காட்டன் விளைவு 189
குறிக்கும். வெவ்வேறு சேர்மங்களுக்கிடையில் ஒப் பிட்டுப் பார்க்கும்போது மூலக்கூறு அளவுகள் பெரு மளவில் பயன்படுத்தப்படுகின்றன. அவை மூலக்கூறு அடிப்படையில் நேரடியான ஒப்பீடுகளுக்கு உதவு வதே இதற்குக் காரணம். பகுதி CD வரை கோட்டிற்கு அடியிலுள்ள பரப்புக்கும் CDஇன் பெருமத்திற்கான அலை நீளத் திற்கும் இடையிலான தகவு உட்கவர்தல் செயல் முறையின் சுழற்சிச் செறிவுக்கான அளவு ஆகும். மேலும் ஏறத்தாழ ஒரே நிறமாலைப் பகுதியில் ஏறத்தாழ ஒரே அரை அகலம் (half width) கொண்டவையாக அமைந்த பட்டைகளுக்கு, பகுதி ORD வரை கோட்டின் முகட்டிலிருந்து அகட்டிற்கு (peak to trough) நேரும் சுழற்சி, அதற்கு ஒப்பான பகுதி CD வரை கோட்டிற்கு அடியிலுள்ள, அலை நீளத் திருத்தம் செய்யப்பட்ட பரப்புக்கு ஏறத்தாழ நேர் விகிதத்தில் உள்ளது (படம் 3). அதாவது சார்பு சுழற்சிச் செறிவுகளை அவற்றுக்குத் தொடர்புள்ள பகுதி ORD வரைகோடுகளிலிருந்தோ. பகுதி CD வரைகோடுகளிலிருந்தோ அளவிட முடியும். ஓர் உட்கவர்தல் செயல் முறையின் சுழற்சிச் செறி வுக்கு வசதியான அளவறுதி அளவீடாகச் சுழற்சி வலிமை (rotational strength) அமைகிறது.i மாற்றத்தின் சுழற்சி வலிமை Ri அதன் பகுதி மூலக்கூறு CD வரைகோடு [0i(A)] எனில் Rs ≈ 6.96 × 10-43 (0(x)] A dz. சுழற்சி முகடு அகடு நீள்வட்டத் தன்மை முகட்டிலிருந்து அகட்டுக்குச் சுழற்சி அ படம் 2 அரை அகலம் ஆ 10-08-10-19 காட்டன் விளைவு 189 மூலக்கூறின் கட்டமைப்பு நடைமுறையில் உண்மை யாகக் காணப்படுகிற சுழற்சி வலிமை ஏறத்தாழ cgs க்கும் கீழான மதிப்புகள் வரை அமைந்திருக்கும். எண் மதிப்பில் காணப்படும் இத் தகைய வேறுபாட்டை முப்பரிமாண முப்பரிமாண வேதியியல் (stercochemistry) தத்துவங்களின் அடிப்படையில் விளக்கலாம். இதன் தொடர்பாக ஒளித்தளச்சுழற்றுந் தன்மையுள்ள நிறமூட்டும் வேதிப் பொருள்களை (chromophores) இரண்டு வரம்பிடு வகைகளின் அடிப் படையில் பிரிப்பது பயனுள்ளதாக இருக்கும். இவை சமச்சீர்மை இல்லாதவையாகவே இருக்க வேண்டி யுள்ளன. இவற்றை இயல்பாகவே சமச்சீர்மை இல்லா தவை எனவும், இயல்பாகச் சமச்சீர்மை பெற்றிருப் பினும் சமச்சீர்மை இல்லாத வகையில் குலைக்கப் பட்டவை எனவும் இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒரு சமச்சீர்மை உள்ள நிறமூட்டு வேதிப் பொருளில் இயல்பான வடிவியல் அமைப்பு,போது மான அளவுக்கு உயர்ந்த சமச்சீர்மை பெற்றிருக்கும். அதன் காரணமாக, தனிமைப்படுத்தப்பட்ட நிற மூட்டுந் தொகுதியை அதன் ஓர் ஆடிப் பிம்பத் தொகுதியின் மேற்பொருத்தலாம். காட்டாக C=0 என்னும் தொகுதியைக் குறிப்பிடலாம். இத்தகைய நிறமூட்டுந் தொகுதியின் நிலை மாற்றப் பொருள்கள், சமச்சீர்மையற்ற மூலக் கூறின் சூழலில் அமைந்து விடும்போது மட்டுமே ஒளித் தளத்தைச் சுழற்றும் தன்மை பெற்று ஒரு காட்டன் விளைவை வெளிக்காட்ட முடியும். இவ்வாறு H,C=0 என்னும் சமச்சீர்மையுள்ள ஃபார்மால்டி ஹைடில், கார்போனில் நிலை மாற்றப் பொருள்கள் ஒளித் தளத்தைச் சுழற்றும் தன்மை கொண்டிருப்ப தில்லை. ஆனால், கீட்டோஸ்டிராய்டுகளில் மூலக் கூறின் புறத்தே உள்ள நிறமூட்டு மூலக்கூறின் பகுதி, c=0 குழுவின் சமச்சீர்மைத் தளங்களைப் பொறுத்துச் சமச்சீர்மையற்ற வகையில் அமைந்து விடுகிறது. இங்கு, கார்போனில் தொகுதியின் நிலை மாற்றப் பொருள்கள் காட்டன் விளைவை வெளிக் காட்டுகின்றன. இத்தகைய நிகழ்வுகளில் சுழற்சி வலிமையின் குறியிட்ட எண் மதிப்பு, நிறமூட்டு மூலக் கூறுகளுக்குப் புறத்தேயுள்ள உலைவு (perturbing) செய்யும் அணுக்களின் வேதித்தன்மை, இயல்பாகவே சமச்சீர்மையுள்ள நிறமூட்டும் பகுதியைப் பொறுத்து அவற்றின் வடிவியல் அமைப்பு ஆகிய இரண்டையுமே பொறுத்து அமைகிறது. ஒரு வகையில் நிறமூட்டு வேதிப்பொருள், மூலக்கூறின் நிறமூட்டும் பகுதிக்குப் புறத்தேயுள்ள பகுதியில் உள்ள வேதிச் சமச்சீர்மை யின்மைகளைக் கண்டுபிடிக்க உதவும் மூலக்கூறின் துருவியாகச் (probe) செயல்படுகிறது எனலாம். மேலே விவரிக்கப்பட்ட ஒளித் தளச் சுழற்று விளைவு ஒரு மூலக்கூறில் ஒரு சமச்சீர்மையற்ற