192 காட்டிகள்
192 காட்டிகள் அல்லது ஐந்து சுரப்பிகளாதக் காணப்படும். இவை அல்லி வட்ட இதழ்களுக்கு உட்புறம் அமைந்திருக்கும் மகரந்தங்கள் எட்டு, இவை ரே சுற்றையாக இணைந்து ஆண் மலரின் மையப் பகுதியில் காணப் படும். சில சமயங்களில் மகரந்தங்கள் எட்டிற்கு மேலும் இருக்கும். வெளிப்புறத்திலுள்ள மகரந்தங்கள் இணையாமல் தனித்து இருக்கும். மகரந்தப் பைகள் நேராகவும் இணையாகவும் இருக்கும். நீளமாகவோ நீள் உருண்டை வடிவினவாகவோ இருக்கும். சூற்பை மேல் மட்டமானது. பெரும்பாலும் மூன்று சூவிலைகளாலோ இரண்டு அல்லது நான்கு சூலிலைக ளாலோ ஆனது. சூவிலைகள் ணைந்தவை. சூலறைகள் சூலிலை களுக்குச் சமமான எண்ணிக்கையில் உள்ளன. சூற்பை, சுரப்பிக களாலான தடித்த தட்டின் மீ பொருத்தப்பட்டுள்ளது. சூலகத் தண்டு மூன்று, நுனியில் இரண்டாகப் பிரிந்துள்ளது. அடிப்பகுதியில் இணையாதது.ஒவ்வொரு சூல் அறையிலும் தனித்த ஒற்றைச் சூல் இருக்கும். சூல்கள் தொங்கு ஒட்டு முறையில் அமையப் பெற்றவை. காய்கள் சூலிலை களை ஒத்த பகுதிகளாகப் பிரியும் வெடிகனி(capsule) வனீகயைச் சார்ந்தவை. காய்ச்சுவர் கெட்டியானது. விதைகள் முட்டை வடிவமானவை அல்லது நீள மானவை. விதை சூழ்தசை சதைப்பற்றுள்ளது; விதை யிலைகள் தட்டையானவை. ஆமணக்கு விதையைப் போன்று இருக்கும் இவை பஞ்சு போன்று சிறுகட்டி (caruncle) உடையவை. விதைகள் நஞ்சுள்ளவை. இவற்றின் நஞ்சுக்கு எலுமிச்சைச் சாறு மாற்று மருந்தாகும். ஜ.காஸிபிஃபோலியா. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காணப்படுகிறது. சாலை ஓரங் களிலும், தரிசு சு நிலங்களிலும் வளர்கிறது. கிளாண்டுலிஃபெரா பெரும்பாலும் கருமண் பூமியில் வளரும், ஐ. குர்காஸ் அனைத்து மாநிலங்களிலும் காணப்படுகிறது. வேலியோரங்களில் வளர்க்கப்படு கிறது. சில இடங்களில் ஏறக்குறைய ஒரு மரமாக வளர்கிறது. காம்பிள் என்னும் தாவர இயல் வல்லுநர் இதையே காட்டாமணக்கு என்பார். இதன் மலர்கள் இளம் பச்சை வண்ணமாயிருக்கும். இதன் மரப் பட்டை பச்சை கலந்த வெள்ளையாக இருக்கும். பயன்கள். ஐ. காஸிபிபோலியா கர்ட்டாமணக்குச் செடி பொருளாதாரச் சிறப்பு வாய்ந்ததாகும். இலைகளை வேகவைத்துக் காயங்களுக்குப் போட லாம். இவற்றை மசித்து, ஊறல்,படை நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். மரப்பட்டையின் சாறு பெண்களுக்கு மாதவிடான ய உண்டாக்க வல்லது ஜ.கிளாண்டுளிஃபெரா செடியின் இலைச்சாறு துணி களுக்குச் சாயமாகப் பயனாகிறது. ஒரு கிலோ காய்ந்த இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாயத்தைக் கொண்டு ஏறக்குறைய 100 மீட்டர் நீளமுள்ள . துணிகளுக்குச் சாயமேற்றலாம். இதன் விதைகளி லிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் வாதத்திற்கு மருந் தாகவும், விளக்கெரிக்கவும் பயன்படுகிறது. வெடிப்பதற்கு முன்பே விதைகளை எடுக்க வேண்டும். தனி ஜ. குர்காஸ் செடியின் விதைகள் மலமிளக்கும் இயல்பு வாய்ந்தவை. வாந்தியையும் தூண்டுபவை. விதையுறைகளை நீக்கி விட்டு இவற்றை உட்கொள்ள லாம். இந்த எண்ணெய், சாராயத்தில் கரையும் தன்மையுடையது. இந்த எண்ணெயை இரும்பு ஆக்சைடுடன் கலந்து பெட்டிகளுக்கு நெய்வனமாகப் பயன்படுத்தலாம். இலைச்சாறு பெண்களுக்குப் பால் சுரப்பைத் தூண்டுகிறது. ஆடுமாடுகள் தின்னாமை யால் இதை வேலிச் செடியாக வளர்க்கலாம். வே.சங்கரன் Coon. Col. Heber Drury, The useful plants of India. International Book distributors. Dehra Dun, 1985, காட்டிகள் பலவகைத் தாவரங்கள் அனைத்து இடங்களிலும் வளராமல் சில குறிப்பிட்ட வாழிடங்களிலேயே வளர் கின்றன. காட்டாக, நாணல் வகைச்செடிகள் ஆறுகள், நீரோடைகளின் கரைகளிலும், கள்ளி வகைச்செடிகள் வறண்ட நிலப்பகுதிகளிலும் வளர்கின்றன. தாவரங் களுக்கும் அவற்றின் வாழிடங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளமையால் தாவரங்களின் வாழிடங் களைக் கொண்டு அவ்விடத்தைப் பற்றிய விவரங் களைத் தெரிந்துகொள்ள உதவும் தாவரங்கள் குறி காட்டும் செடிகள் அல்லது காட்டிகள் (indicators) எனப்படுகின்றன. தனிப்பட்ட செடியைக் கொண்டு அதன் வாழிடம் பற்றிய முடிவுகளைக் கணக்கிடாமல் வாழும் தாவரத் தொகுதி அனைத்தையும் அல்லது அங்கு வாழும் செடிகளில் பெரும்பான்மையான சிற்றி னத்தையும் கொண்டே முடிவு செய்ய வேண்டும். நிலத்திலிருந்து நீரையும் கனிமங்களையும் எடுத் துக் கொள்ளும் தாவரங்களைக் கொண்டு அவை வாழிடத்திலுள்ள நிலத்தடி நீரின் அளவு, மட்டம். கனிமங்கள் இவற்றை நுட்பமாக அறிய முடியும். சான்றாக, அகேசியா கிளாண்டுலிஃபெரா, அகேசியா கிரெக்கை ஆகியவை நிலத்தடி நீரூற்றுகளைக் குறிக் கும் தாவரங்களாகும். இச்செடிகளின் வாழிடங் களைக் கொண்டே ஆஃப்ரிக்கா, தென் மேற்கு அமெரிக்க நாடுகளின் வறண்ட பகுதியில் குடியேறி யோர் நீரூற்றுகளைக் கண்டுபிடித்தனர் என்று கூறப் படுகிறது. நிலத்தடி நீர் மட்டம் ஆழத்தில் உள்ளது என்பதைப் புரோசோபிஸ் ஸினரேரியா வாழிடத்தி