பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டாமணக்கு (தாவரவியல்‌) 191

வியல் பெயர்கள் ஜட்ரோபா (J. gossypifolia) ஜட்ரோபா ஜட்ரோபா குர்காஸ் என்பன. காஸ்ஸிப்பிபோலியா கிளாண்டுலிபெரா. இது பெரிய செடியாகவோ சிறு மரத்தின் அள வாகவோ சாதாரணமாகக் காணப்படும். பொதுவாக இது பிரேசில் நாட்டைச் சேர்ந்ததாகக் கருதப்படு கிறது. இதன் தண்டு தடியாக, உருண்டையாகச் சாறு நிரம்பியதாக இருக்கும். இலைகள் உருவில் பருத்தி லைகளை ஒத்திருக்கும். தனி இலைகள் ஆனாலும் கைவிரல் போன்று பிளவுபட்டிருக்கும். தளிர்கள் சிவந்தவையாகவும், முதிர்ந்த இலைகள் பச்சையா கவும் இருக்கும். மாற்று இலையடுக்கம் கொண்டவை. இலையடிச் செதில்கள், கிளைத்த சுரப்பிகளுடன் கூடிய இழைகளாக இருக்கும். இலைக்காம்புகள் 11 செ.மீ. நீளமுள்ளவை. இலைப்பரப்பு 3-7 செ.மீ. அகலமுள்ளது. 3-5 பிளவுகள் இருக்கும். இலைக் காம்புகளிலும், இலை விளிம்புகளிலும் சுரப்பிகளுள்ள காட்டாமணக்கு (தாவரவியல்) 19/ இழைகள் நிறைந்திருக்கும். மலர்கள் சிவந்தவை யாகவோ, மஞ்சள் நிறமாகவோ கிளைத்த சைம் (cyme) வகையைச் சேர்ந்த மஞ்சரிகளில் இருக்கும். தண்டுகளின் நுனியில் காணப்படும் ஒரே மஞ்சரியில் இருபால் மலர்களும் கலந்து காணப்படும். மஞ்சரி யின் நடுமலர் பெரும்பாலும் பெண் மலராகவே இருக்கும். மலர்கள் சமச்சீரானவை, அமைப்புடையவை, இதழ்களால் ஐந்தடுக்கு ஹைபோகைனஸ் வகையைச் சார்ந்தவை. புல்லி வட்டம் ஐந்து ஆனது. இதழ்கள் அல்லி வட்ட இதழ்களை ஒத்திருக் கும். ஈட்டி வடிவமானவை: ணையாதவை; அடுக்கு இதழ் அமைப்புக் கொண்டவை. சில சமயங்களில் பெண் மலர்களில் புல்லி வட்டம் இருப்பதில்லை. அல்லி வட்டம் ஐந்து இணைந்த அல்லது தனி இதழ்க ளால் ஆனது. அடுக்கு இதழ் அமைப்புக் கொண்டது. சிவப்பு அல்லது மஞ்சள் நிறமுடையது. மலர்களில் தடித்த தட்டு (disc) வட்ட வடிவில் ஆண்மலர் பெண்மலர் கனி செடியின் பகுதி காட்டாமணக்கு சூலகம்