174 காசித் தும்பை
174 காசித்தும்பை படுகிறது. ஒரு கிலோ கிராம் எடைக்கு 5-10 மி.கி. என்னும் அலகில் 300 மி.கி க்கு மிகாமல் கொடுக்க வேண்டும். இதன் பக்க விளைவுகள் புற நரம்பு அழற்சி, ஈரல் அழற்சி, ஒவ்வாமை, மூட்டுவலி, மன நோய் போன்றவை ஆகும். பைரசினமைடு. இதுவும் நிகோடினமைடு தொகுதியைச் சார்ந்தது. செல்களுக்கு உள்ளே இருக்கும் காச நோய் நுண்ணுயிர்களையும் மெது வாசு இனப்பெருக்கமடையும் நுண்ணுயிர்களையும் தாக்குகிறது. ஒரு கிலோ எடைக்கு 25 மி.கி என்னும் அலகில் 2 கி வரை, மாத்திரையாகக் கொடுக்கப் படலாம். இதன் பக்க விளைவுகள் கல்லீரல் அழற்சியும், கீல்வாத நோயுமாகும். ரிஃபாமைசீன். ஸ்ட்ரெப்ட்டோமைசீஸ் மெடிட்டி ரேனியை (Streptomyces mediterranii) எனப்படும் காளானிலிருந்து பெறப்படும் இம்மருந்து தற்போது இருக்கும் அனைத்துக் காசநோய் எதிர் மருந்து களிலும் முதன்மையானதாகும். INH போன்றே இதுவும் மாத்திரையாகவோ, குளிகையாகவோ கொடுக்கப்பட்டால், விரைவாகச் செல்லுக்கு உள்ளே யும், வெளியேயும் இருக்கும் காசநோய் நுண்ணுயிர் களை உடனடியாக அழிக்கிறது. விரைவாக இனப் பெருக்கமடையும் கரச நோய் நுண்ணுயிர்களை மட்டுமன்றி மெதுவாக வளர்ச்சியடையும் நுண்ணு யிர்களையும் உயிரிழக்கச் செய்கிறது. கிலோ ஒரு கிராம் எடைக்கு 10.20 மி.கி அலகில் து கொடுக்கப்பட வேண்டும். 50கிலோ எடையுள்ள நோயாளிக்கு நாளும் 450 மி.கிராமும் அதற்கு மேல் எடையுள்ளவர்களுக்கு 600மி.கிராமும் கொடுக்கலாம். இம் மருந்தின் பக்க விளைவுகள் காய்ச்சல், ஈரல் அழற்சி, ஃபுளு இணைப்போக்கு என்பன. இந்நான்கு மருந்தும் நுண்ணுயிர் கொல்லி சுளாகப் பயன்படுகின்றன. வை அனைத்தும் நாள்தோறும் ஒரு வேளை கொடுக்கப்பட்டாலும் வாரத்திற்கு இரண்டு முறையாகக் கொடுத்தாலும் நன்கு பலனளிக்கின்றன. வாரத்திற்கு இருமுறையாகக் கொடுக்கும்போது அதன் அலகுகள் வருமாறு: ஸ்ட்ரெப்டோமைசீன் INH பைரசினமைட் ரி பாமைசீன் 1 - 2 0.75 650 மி.கி. 600 மி.கி. நுண்ணுயிர் வளர்ச்சித் தடை மருந்துகள் தையசிடசோன் பாரா அமினோசாலி சிலிக் அமிலம் எதியோனமைடு அலகு 150மி.கி நாள்தோறும் அலகு 10-15கி நாள்தோறும் அலகு 500 மி. சைக்ளோசீரைன் எதம்பியூட்டால் அலகு 500மி. அலகு 600-800 மி. வையோமைசீன், கானமைசீன். கேப்ரியோமை சீன் ஆகியவை ஊசி மருந்துகளாகக் கொடுக்கப் பட்டாலும், எதிர்பார்த்த பலனளிக்காமையுடன். சிறுநீரகம், கல்வீரல் ஆகியவற்றையும் தாக்குகின்றன. ஆகவே இவை பெரும்பாலும் பயன்படுவதில்லை. பசியின்மை, தோல் அரிப்பு, குமட்டல், வாந்தி, தலைவலி, தலைச்சுற்றல் என்பவை தையசிட சோனின் பக்க விளைவுகளாகும். மிகவும் தீமையான பக்க விளைவை ஸ்டீவன்ஸ் ஜான்சன் இணைப்போக்கு எனலாம்.இங்கு, தோல் தடிப்பும் இரத்தப் பெருக்கமும் ஏற்பட நோயாளி மரணமடையக்கூடும். பாரா அமினோ சாலிசிலிக் அமிலம் (PAS). பெரும் பாலும் இம்மருந்து கல்லீரலைப் பாதிக்கிறது. மேலும் வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை ஆகியவற்றையும் உண்டாக்கும். சிலபோது தைராய்டு சுரப்பியும் வீங்குகிறது. எதியோனமைடு மருந்து சாப்பிடும்போது வாந்தி, குமட்டல் தோன்றலாம். சைக்ளோசீரைன் மருந்து தோல் தடிப்பு, மனநோய், வயிற்றுப்போக்கு ஆகியவற்றை உண்டாக்குகிறது. எதம்பியூட்டால் என்னும் மருந்தை உண்ணும்போது பார்வைத் தொடர்பான கோளாறு கள் உண்டாகின்றன. இரட்டைப் பார்வை, பார்வை நரம்பு அழற்சி ஆகியவை உண்டாகலாம். இம்மருந்து சாப்பிடுவதை நிறுத்தியவுடன், கண் கோளாறுகள் அனைத்தும் மறைந்துவிடும். க முன்பு காச நோய் எதிர்ப்பு மருந்துகளை 12-18 மாதங்கள் வரை மருத்துவமாக கொடுக்க வேண்டி யிருந்தது. அண்மைக் காலமாகக் குறுகிய கால வேதியிய (short term chemotherapy) மருத்துவ முறை கையாளப்படுகிறது. இம்முறையில் காச ஸ்ட் நோய் எதிர்ப்பு மருந்துகளை 6-9 மாதம் வரை மட்டும் கொடுத்தால் போதும் என ஆய்வு மூலம் அறியப்பட்டுள்ளது. குறுகிய கால வேதியியல் மருத்து வத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் ரெப்ட்டோமைசீன். INH, ரிஃபாமைசீன், பைரசின மைடு என்பன. பிற மருந்துகள் குறுகிய கால மருத்து வத்தில் பயன் தாரா. காசித்தும்பை அ. கதிரேசன் இது பால்ஸாமின் குடும்பத்தைச் சேர்ந்தது. இக் குடும்பம் ஜெரானியே என்னும் பெரிய குடும்பத்தின்