170 காங்கேயம் மாடு
170 காங்கேயம் மாடு காங்கேயம் மாடு தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தாரா புரம் வட்டத்தில் காங்கேயம் பகுதியில் இந்த இன மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இவை உடுமலைப் பேட்டை, பல்லடம், பொள்ளாச்சி வட்டங்களிலும் தென் இந்தியாவில் பிற பகுதிகளிலும் காணப்படு கின்றன.கூர்நுனியுடன் தடித்த கொம்புகளுடைய இவற்றின் உடல் நீளமாகவும் நேராகவும் இருக்கும். தடித்த கனமான குட்டைக்கழுத்தும், நடுத்தர அமைப்புடைய திமிலும், அசுலமான மூக்கும் திண்மை யான கால்களும், சிறிய தாடையும், மெல்லிய தோலும், சிறிய தண்டும் நன்கு வளர்ந்துள்ள பின் பகுதியும், அழகான வாலும் இதன் சிறப்பு அமைப் பாகும். காளையின் நிறம் கருமையாகவும், பசுவின் நிறம் வெண்மையாகவுமிருக்கும். நான்கு கால்களிலும் குளம்புக்கு மேல்பகுதி கருமையாகவும் இரு முன்கால் களின் முட்டுகள் கருமையாகவும் இருக்கும். இதன் உடல் அமைப்பு, கடினமான உழவுக்கும், வண்டி ழுவைக்கும். விவசாயிகளின் நீண்டகாலச் சேவைக்கும் ஏற்றது. நன்கு வளர்க்கப்பட்ட காளைகள் 2 3 வயதில் இனப்பெருக்கம் செய்ய ஆயத்தமாகிவிடும். கிடேரிகள் 3 அல்லது 3 வயதில் முதல் கன்று ஈனும், பசுக்கள் பால் குறைவாகக் கொடுக்கும். பால்கறவைக் காலத்தில் 666 கி.கி. பால் கொடுக்கும். அதாவது நாளொன்றுக்கு ஏறத்தாழ 2 கிகி. பால் கறக்கும். தமிழ்நாட்டில் பல சிற்றூர் களில் விவசாயிகள் பசுக்களையும் வேளாண் பணி களுக்குப் பயன்படுத்துகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் குறைந்த அளவு மழை பெய்யும் பகுதியாகும். நிலத்தடி நீர் மிகவும் ஆழத்தில் உள்ளது. இந்த நிலத்தடி நீரைக் கவலை இழுவையினால் விவசாயிகளின் கொண்டுவரக் நிலங்களுக்குக் கடின உழைப்புத்திறன் கொண்ட 1924-25 ஆம் ஆண்டி எருதுகள் தேவைப்பட்டன. லிருந்து தர்மபுரி மாவட்டம் (முன்னாள் சேலம் மாவட்டக் கால்நடைப் உண்டாக்கப்பட்டு மாவட்டம்) ஓசூர் அரசு பண்ணையில் இந்த மாடுகள் வளர்க்கப்படுகின்றன. மான பொதுப் பண்புகள். பெரும்பான்மை நடுத்தர மாடுகளாயினும் பெரிய உடல் அமைப்புக் கொண்ட மாடுகளையும் காணலாம். காளைகள் 500-600 கி.கி. எடையும் பசுக்கள் 350-400 கி.கி. எடையும் கொண்டவை. விவசாய வேலைகளில் நீண்ட நாள் உழைக்கக்கூடியவை. மிகவும் சுறுசுறுப் பானவை. குட்டையான தலையுடனும் அகல நெற்றி யுடனும் திண்மையான கொம்புகளுடனும் காணப் படும். உடல் அமைப்புத் திண்மையானது. எருதுகள் மயிலை நிறமுடையவை, கடின உழைப்புக் கொண் டவை. பொலிகாளைகள் மயிலை, கருமை நிற முடன் தலை, கழுத்து, திமில் தோள்பட்டை பின்தொடைப்பகுதிகள் கரு நிறம் கொண்டவை. பசுக்கள் வெண்மை அல்லது மயிலை நிறம் கொண் டவை. 4 கால்களில் குளம்புக்கு மேல்பகுதி கருமை