பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசுக்கட்டியும்‌, கத்தக்‌ காம்பும்‌ 177

=0 நடத்தியபோது (x * + y') -2a' (x' 'y' ) + a'-ct : என்னும் சமன்பாட்டிற்கு ஒரு வளைவு கண்டுபிடித் தார். அது காசினியின் நீள்வட்டம் அல்லது வளைவு (Cassinian ellipse or curve or oval) எனக் குறிப்பிடப் பட்டது. ஒரு புள்ளிக்கும் இரு நிலைப்புள்ளிகளுக்கும் இடையே உள்ள தொலைவுகளின் பெருக்குத் தொகை c என்னும் மாறிலிக்குச் சமமாக இருக்கு மாறு புள்ளி நகருமானால், அப்புள்ளியின் இயக்கு பாதையைக் காசினியின் நீள்வட்டம் என்று வரை யறுக்கலாம். இவ்வளைவின் அமைப்பு c, a ஆகிய வற்றின் விகிதத்தைப் பொறுத்திருக்கும். ஆனால் வளைவு ஒரு கண்ணிகளை உடையதாக இருக்கும். c=2 ஆனால் இது பெர்னோலியின் லெம்னிஸ்கேட் வளைவாகும். நிலைப்புள்ளிகள் இரண்டும் நீள் வட்டத்தின் குவியங்களாகும். குவியங்களின் எண் ணிக்கை இரண்டைவிட மிகுதியாக இருக்கலாம். குவியங்களின் எண்ணிக்கையையும் நிலையையும் மாற்றி, பல வளைவுகள் வரையலாம். Sale காசுக்கட்டியும் கத்தக் காம்பும் பங்கஜம் கணேசன் தரமுள்ளது. இறக்குமதி மலேசியா செய்யப் இது இந்திய பர்மாக் காடுகளிலுள்ள மரம். இந்தப் பொருள் இலகுவான, சிங்கப்பூர் நாடுகளிலிருந்து படுகிறது. இதுஅன்கேரியா காபியர் (Encaria gabier) என்னும் மரத்திலிருந்து கிடைக்கிறது. பயன்படும் பகுதி. மரப்பட்டையிலிருந்து கிடைக் கும் நீர்மம், மரம் மற்றும் பூப் பகுதிகள். கோந்து முதலியன. உட்பொருள்கள் காசுக்கட்டி. டானிக் அமிலம் 35% காசுக்கட்டி அமிலம் அல்லது கட்டசின். சிவப்புக் காசுக்கட்டி, டானின், கோந்து, குயர் செட்டின் (quercetin) மரச்சாம்பல், காசுக்கட்டி டானின் அமிலம், கருஞ்சிவப்பு நிறமாக உள்ளது. காற்றில் இலேசாக ஆக்சிஜனுடன் கலந்து ஆக்சிஜ னேற்றம் அடையக்கூடியது. உள்மரத்திலிருந்து எடுக்கப்படும் சாயம் இலேசாக உடையக்கூடிய தன்மையுள்ள பழுப்பு நிறம் கொண்டதாகும். இதன் டானின் மற்றும் காசுக்கட்டி அமிலம் துவர்ப்புச் சுவை கொண்டது, மணமில்லாதது. நீரில் கரையக் கூடிய இதன் கருமை, பழுப்பு நிறம் கொண்டது. இது குடல் அசைவைத் தடுக்கும் வலிமையுள்ளது. சாயம் பயன்கள். வெற்றிலையுடன் காசுக்கட்டியைச் சுவைத்து உண்கின்றனர் மனித மற்றும் கால்நடை அ. க. 8 - 12 காசுக்கட்டியும், கத்தக் காம்பும் 177 மருத்துவத்தில் வயிற்றுப்போக்கைத் தடுக்கப் பயன் படுகிறது. கருவுற்றோருக்குப் பயன்படுகிறது. வாய்ப் புண், பல்வலி, தோல் நோய்களுக்கும், ரத்த வாந்தி யைக் கட்டுப்படுத்தவும், பால் இன நோய்க்கும், தொழு நோய்க்கும், முழங்கால் வலிக்கும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது. கத்தக் காம்பு சூட்டைத் தணிக்கும். செரிக்கும் ஆற்றலை மேம் படுத்தும். இருமல், வயிற்றுப் போக்குப் போன்ற நோய்க்கும் மருந்தாகிறது. இது குடல் சவ்வுகளைச் சுருங்கச்செய்யும் தாம்பூலப் பொருள்களோடு பயன் படுத்தப்படுகிறது. கத்தக் காம்பும் காசுக்கட்டியும் பண்டைக் காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் மருந்துப் பொருளாகும். கால்நடை மருத்துவத்திலும் இது பயன்படுத்தப்படுகிறது. இதைத் தயாரிப்பது காட்டுத் தொழிலில் முக்கியமானதாகும். இவற்றுள் கத்தக் காம்பை அக்கேஷியாகாட்ட என்னும் சுருங்காலி சுந்தரா மரவகையிலிருந்து வடநாட்டிலும், காசுக் கட்டியை அக்கேஷியாசுந்தரா என்னும் கருங்காலி மரவகையிலிருந்து தென்னிந்தியாவிலும் தயாரிக்கின் றனர். கத்தக்காம்பைவிடக் காசுக்கட்டி மிகுதியும் கருமை நிறமுடையது. கத்தக்காம்பை உடைத் தால் படிகப்பிளவாக ருப்பதைக் காணலாம். மஹா ராஷ்டிர மாநிலத்தில் அரிகா காட்டகு மரத்தின் கொட்டைப் பாக்கிலிருந்து ஒருவகைக் காசுக்கட்டி யைத் தயாரிக்கின்றனர். அதுவும் மேற்கூறிய காசுக் கட்டியைப்போல் பயன்படுத்தப்படுகிறது. குஜராத் மாநிலங்களில் தொழில் செய்து வரும் மக்கள் உள்ளனர். பரம்பரையாக ஓரிசா. இந்தத் காசுக்கட்டி தயாரிக்கும் முறை. 25-35 ஆண்டுகள் வளர்ந்த ஏறத்தாழ 1 அடி விட்டமுள்ள கருங்காலி மரத்தை வெட்டிப் பட்டையையும், அதை அடுத் துள்ள பகுதியையும் நீக்கிவிட்டு, எஞ்சியுள்ள சிவப்பு நிறமான வைரப்பகுதியை ஒரு சதுர அங்குல அகலமுள்ள சிறிய துண்டுகளாக்குவர். இவ்வைரத் துண்டுகளை மண்பாண்டங்களிலுள்ள நீரிலிட்டு ஏறத் தாழ 12 மணி நேரம் கொதிக்க வைக்கவேண்டும். சிவப்புநிறச்சாந்து இறங்கும். இந்தச் சாற்றைப் புதிய வைரத் துண்டுகளுடன் மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்து நீர் சுண்டியபிறகு அடர்சாற்றை மட்டும் பாண்டங்களில் ஊற்றிப் பாகு போலாகும் வரை காய்ச்சுவர். இதைப் பரப்பிய மரச்சட்டத்தில் ஊற்றிக் குளிரவைத்தால் கரும்பழுப்புநிறத் திண்மப் பொருளான காசுக்கட்டி கிடைக்கும். இதை வேண்டிய அளவு துண்டுகளாக்கி விற்பனைக்கு அனுப்புவர். கத்தக்காம்பு தயாரிப்பதற்கு மேற்கூறிய அடர் சாற்றைச் சில நாள்கள் அப்படியே வைத்தால் காட்டாசின் பிரிந்து விடும். பிறகு மண்பாண்டங்கள் மீது கூடைகளை வைத்து அவற்றில் குளிர்ந்த