பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டிகள்‌ 193

லிருந்தும், நீர் மிகுதியான சதுப்புகள் உள்ளன என்பதை டைஃபா, ஜங்கஸ், காரேக்ஸ் போன்ற செடிகள் வளர்வதைக் கொண்டும் உணரலாம். அவ் வாறே சப்பாத்திக் கள்ளி, கினோபோடியம். எவால் வுலஸ் அலிஸினாய்டெஸ் முதலிய செடிகள் மிகுதி யாக வளர்ந்திருந்தால் அப்பகுதி மிகையான மேய்ச்ச லுக்கு (over grazing) உட்படுத்தப்பட்டதை அறிய லாம். ஓர் இடத்தின் இயற்கையான தாவரத் தொகுப் பைக் கொண்டு அந்த நிலத்தை எவ்வாறு பயன் படுத்தலாம் என்று முடிவு செய்யலாம். காட்டாக, அமெரிக்காவில் முற்காலத்தில் பரந்த புல்வெளிகளாக இருந்த பகுதிகளில்தான் தற்போது கோதுமை, ஓட்ஸ், பார்லி. சோளம் போன்ற புல் வகைத் தானியப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. அவ்வாறே முன்னர், காடுகள் மிகுந்திருந்த பகுதிகளில் தற் போது ஆப்பிள் பீச், பேரி முதலிய பழமரங்கள் பபிரிடப்படுகின்றன. புல்வெளிகளில் மாடு குதிரை முதலியனவும், சிறு செடிகள் உள்ள இடங்களில் செம்மறி ஆடுகளும், புதர்ச் செடிகள் மிகுதியான பகுதிகளில் வெள்ளாடுகளும் வளர்க்கப்படுகின்றன. பயிர் வளர்ச்சிக்கு ஏறக்குறைய 64 தனிமங்கள் தேவைப்படுகின்றன என்றாலும் இவற்றில் சிறப்பாக 16 தனிமங்கள் இன்றியமையாதவை. அவை நைட் ரஜன், பொட்டாசியம், பாஸ்ஃபரஸ், கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், கால்சியம், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம், மாங்கனீஸ், இரும்பு, மாலிப் டினம், கோபால்ட், குளோரின், போரான் ஆகியன. பயிர்களின் வகைகளுக்கேற்ப தனிமங்களின் எண்ணிக்கையும் அளவும் மாறுபடும். மாவுச் சத்து களைச் சேர்க்கும் பயிர்கள் பெருமளவு பாஸ்ஃ பரஸையும் தீவனப் பயிர்கள் நைட்ரஜனையும், நைட்ரஜனை நிலைப்படுத்தும் பயிர்கள் பெருமளவு மாலிப்டினம், கோபால்ட் கனிமங்களையும் எடுத்துக் கொள்கின்றன. எனவே ஒவ்வொரு தனிமமும் ஒரு குறிப்பிட்ட பயிர் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. இதைக் குறிகாட்டும் செடிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். நிலமண்ணில் எந்தத் தனிமம் எந்த அளவில் பற்றாக்குறையாக உள்ளது என்பதை மண் ஆய்வு இல்லாமலேயே காட்டிகள் மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம். இப்பயிர்களில் அந்தந்தத் தனிமங் களுக்கு ஏற்றவாறு இலையின் நிறம், பயிரின் உயரம், விளைச்சல் ஆகியவை மாறுபடுகின்றன. சான்றாக நைட்ரஜன் பற்றாக்குறையை மக்காச்சோளப் பயிர் மூலமாகவும், பொட்டாசியம், பாஸ்ஃபரஸ் பற்றாக் குறையை முறையே எலுமிச்சை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் மூலமாகவும் அறியலாம். நுண் ணூட்டச்சத்துக்களான, சுண்ணாம்பு, இரும்பு, மாங்க காட்டிகள் 193 னீஸ், மாலிப்டினம், போரான் முதலியவை நில மண்ணில் போதிய அளவு உள்ளனவா என்பதை முறையே குதிரைமசால், சோளம். ஆப்பிள், பூக் கோஸ், பீட்ருட் ஆகிய பயிர்கள் மூலம் அறியலாம். இவ்வாறே குளோரின், ஃபுளோரின், புரோமின், அயோடின், தனிமங்கள் நில மண்ணில் இருப்பதை முறையே அவகேடோ, திராட்சை, வெங்காயம், போன்ற பயிர்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். பண்ணை நீர் மேலாண்மைக்கும், நீர்ப்பாசனத் திற்கும் காட்டிகள் பெரிதும் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பெரும் பண்ணைகளின் ஒரு பகுதியில் பயிரிடும் சூரியகாந்தியின் வாடல் நிலை யைக் கொண்டு ஏனைய பயிர்களின் நீர்த்தேவையை அறியலாம். இங்கு, சூரியகாந்தி பயிர் காட்டியாகப் பயன்படுகிறது. அதுபோலவே பருத்தி பயிரிடப்படும் தோட்டக்கால் பண்ணைகளின் ஒரு பகுதியில் பயிர் செய்யும் தக்காளிச் செடிகள், காட்டியாகப் பயன் பட்டு வாடல் நிலையால் நில நீர்ப் பற்றாக்குறையை வெளிப்படுத்துகின்றன. நீர்ப்பாசனத்தையும் ஒழுங்கு படுத்த உதவுகின்றன. மேலும் பருத்தி, நிலக்கடலை. மிளகாய் போன்ற பயிர்களைச் சுற்றிலும் பயிர் செய்யப்படும் ஆமணக்குச் செடிகளில் சல்லடை போன்று அரிக்கப்பட்டு வெண்மையாகத் தோன்றும் இலைகள் அவற்றில் கூட்டம் கூட்டமாக வாழும் புழுக்களையும் பூச்சிகளால் ஏற்படும் அழிவையும் சுட்டிப் பயிர்ப் பாதுகாப்பு நிலையை வெளிப்படுத்தும் காட்டிகளாகப் பயன்படுகின்றன. அமெரிக்கா, கனடா, காங்கோ முதலிய நாடு களில் கனிம வளத்தைக் கண்டுகொள்ளப் பலவகைக் காட்டிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆர்மேரியா ஹாலெரை, ஹட்சின்ஸியா அல்பைனா ஆகிய தாவரங்கள் வளரும் நிலமண்ணில் துத்தநாகம் மிகுதி யாக இருப்பதையும், பாலிகார்ப்பியா ஸ்பைரோஸ் டைலிஸ் என்னும் செடி வகை தாமிரம் இருப்பதை யும், ஈக்குசிடம் ஆர்வன்ஸி செடிகள் தங்கம் இருப் பதையும் காட்டுகின்றன. மேலும் எரியக்கோனியம் ஓவேலிஃபோலியம், வல்லோஸியா காண்டிடா முதலிய தாவரங்கள் முறையே வெள்ளி, வைரம் இருப்பதையும் கண்டறிய உதவும். அமெரிக்காவில் யுரேனியம், தோரியம் மிகுதியாக உள்ள படுகை நிலங்களில் வளரும் ஸ்டான்லியா பின்னேட்டா தாவரப் பூக்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களிலிருந்து கதிரியக்கத் தனிமங்கள் மிகுதியாக இருப்பதை அறிய லாம். மேலும் சில குறிகாட்டும் செடிகள் அல்லது காட்டிகள் மூலமாக நிலத்தின் தன்மையை அறிய லாம். காசுரினா, ஏாவா, சிட்ரல்லஸ் கோபோ ஸின்திஸ் ஆகியவை மணற்பாங்கான நிலப்பண்பை யும், ரூமெக்ஸ், ரோடோடென்ரான் முதலியன நிலத்தின் அமிலத்தன்மையையும், தேக்கு, இக்சோரா LSC