காகிதம் 167
இருப்பு இழைக்குழம்பு, உரிய அளவு நீர்த்த பின்னர், மாசு, இழைக்குழம்பைப் பிரித்தெடுக்க ஒன்று அல்லது பல வடிகட்டும் வலைகளின் வழியே செலுத் திப் பின்னர் பரப்புக் கருவியை (flow spreader) அடையும். இக்கருவி, இயங்கும் ஃபோர்ட்ரைனியர் வலையின் மீது இழைக்குழம்பைச் சீராகப் பரவச் செய்கிறது. ஃபோர்ட்ரைனியர் கம்பி பல உருளைகள் மீது தாங்கப்பட்டுள்ளது. தொடக்க, முடிவு கட்ட உருளைகளுக்கு டையில் பல மேஜை உருளைகளும் உறிஞ்சும் பெட்டிகளும் உள்ளன.கா காகிதக் குழம்பில் 99-99.5% வரை நீர் உள்ளது. உறிஞ்சு பெட்டி டியை விட்டு வெளிவரும் காகிதத்தில் 80% நீர் உள்ளது. ஈரக் காகிதத்தைப் பல உருளைகளின் இடை டயே செலுத்தி எந்திர விசையால் நீர் அகற்றப்படுகிறது. இதில் எஞ்சியுள்ள நீரின் அளவு 65-70% ஆகும். காகிதம் 167 இதை நீக்க எந்திர விசை மட்டும் போதாது. எனவே ஈரக் காகிதத் தகடு நீராவியால் சூடேற்றப் பட்ட உருளைகளின் உதவியால் உலர்த்தப்படுகிறது. ஈரத்தகடு சூடான உருளையில் படும்போது நீர் ஆவியாகிறது. உரிய அமைப்பைக் கொண்டு காற்றின் உதவியால் இது வெளியேற்றப்படுகிறது. உலர்ந்த காகிதத்தில் 4-6% ஈரம் எஞ்சும். சில குறிப்பிட்ட வகைக் காகிதங்களில் எய்தும் இயல்புகளை மேம்படுத்தும் நோக்கோடு காகிதத் தைத் தயாரித்து உலர்த்திய பின்னர், சில குறிப் பிட்ட செயல்முறைக்குக் காகிதம் உட்படுத்தப் படுகிறது. இவ்வாறு தேர்ந்தெடுக்கும் முறைகளில் எந்திர உருளை முறை (machine calendering) குறிப் பிடத்தக்கதாகும். இம்முறையில் தொடர்ச்சியாக அடுக்கப்பட்டுள்ள எஃகு உருளைகளின் இடைவெளி படம் 9. சலிக்கப்பட்ட சீரான மரச்சீவல்கள் கடத்திகளால் செரிப்பானுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.