பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காகிதம்‌ 169

பரப்புக் கருவி மேஜை உருளைகள் தலைப்பகுதி தோன்றும் அறிஞ்சு அழுத்திகள் அட்டை பெட்டிகள் முடிவு உருளை தொடக்க உருளை " உலர்த்திகள் கவசப்பெட்டி உருளை காகிதம் 169 சுற்றுகள் வழியே படம் 12. ஃபோர்ட்ரைனிவர் காகித எந்திரம் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட காகிதத் தகடுகள் செலுத்தப்படுகின்றன. மற்றொரு முறையில் காகிதங்களுக்கு மேற்பூச்சுக் கொடுக்கப்படு கிறது. நூல்கள், மாத வார ஏடுகள் போன்றவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் காகிதங்களில் களிமண். ஒட்டுவிப்பிகள் மற்றும் பல சேர்க்கைச் சேர்மங்கள் கலந்த தொங்கல் கரைசல் மேற்பூச்சு அளிக்கப் படுகிறது. காகிதப் பொருள்கள். காகிதத் தொழிற்சாலையி லிருந்து பல்வேறு வகைப் பொருள்கள் வெளிவரு கின்றன. இருந்தபோதும், தொன்று தொட்டு வரும் அதன்பயனில் எவ்வித மாற்றமுமின்றிக் காகிதம் தன்னிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பல்வேறு புதிய துறைகளில் மாற்றப்பட்ட (converted) பொருள்களின் பயன் குறிப்பிடத்தக்கது. பொது வாகக் காகிதம் தயாரித்த பின்னர் அதை மாற்றம் செய்ய அழுத்திப் பதித்தல் (embossing), அலை நெளிவாக்கல் (corrugating), மெழுகேற்றல் (waxing) மீ உருளை முறை (super calendering), தகடாக்கல் (lamination), மேற்பூச்சேற்றுதல் (coating). நிறை வுறச் செய்தல் (saturating). அச்சிடல் (printing) போன்ற செயல்முறைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். சுட்ட மாற்றம் தரும் செயல்முறைகளில் மேற்பூச்சேற்று தல் சிறப்பு வாய்ந்தது. மேற்பூச்சுகளைக் கனிமப்பூச்சு கள், தடுப்புப் பூச்சுகள் (barrier coating) என இருவகை களாகப் பிரிக்கலாம். கனிமப்பூச்சுகள் அச்சுக் காகிதம் தயாரிக்க உதவுகின்றன. பொருள்களைக் மேலுறையாகப் பயன்படும் காகிதம், நீர், வளிமம், ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடு, ஹைட்ரஜன் சல்ஃ பைடு, எண்ணெய், கொழுப்புப் போன்றவற்றிற்குத் தடுப்பாக அமைய வேண்டும். இந்நிலையில் தடுப்புப் பூச்சின் பயன் குறிப்பிடத்தக்கது. கஞ்சிச் சேர்மங்கள் காகிதத்திற்கு நீர் எதிர்ப்புத் திறனை அளிக்கும். மசகு போன்ற பொருள்களைப் புசுவிடாமல் தடுக்கக் காகிதத்தில் உள்ள நுண்துளைகளை அடைக்கும் பொருட்டு நீரேற்றம் செய்ய வேண்டும் அல்லது உரிய தடுப்புப்பூச்சுத் தர வேண்டும். பொருள்களை உலகின் பல பகுதிகளுக்கும் கட்டி அனுப்பும் கொள்கலன்கள் தயாரிப்பில் காகிதம், காகித அட்டையின் பங்கு குறிப்பிடத்தக்கது. இக் கொள்கலன்கள் விறைப்பாகவோ வளையக் கூடிய வாகவோ இருக்கும். முதல் வகைக் கொள்கலன் களில் (container) குறிப்பிடத்தக்க நெளியாக்கப் பட்ட காகித அட்டைகள் பொருள்களைக் கப்பலில் ஏற்றிச் செல்லச் சிறந்தவை. இது காகிதத்தின் பயன் களில் முக்கியமானது. நெளியாக்கப்பட்ட அட்டை, அதன் நுண்ணிய அமைப்பினால் மிகுந்த அமுக்க வலிமை பெற்றுள்ளது. நன்கு வளையக்கூடிய காகிதப் பைகள் ரண்டாம் வகையைச் சேரும். ஒற்றைச் சுவர், இரட்டைச் சுவர், பல சுவர்ப் பைகள் (multi wali} எனக் காகிதப் பைகளை வகைப்படுத்தலாம். บล சுவர்க் காகிதச் சாக்குகள் உரம் போன்ற மணிப் பொருள்களை எடுத்துச் செல்லச் சிறந்தவையாகும். சில சிறப்புப் பூச்சுகள் இச்சாக்குகளுக்கு நீர் எதிர்ப்புத் திறனை அளிக்கும். நா. அய்யாசாமி நூலோதி. M. Considine, Chemical & Process Technology, First Edition, McGraw-hill Book Com- pany. New York, 1974.