194 காட்டுக் கடுகு
194 காட்டுக் கடுகு பார்விப்ளோரா ஆகியவை சுண்ணாம்புப்பாறை உள்ள நிலங்களையும், ஸ்வோடா, ஸாலிக்கோர்னியா, அட்ரிப்ளெக்ஸ் ஆகியவை உப்பு மிகுதியான கட லோரப் பகுதிகளையும் குறிக்கின்றன. ராஜஸ்தானில் வளரும் எருக்கு (Calatropis procera) ஜிப்சம் படுகை களைச் சுட்டுகிறது. இராபின்சன் தாமஸ் நூலோதி. G.S.Puri, Indian forest ecology. Oxford Book Company, New Delhi, 1960; Weaver and Clements, Plant ecology, McGraw-Hill Book Company, London, 1938. காட்டுக் கடுகு இது கப்பாரிடேசி குடும்பத்தைச் சேர்ந்த செடி யாகும். இதன் தாவரவியல் பெயர் கிளியோம் விஸ் கோஸா லின். கிளியோம் என்பது கப்பாரிடேசி குடும்பத்தைச் சேர்ந்த நாற்பது பேரினங்களில் ஒன் றாகும். இப்பேரினத்தில் பன்னிரண்டு சிற்றினங்கள் உள்ளன. இது தைவேளைக் கீரைச் செடியைப் போலிருந்தாலும் அதனின்று வேறுபட்டுள்ளது. இது மஞ்சள், கடுகு, நாய்க்கடுகு. நாய்வேளை என்றும் குறிப்பிடப்படும். இச்செடி தொடுவதற்குப் பிசுபிசுப்பு மிக்கதாக இருக்கும். செடியின் அனைத்துப் பகுதி களிலும் சுரப்பிகள் கொண்ட தூவிகள் மிகுந்திருப் பதே இப்பிசுபிசுப்பிற்குக் காரணமாகும். இச்செடி பொதுவாக அனைத்து இடங்களிலும் காணப்படும். ஒரு பருவச் சிறு செடியாக 60 செ. மீ. வரை வளரக் கூடியது. நேராகவும், இங்கு மங்கும் கிளைத்ததாகவும் இருக்கும். தண்டு உருண் டையாகவும், சுரப்பிகளையுடைய மென்தூவிகள் நிறைந்ததாகவும் இருக்கும். இலைகள் மாற்று இலை யடுக்கம் உள்ளவை. 3-5 சிற்றிலைகள் கை வடிவக் கூட்டிலைகள் ஆகும். சிற்றிலைகள் தலைகீழ் முட்டை வடிவம் உள்ளவை. நடுவில் இருக்கும் சிற்றிலை, செடி மலர்