக் கலக்க வேண்டும். காகிதத்தகடு தயாரித்தல். பல நூற்றாண்டுகளாகக் காகிதம் தயாரிக்க, கை அச்சு முறை மேற் கொள்ளப்பட்டது. இம்முறையில் நுண்வலை பொருத்தப்பட்ட மரச்சட்டத்தைச் செல்லுலோஸ் இழை உள்ள தொங்கல் கரைசலில் அமுக்கி வெளியே எடுக்கும்போது நீர்,வலையின் வழியே வெளியேறிப் பாய்வலையின் மேற்பரப்பில் விடப்படுகிறது. இதை உலர்த்திக் காகிதத்தைப் பெறலாம். படம் 8. செரிப்பரள். இதில் மரச்சீவல்கள் வேதிப்பொருள் களுடன் சேர்க்கப்பட்டு இழைகளாக மாற்றப்படுகின்றன.