காட்சியலை மிகைப்பி 181
காட்சியலை மிகைப்பி 181 7099- படம் 5 படுத்துதல், தொடுபுள்ளிகளைக் குறித்தல் ஆகிய வற்றில் சரியான முறையில் கவனம் செலுத்தினால் பயனுள்ள காட்சிநிலை வரைபடங்களை மிகச் சிறப் பாக உருவாக்க முடியும் (படம் 5). காட்சியலை மிகைப்பி காட்சியலைகளின் பழைய பகுதிகளை களையும் சேர்த்து, மூன்று நிழலுடன் கூடிய உண்மையான காட்சியைத் தரும் விளக்கப்படங்கள், எந்திரங்கள் முதலியன கருவிகளை இணைக்கும் முறையைக் கற்பிக்க மிகவும் உதவியாக உள்ளன. விளக்கம் கூற வசதியானவை: எளிதாகப் புரியக் கூடியவை. இத்தகைய விளக்கப் படங்கள் பயன்படுத்தப்படுவதால் ஏனைய வகைப் படங்கள் மூலம் கருவிகளின் இணைக்கத் தேவையான நேரத்தைவிட அல்லது நான்கு மடங்கு குறைவான நேரமே ஆகும். புகைப்படங்கள் பயன்படுத்தினால் எத்தகைய காட்சிகள் கிடைக்குமோ, அதேபோன்ற காட்சிகள் இவ்வகையான நிழலுடன் கூடிய உண்மையான காட்சியைத் தரும் விளக்கப் படங்கள் மூலமே கிடைக்கும். ஏ.எஸ்.எஸ். சேகர் நூலோதி, Frederick's Merritt, Standard Hand- book for Civil Engineers, Third Edition, McGraw- Hill Book Company, New York, 1983. திறவை அதிகப்படுத்த உதவும் ஒரு மிகைப்பி (amplifier) ஆகும். காணும் காட்சியை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குத் தாலைக்காட்சி மூலம் அனுப்பலாம். புகைப்படக் குழாய் (camera tube), காணும் காட்சியின் விவரங் களை மின் செய்திகளாக மாற்றுகிறது. இச் செய்தி யைக் காட்சிக் குறிப்பலைகள் (video signals) என லாம். இவற்றுடன் சில கட்டுப்பாட்டுக் குறிப்பலை அவற்றைக் கூட்டுக் காட்சிக் குறிப்பலைகள் (composite video signals) என் கின்றனர். இவை பெரும அளவாக 4 X 10 Hz அதிர்வு எண்களைக் கொண்டு இருக்கும். இவை மிகைப்பியின் உதவியால் மிகைப்படுத்தப்பட்டு வெளி உலகிற்கு அனுப்பப்படுகின்றன. தொலைக்காட்சி வாங்கிகள் இக்குறிப்பலைகளை வாங்குகின்றன. அவை மிகைப்படுத்தப்பட்டுத் தொலைக்காட்சித் திரையில் காட்டப்படுகின்றன. இவ்வாறு மிகைப் படுத்த, காட்சியலை மிகைப்பிகள் (video ampli- fiers) பயன்படுகின்றன.