பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 காட்டன்‌ விளைவு

188 காட்டன் விளைவு இது மிகவும் இன்றியமையாதது. குறியீடுகளாகச் சில நிறங்களையே பயன்படுத்த முடியும் எனும் உண்மையை இது உருவாக்குகிறது. இதன் மூலம் சிவப்பு, மஞ்சள், பச்சை ஒளிகள் பயன்படுத்தப்படும். குறியீட்டு முறையோடு நீலம், இளம்ஊதா, வெள்ளை ஆகிய நிறங்களைப் பயன்படுத்த முடியாது. வெளி ஃபோவியல் நிறப்பார்வை (extra foveal colour vision). கண்ணின் ஓரப்பகுதி ஏற்படுத்தும் நிறப்பார்வை வெளிஃபோவியல் நிறப்பார்வை எனப் படும். பார்வை அளவீடு செய்வதில் உள்ள கடினத் தால் இது பற்றிய ஆய்வுகள் பெருமளவு செய்யப் படவில்லை. ஆனாலும் இப்பகுதிப் பார்வையில் ஒளிர் திறன்,நிற இணைப்புத் திறன் ஆகியவை நிலை யானவை அல்ல என்றும், கண்ணின் தக அமைவு: தூண்டலின் ஒளிச்செறிவு, பார்வைக் காலம், சூழல் ஆகியவை பொறுத்து மாறும் தன்மையுள்ளது என்றும் கண்டுள்ளனர். வெ.ஜோசப் நூவோதி:- C. Thomas Olivo, Thomas P. Olivo, Fundamentals of Applied Physics, Delmar Publi- shers, Albany, New York, 1978. காட்டன் விளைவு ஓர் உட்கவர் நிறமாலைப் பட்டையின் அண்மையில் ஒளியியல் சுழற்சிப் பிரிகை வரைகோடு (optical rotatory dispersion curve) அல்லது வட்ட இரு நிறமை வரை கோடு (circular dichroism curve) அல்லது இரண்டுமே தற்சிறப்பியல்பு அலை நீளத் தைச் சார்ந்திருப்பது காட்டன் விளைவு (cotton effect) எனப்படும். அலை ஒளி ஒரு தள முனைவாக்கம் கொண்ட ஒளி முனைவாக்கத் தளத்தைச் சுழற்றும் தன்மை கொண்ட ஓர் ஊடகத்தைக் கடந்து செல்லும்போது இரண்டு முக்கியமான விளைவுகள் தோன்றுகின்றன. முதலாவதாகத் தள முனைவாக்கம் கொண்ட நீள்வட்ட முனைவாக்கம் கொண்டதாக மாற்றப் படுகிறது. இரண்டாவதாக நீள் வட்டத்தின் பேரச்சு முனைவாக்கத்தின் தொடக்கத் திசையிலிருந்து ஒரு குறிப்பிட்ட கோணமுள்ளதாகத் திருப்பப்படுகிறது. இந்த இரண்டு விளைவுகளுமே அலை நீளத்தைப் பொறுத்தவை. முதலாம் விளைவு வட்ட இருநிறமை (circular dichroism) எனப்படுகிறது. அது அலை நீளத்தை அல்லது அதிர்வெண்ணைச் சார்ந்திருப் பதைக் காட்டுகிற வரைகோடு, வட்ட இரு நிறமை வரைகோடு எனப்படுகிறது. இரண்டாம் விளைவு ஒளியியல் சுழற்சி (optical rotation) எனப்படும். அதை அலை நீளத்தின் சார்பெண்ணாகக் காட்டுகிற வரை கோடு, ஒளியியல் சுழற்சிப் பிரிகை கோடு எனப்படும். படம் 1 இல் CD. அ ORD நீள்வட்டத்தன்மை சுழற்சி அல்லது >> CD படம் 1 WORD do வரை முதல் வரைகோடு CD எனவும், இரண்டாம் வரை கோடு ORD எனவும் குறிக்கப்பட்டுள்ளன. உட்கவர் நிறமாலைப் பட்டைகளின் அண்மையில் இவ்விரு வரைகோடுகளும் தற்சிறப்பியல்பான வடிவங்களுடன் அமைகின்றன. இதுவே காட்டன் வினைவு எனப் படுகிறது. இது நேரினமாகவோ எதிரினமாகவோ இருக்கலாம். ஒவ்வோர் உட்கவர் செயல்முறையுட னும் இணைந்ததாக ஒரு காட்டன் விளைவு உள்ளது. எனவே ஒரு பகுதி CD வரைகோடு அல்லது பகுதி ORD வரைகோடு ஒவ்வொரு குறிப்பிட்ட உட்கவர் நிறமாலைப் பட்டை அல்லது உட்கவர்தல் செயல் முறையுடனும் இணைந்ததாக இருக்கும். கட பாகைகள் அளவீடுகள். பொதுவாக ஆய்வு முடிவுகள் எண் வகை (specific) மூலக்கூறு வகை (molar) என்னும் இரு அலகு கணங்களில் ஏதாவது ஒன்றில் குறிப் பிடப்படுகின்றன. ஓளித்தளச் சுழற்றுந் தன்மையுள்ள ஓர் ஊடகத்தின் செறிவு ஒரு கிராம்/மில்லி லிட்டர் என்னும் அளவில் இருக்கும்போது அதில் டெசி மீட்டர் தொலைவைக் டக்கும் ஒளியின் முனை வாக்கத் தளம் சுழற்றப்படுகிற கோணப் தனிச் சுழற்சி (specific rotation) எண் எனப்படும். அதை (a) என், எனும் எழுத்தால் குறிக்கலாம். நீள் வட்ட எண் (specific ellipticity) என்பது அதே ஊடகத்திற்கு அதே பாதை நீளத்திற்கு நீள்வட்டத் தன்மை (ellipticity) ஆகும். அதை 8 என்னும் எழுத்தால் குறிப்பிடலாம். a,b என்னும் பேரச்சும், சிற்றச்சும் கொண்ட ஒரு நீள்வட்டத்திற்கு (a-b)/a என்பது நீள்வட்ட எண் எனப்படும். [9] = [a] M/100 என்பது மூலக்கூறு சுழற்சி molar rotation) எனவும் [8] =0M/100 என்பது மூலக்கூறின் நீள்வட்டத்தன்மை எனவும்வரையறுக்கப் படுகின்றன. இதில் M என்பது மூலக்கூறின் எடையைக்