196 காட்டுக் கிராம்பு
196 காட்டுக் கிராம்பு இருநூறுக்கும் குறைவாகவே இருந்தது. எதியோப்பிய சோமாலிய இனத்தைத் தானசில் பள்ளத் தாக்கில் வைத்துப் பேணுகிறது. அரசு காட்டுக் கழுதை இந்தியாவில், குஜராத் மாநிலத் தில் உள்ள கட்ச் வளைகுடாப் பகுதியில் மட்டுமே உள்ளது. இப்பகுதி சதுப்பு நிலக்காடுகளால் சூழப் பெற்றது, மேற்குப் பருவக் காற்றால் மழையும், சுடல் நீரும் இந்நிலங்களில் பாயும். காட்டுக் கழுதை மிகவும் வலிமையானது. நீரின்றி நீண்ட நாள் வாழும். நாட்டுக் கழுதையைவிட 30 செ.மீ. உயரமே மிகுதியானது. முதுகுப் புறம் உள்ள கறுப்பு நிறக்கோடு மூக்கிலிருந்து வால் வரை செல் கிறது. அடிப்பகுதி வெண்மையானது. இந்தியக் காட் டுக் கழுதையின் மூக்கெலும்பு சற்றே தூக்கியவாறு இருக்கும். இவை கூட்டம் கூட்டமாகத் திரியும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். இனப்பெருக்கக் காலத்தில் பெண் கழுதை தனிமையாகி விடும். வலிமையற்ற ஆண் கழுதை களை விரட்டிவிடும். வலிய ஆண் கழுதையே பெண் கழுதையுடன் உடலுறவு கொள்கிறது. 11 மாதக் கருக்காலத்திற்குப் பின் ஜூலை செப்டம்பரில் குட்டி ஈனும். ரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் குட்டி ஈனும். இரவில் மேயத் தொடங்கும் இது உதயத்திற்கு முன்னால் படுத்துவிடும். இவை வாழும் இடங்களில் கால்நடைகளும் மேய்கின்றன. அதனால் மேய்ச்சல் புல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அப்போது அவை விளைநிலங்களை அழிக்கின்றன. சிறு மாற்றத் தைக் கூடப் புரிந்து கொண்டு மணிக்கு 55-60 கி.மீ. வேகத்தில் ஓடி ஒளிந்து கொள்ளும் தன்மையன. தற்போது காட்டுக் கழுதையினம் விரைவாக அழிந்து வருகிறது. 1952க்கு முன்பே இந்தியாவில் அரிதாகி வரும் 13 வனவிலங்கு வகைகளில் ஒன்றாகக் காட்டுக் சேர்க்கப்பட்டது. கழுதை 1969 ஆம் ஆண்டில் 862 கழுதைகள் இருந்தன என்று கணக் கிடப்பட்டது து. கட்ச் ல்லை. இந்தியக் காட்டுக் கழுதைக்கு எதிரிகள் இல்லை. வளைகுடாவில் ஓநாய்கள் கூ முன்பு குதிரைகளுடன் இனக்கலப்பு செய்து கோவேறு கழுதைகள் தோற்றுவிக்கப்பட்டன. இன்று இப்பழக் கம் நின்று விட்டது. இந்திய பாகிஸ்தான் போரின் போது காட்டுக் கழுதைகள் இறந்து விட்டன. இவற்றின் அழிவிற்கு முக்கிய காரணம் நோய் களேயாகும். கால்நடைகள் இவற்றின் வாழிடங்களில் நுழைந்து புல்லை மேயும்போது நோய்களையும் பரப்பிவிடுகின்றன. நீடித்த வறட்சி நீர்நிலைகளை வற்றச்செய்து புல்லைக் கருக்கி விடுகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தால். கழுதைகளின் மேய்ச்சல் காடுகள் விளை நிலங்களாகவும், குடியமைப்புகளாக வும் மாற்றப்படுகின்றன. இதனால் மேய்ச்சல் நிலம் குறைந்து புல்லுக்காசு அவை நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது. விளைநிலங்களில் வீசப்படும் பூச்சி கொல்லிகளும் அவற்றின் இறப்புக்குக் காரண மாகின்றன. காட்டுக் கிராம்பு க.மு.நடராஜன் இது கிராம்புப் பூண்டு என்றும் குறிப்பிடப்படும். இதன் தாவரப்பெயர் லுட்விஜியா ஆக்டோவால்விஸ் (Ludwigia octovalvis) என்பதாகும். ஜசியேயே சுஃப்ருட்டிக்கோசா என்பது இதன் இணை தாவர வியல் பெயர் ஆகும். ஆஃப்ரிக்கா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் இச்செடியைக் காண லாம். நெல் வயலில் காணப்படும் இது வெப்பமண்டல நாடுகளில் பிற பயிர்களிலும் களைச் செடியாக வளர்கிறது. இச்சிற்றினம் வெப்ப மிகு பகுதியிலே பெரிதும் காணப்படுகிறது. செடி. இச்செடி நேராகவும் கிளைத்தும் 2.4 மீட்டர் உயரம் வளரும் தன்மையது. லைகளுக்குக் காம்பில்லை. இலை முட்டை வடிவிலும் கம்பளி போன்றும் இருக்கும். பூக்கள் தனித்தனியாக இலைக் கக்கங்களில் உண்டாகின்றன. இவை நான்கு அங்கங் கள் கொண்ட பூக்கள். நான்கு புல்லிகள். இலை 8-15 மி.மீ. அளவுடையது. நான்கு அல்லிகள். இவை 1-2 செ.மீ. நீளமானவை. கனி உருளை போன்ற வெடிகனி ஆகும். இதன் மீது 8 வரம்புகள் இருக்கும். குளோவர் ஏறக்குறைய 3-5 நீளமுள்ள கனிகள் போன்ற தோற்றத்தில் சவ்வு போன்று இருக்கும். விதைகள் நுண்ணியவையாக உள்ளவை;முட்டை வடிவானவை; பளபளப்பானவை. லூட்விஜியா ஆக்டோலால்லிஸ் வகை லிகுஸ்ட்ரி ஃபோலியே என்னும் ஒரு பருவச் செடியில் விதை ஈரமான உறக்கமில்லை. விதைகள் சூழ்நிலையில் உற்பத்தியான உடனேயே முளைக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. இளஞ்செடிகள் சிவப்புநிறத் தண் டைக் கொண்டிருக்கும். தொடக்கத்தில் மிக மெது வாக வளரும். விதை முளைத்து மேலே வந்த 7-8 வாரங்களில் பூக்கள் தோன்றுகின்றன. இச்செடியின் வாழ்நாள் பல மாதங்கள் ஆகும். சாகுபடி நிலத்தில் களைச்செடியாகையால் பூக்கள் தோன்று முன்பே கைகளால் இதைப் பறித்து அழிக்கலாம். களைக் கொல்லிகளான 2-4D அல்லது MCPA போன்ற வற்றைப் பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம். பொருளாதாரப் பயன்கள். காட்டுக் கிராம்புச்செடி மருத்துவத்திற்கு உதவுகிறது. இச்செடி சிறுநீரைப் பெருக்கும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். இச்