பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 காசினியின்‌ நீள்வட்டம்‌

176 காசினியின் நீள்வட்டம் . 180 கோணத்தில் திருகிக் கொள்கின்றன (resupi- nation). இதன் காரணமாக மொட்டு நிலையில் முன் பக்கத்தில் இருக்கும் பூத்தேன் குழல் பின் பக்கத் திற்கு வந்துவிடுகிறது. புல்லி வட்டம் ஐந்து இதழ் களால் ஆனது. இவ்விதழ்கள் அல்லிவட்ட இதழ்களை ஒத்திருக்கும். மொட்டு நிலையில் முன்புறத்திலும், மலர் நிலையில் பின்புறத்திலும் இருக்கும் இதழ் அளவில் பெரியது. பூத்தேன் குழல் கொண்டது. பக்க இதழ்கள் சிறியவை. பிற இரு இதழ்கள் மிகச் சிறியனவாகவோ வளராமலோ இருக்கும். அல்லி இதழ்கள் ஐந்தில் மைய இதழ் பெரியது; மொட்டு நிலையில் இது எல்லாவற்றிற்கும் வெளியில் உள்ளது. பக்க இதழ்களும் முன்புற இதழ்களும் இணைந்தவை. இவ்வமைப்பால் மொத்தமாக மூன்று இதழ்களே போன்ற தோற்றம் ஏற்படுகிறது. மகரந் தங்கள் ஐந்து, குட்டையான அகலமான காம்புகள் உள்ளவை. ஐந்து மகரந்தப்பைகளும், பக்கவாட்டில் இணைந்து சூலகமுடியை ஒரு தொப்பி போல் மூடிக் கொண்டிருக்கும்; சூல் பையின் வளர்ச்சியால் இவை நீள்கின்றன. சூற்பை ஐந்து சூல் இலைகளால் ஆனது. சூவிலைகள் இணைந்தவை; ஐந்து அறைகள் உள்ளவை. பல்சூல்கள் அச்சுச்சூலமைப்பில் அமைந் துள்ளன. சூலகத் தண்டற்ற சூலக முடி காணப்படும். சூலகமுடி ஐந்து பற்கள் கொண்டது. கனி. உள்வெடி கனி வகையைச் (capsule) சேர்ந் தது. முதிர்ந்த கனிகள் தொட்டால் வெடிக்கும் தன்மையானவை. சுருண்டு வெடித்துப் பிரியும் ஐந்து பகுதிகளிலிருந்து விதைகள் எல்லாப் பக்கமும் சிதறும். சிறிதே தட்டையான விதைகள் முழுக்க முழுக்கக் சுருவால் நிரம்பி உள்ளன. கருவின் இரு விதையிலை களும் ஒன்றையொன்று நோக்கியிருக்கும். வகை. தரை வகை, இரட்டைத் தேயிலைப் பூக் கலப்புட்ரோஜாப்பூ போன்றவை, ராயல் குட்டை றன. உயர் வகை குட்டைக் கலப்பு வகை என்று பலவாறு தோட்டக்கலை வல்லுநர்களால் வகையிடப்படுகின் 45-75 செ. மீ. வரை வளரும். இல குட்டை வகை 45-60 செ.மீ. வரை வளரும். இவை கலப்பு மலர்கள் கொண்டவையாகவும். அடர்த்தியாகவும் காணப்படுகின்றன. இரட்டை மலர்கள் கொத்துக் கொத்தாகத் தண்டின் நுனியில் காணப்படுகின்றன. மலர்கள் இலைகளுக்கு மேலே நன்கு வெளிப்படும்படி அமைந்துள்ளன. மற்ற வகை யில் மலர்கள் தண்டின் பக்கவாட்டில் இலைகளால் பாறைக்கப்ட்ட நிலையில் காணப்படுகின்றன. டாம் தம்ப் எனப்படும் வகை மிசுக் குட்டையானது. 30 4.மீ மட்டுமே வளரக்கூடியது. சீரான அடர்த்தி யுடன் நெருக்கமாக அமையப் பெற்ற இவ்வகையில் கண்ணைக் கவரும் வண்ணங்களில் இரட்டையடுக்கு லர்கள் காணப்படுகின்றன. இச்செடிகளைக் கோடை, மழை நாள்களிலும் வளர்க்கலாம். ஜனவரி, பிப்ரவரியில் விதைத்தால் கோடை மலர்களும், மே, ஜூலையில் விதைத்தால் மழைக்கால மலர்களும் உண்டாகின்றன. விதைகளை நேரடியாகப் பாத்திகளில் விதைக்கலாம். விதைக்கும் போது 22-30 செ.மீ. வரை இடைவெளி விட வேண் டும். விதைக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு அல்லது இரண்டரை மாதங்களில் மலர்கள் உண்டாகும். நன்கு உரமிடப்பட்ட நீர் தங்காத ஆனால் ஈரமான மண்ணில் சூரிய ஒளி நிறைந்த இடங்களில் இவை மிக நன்றாக வளர்கின்றன. நிழற்பாங்கான பகுதி களிலும் இவற்றை வளர்க்கலாம். நன்னீரும் உரங் களும் மிகுதியான பூக்கள் உற்பத்திக்குத் தேவை யானவை. வறண்ட நிலையில் இலைகள் வாடி உதிர்ந்து விடும். காசித்தும்பைச் செடிகளைப் பாத்தி களிலோ, பாத்தி ஓரங்களிலோ, நடைபாதை ஓரங் களிலோ, அலங்காரத் தொட்டிகளிலோ வளர்க்கலாம். வே.சங்கரன் நூலோதி. J. M. Lowson & Birbal Sahni, Text Book of Botony, University Tutorial Press, London, 1958. காசினியின் நீள்வட்டம் சூரியன், புவி ஆகியவற்றின் இயக்கங்களின் தொடர் பைப் பற்றிக் காசினி என்பார் 1680 இல் ஆய்வு காசினியின் நீள்வட்டம் .B