பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காச நோய்‌ 171

காச நோய் 171 நிறமும் முன்கால் பகுதியில் கருமை நிறமும் கொண் டவை. சில பசுக்கள் முகத்திலும் உடலிலும் மயிலை நிறம் கொண்டவையாக இருக்கும். கன்றுகள் பிறந்த வுடன் செம்மை நிறமும் 3-4 மாதங்களில் வெண்மை மற்றும் மயிலை நிறமும் கொண்டிருக்கும். உடல் அமைப்பு தலை. நெற்றி அகலமானது; அளவானது. காளையின் முகம் அளவில் பெரிதாகவும், நடுப்பகுதி குழி விழுந்ததாகவும் காணப்படும். முகம் மற்றும் மூக்கு. முகம் குட்டையாகவும் நேராகவும் காணப்படும். மூக்குப்பகுதி அகன்றும் கருமை நிறத்துடனும் காணப்படும். கண். நீள வட்டவடிவத்தில் தெளிவாக ஒளி பொருந்திய கருமையான இமை மயிருடன் காணப் படும். காது, குட்டையானது. நேராக நிமிர்ந்து நிற்கக் கூடியது. கொம்புகள், காளைகளின் கொம்புகள் தடிமனா கவும், பருமனாகவும் இருக்கும். வெளிப்புறம் பின் புறமாக வளைந்து, இரண்டு கொம்புகளின் நுனிப் பகுதியில் ஒரு வட்ட வடிவமைப்புக் கொண்டதாக இருக்கும். கொம்பின் நுனிப்பகுதி சிறிது கூர்மை யானது. கழுத்து, உடலுடன் நன்கு பொருந்திக் குட்டை யாக, தடிமனாகக் காணப்படும். திண்மையான திமில். நன்கு வளர்ந்த காளையின் திமில்கள் திரண்டு நேராகக் காணப் படும். தாடை. மெல்லியது, குட்டையானது. நெஞ்சின் முகப்பு எலும்புடன் முடியும். நெஞ்சு. இரண்டு முன்கால்களுக்கிடையில் அகன்று ஆழமாக இருக்கும். கால் தோள்பட்டை. கால்கள் குட்டையானவை, நேரானவை. நன்கு திண்மையான எலும்புகளுடன் உடலுக்குக்கீழ் அமைந்துள்ளவை. தோள்பட்டைகள் அகலமானவை. சதைப்பகுதியுள்ளவை. குளம்புகள் திண்மையானவை. சிறியவை. அளவான நிறத்துடனும் குறுகிய பிளவுடனும் காணப்படும். கறுப்பு உடல்.நடுத்தர நீளம் கொண்டது. எலும்புக் கூடு திண்மையானது. உடல் பின்புறம் நேரானது, அகலமானது, நடுத்தர நீளம் கொண்டது. மார்புக் கூடு நீளமான வளைவு கொண்டது. கொப்பூழ்க் கொடி பசுக்களில் சிறியது. காளைகளின் தண்டுப் பகுதி உடலுடன் ஒட்டியது. ஊசல் போல ஆடாதது. தொடை மற்றும் மேல்பகுதி. 'தொடையின் மேல் பகுதி குட்டையானது, அகலமானது. தொடைகள் திண்மையானவை. அகன்று வளைந்து காணப்படும். தொடையின் மேல்பகுதி அகலமாகவும் நடுத்தர அளவுடனும், வால் அடிப்பகுதியில் சரிந்தும் காணப் படும். பின்புற எலும்புகள் அகலமானவை: பின்கால் கள் அடிவயிற்றுடன் சேரும் பகுதி அகலமானது. தொடை. நன்கு வளர்ச்சி பெற்று அகலமானது. சதைப்பிடிப்புக் கொண்ட டது. பின்கால்கள் வலிமை யானவை. நன்கு உடலுடன் சேர்ந்துள்ளன. வால். உடலுடன் ஓட்டியது; அகலமானது; நுனியில் மெல்லிய அமைப்புடன் நடுத்தர நீளம் கொண்டது; நுனியில் கறுப்பு முடிச்சுக் கொண்டது. பின்கால் முட்டிப்பகுதிக்குக் கீழ் தொங்கும். பசுவின் மடி நன்கு வளர்ச்சிபெறவில்லை. பால்காம்புகள் சிறியவை. நன்கு இடைவெளி கொண்டவை. பால் தமனிகள் நன்கு தெரிவதில்லை. மடி, தொடுவதற்கு மென்மையாக இருக்கும். தோல். இலேசானது. நன்கு வளையக்கூடியது; கருமை நிறம் கொண்டது. முடி குட்டையானது. வெண்மைநிறம் கொண்டது. பின் மடிப்பகுதி வளர்ச்சிப் பெறாதது. . மைய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் பரா மரிக்கப்படும் மைய மாடுகள் இனக்குறிப்பு நூலில் Central Herd Book) uusss Cata செய்யப் பட்டுள்ள னமாகும். இதில் பதிய மேலே குறிப்பிட் டுள்ள உறுப்பு அடையாளங்கள் இருக்க வேண்டும். அத்துடன் பசுக்கள் 300 நாள்களுக்கு 500 கி.கி பாலுக்கும் றையாமல் கொடுக்க வேண்டும். மூக்குடன் முகப்புக் கறுப்பாக இருக்க வேண்டும். ஏனைய நிறங்கள் அனுமதிக்கப்பட மாட்டா. காச நோய் பி. ராமன் இந் நோய் மைக்கோபேக்டீரியம் ட்யூபர்கிலோசிஸ் (Mycobacterium tuberculosis) என்னும் நுண்ணுயிரி யால் உண்டாகிறது. காசநோய் உடலின் அனைத்து உறுப்புகளையும் (நகம், மயிர் தவிர) தாக்கும். இந் நோயால் இரு நுரையீரல்களும் பெருமளவில் பாதிக்கப்படும். இது தவிர இரைப்பைக் குடல் முளை,கண். தோல், எலும்பு மூட்டுகள், சிறு நீரகம். பிறப்புறுப்புகள் ஆகியவையும் தாக்கப் படுகின்றன. இது ஒரு தொற்று நோயாகும். காச நோய் (tuberculosis) நுண்ணுயிரியை 1882 இல் ராபர்ட் காக் காக் என்னும் ஜெர்மானிய வல்லுநர் சுண்டுபிடித்தார். இந்நோய்க்கு எதிரான மருந்துகள் 1944 வரை கண்டுபிடிக்கப்படவில்லை.