பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 காசோவரி

178 காசோவரி அடர்சாற்றை ஊற்றுவர். டானின் மட்டும் கூடைக் ளிலிருந்து பானையில் போய்ச் சேரும். அந்த நிலையில் கூடையில் தங்கும் திண்மப் பொருள்தான் கத்தக்காம்பாகும். நுண்ணிய மணற்பரப்பில் குழிதோண்டி அதில் குளிர்ந்த அடர் சாற்றை ஊற்று வதும் உண்டு. மணல் பிசினை உறிஞ்சி விடும். கத்தக் காம்பு படிகப்பொருளாக எஞ்சி நிற்கும். இது பழைய முறையாகும். கருங்காலி மரத்தைப் பொடியாக்கி அப்பொடியை ஈயம்பூசிய செப்புப் பாத்திரத்தில் நீரிட்டுக் காய்ச்சிச் சாறு சூடாக இருக்கும்போது மஸ்லின் துணியால் வடிகட்டி அந்தத் தூளை மீண்டும் நாலைந்து முறை நீருடன் காய்ச்சி வடிகட்டுவர். அச்சாற்றை மெது வாகக் குளிரவிட்டு நீண்ட நாள் வைத்தால் கத்தக் காம்பு படிக வடிவில் தங்கும். இதைமஸ்லின் கொண்டு வடிகட்டி எடுத்துச் சீராக உள்ளபோதே வேண்டிய வடிவில் வார்த்துப் பின்னர் உலரவைப்பர். இதுவே மிகத்தூய கத்தக் காம்பாகும். சாற்றை மீண்டும் காய்ச்சி முன்போலக் கத்தக்காம்பு தயாரிப்பர். அதன் பின் எஞ்சும் சாற்றைக் காய்ச்சி, காசுக்கட்டி செய்வர். எந்திரங்களைப் பயன்படுத்தியும் இவற்றைத் தயாரிக் கின்றனர். அவ்வாறு தயாரிக்கும் எந்திரச்சாலையில் மிகப்பெரியது உத்தரப்பிரதேசத்தில் பரேலி நகரத்தி லுள்ளது. பயன். காசுக்கட்டி பட்டு, பருத்தி துணிகளுக்குச் சாயம் தோய்க்கும் தொழிலும், காவிக்கோ அச்சு முறையிலும், தோல் பதனிடும் தொழிலிலும், அஞ்சல் பை, கப்பல் பாய், மீன்பிடிக்கும் வலை இவற்றைப் பதனிடுவதிலும் பயன்படுகிறது. காசுக்கட்டி இந்தியா விலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. கத்தக்காம்பு ஏற்றுமதியாவதில்லை. கால்நடை மருத்துவம். கால்நடை மருத்துவத் திலும் காசுக்கட்டி பயன்படுகிறது. கால்நடைகளின் லயிற்றுப்போக்கை நீக்கவும், வாய்ப்புண்களைக்குணப் படுத்தவும் பிற மருந்துகளுடன் கலந்து கொடுக்கப் படும். இது மாவாகவும், டிஞ்சராகவும் பயன்படும். குதிரை, மாடுகளுக்குக் கழிச்சல் மற்றும் சீதபேதிக்கு வழக்கமாகக் கொடுக்கப்படுகிறது. இதனுடன் சாக்தூள், வெள்ளைமண் (kaolin) சுக்குப்பொடி ஆகியவற்றைக் கலந்து கொடுத்தால் கழிச்சல் குணமாகும். மிகு வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த அபின் டிஞ்சருடன் கலந்து கொடுத்தால் நலம். நன்றாகக் கொதிக்க வைத்து அரிசிக் கஞ்சியுடன் கலந்து கொடுத்தால் மிகு பயன் கிடைக்கும். காசுக் கட்டி குளிர்ந்த நீரில் பாதி கரையும். கொதிநீரில் முழுதும் கரைந்துவிடும். 90% சாராயத்தில் கரையும். மணம் இல்லை. பி. இராமன் காசோவரி இது பறக்கவியலாப் பறவைகளில் ஒன்று. வேகமாக ஓடும் இயல்புடையது. இதில் இருபதுக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. ஆஸ்திரேலியா, நியூகினியா. இந்தோ மலேயா தீவுகளின் அடர்ந்த காடுகள், புதர் நிறைந்த பகுதிகளில் வாழ்கின்றன. இதன் இறக்கைகள் மிகவும் சிறியவை. முதலிறகு. துணையிறகு என்று வேறுபடுத்த முடியாத அளவுக்கு இறகில் நடுநரம்புகள் ஒரேயளவாக உள்ளன தலையில் புடைப்பு இருக்கும். கால்களில் மூன்று விரல்கள் மட்டுமே உள்ளன. உள் விரல் நகமுடையது. தலை நீல வண்ணத்துடனும், கழுத்து, பளபளப்பான சிவப்பு நிறத்துடனும் இருக்கும். தன்னைப் பாது காத்துக் கொள்ள இது எதிரிகளைக் காலால் உதைத்துத் தள்ளி விட்டு விரைவாக ஓடிவிடும். கே.கே.அருணாசலம் காட்சி நிலை வரைபடம் - அல்லது ஒரு பொருளைக் குறிப்பிட்ட இடம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு திசையிலிருந்து பார்க்கும் போது பார்வைக்கு முழுமையாகத் தெரியக்கூடிய காட்சியை வரைபடமாக வரைந்தால் அதைக் காட்சிநிலை வரைபடம் (pictorial drawing) அல்லது