198 காட்டுச் சூழ்நிலையியல்
198 காட்டுச் சூழ்நிலையியல் யான குறியீடுகளாகப் பயன்பட்டு வந்துள்ளன. ஆண்டு மழை பொழிவின் அளவு, பரவல் முறை முதலிய கால நிலைக் காரணிகளும் அமைவிடத் தன்மையுடன் தொடர்பு உடையன. வாழிடத்தின் தாக்கம். வித்திலிருந்து நாற்றாகி. வளர்ந்து கிளை. இலை. பூ, கனிசு களுடன் பெரிய மரமாவது, வாழிடக் காரணிகளால் பாதிப்பு ஏற் படுத்துகிறது. ஏற்புடைய வாழிடச் சூழலில் வளரும் மரங்கள் மிகு எண்ணிக்கையில் ஆற்றல் மிகுந்த விதைகளை உண்டாக்குகின்றன. ஆனால் இவற்றுள் 1% க்குக் குறைந்த விதைகளே மீண்டும் மரங்களாக வளருகின்றன. பூச்சி, பூசணம், வளைவாழ் விலங்குகள், காலநிலை ஆகியவற்றால் பல விதைகள் அழிந்துவிடு கின்றன. தகுந்த ஈரம், வெப்பம் ஆகிய சூழ்நிலை அமைந்த இடங்களில் விழும் விதைகளே முளைக்கும் ஆற்றலைப் பெறுகின்றன. மண்ணில் உள்ள பூசணங்கள், மண்ணில் சூரிய ஒளியால் ஏற்படும் வெப்பம், விலங்குகள், வறட்சி ஆகியவற்றால் முளைக்கும் நாற்றுகளில் பெரும்பான்மையானவை மடிந்துவிடுகின்றன. மட்கு நிறைந்த நிழற் பாங்கான. ஈரமான, வடிகால் வசதி பெற்ற மண்ணிலேயே புதிய காடுகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. இதற்குக் காடுகளின் மீட்சி எனப்பெயர். முன்னரே உயிருள்ள தாவரங்கள் நிலத்தருகில் நெருங்கி வாழும் இடங்களிலும், தாவர வேர்ப் பகுதிகளிலும் காடுகளின் மீட்சி நடைபெறுவது இல்லை. காட்டின் வாழிடம், பலபிரிவுடைய தாவர இனநாற்றுகளின் வளர்ச்சி வீதத்தைக் கட்டுப் படுத்துகிறது. நாற்றுகளிடையே ஏற்படும் போட்டிக ளால் பல்லாயிரக்கணக்கான் நாற்றுகளில் பல மடிந்து ஹெக்ட்டேருக்குச் சில நூறு நாற்றுகளே வளர்ந்து பெரிய மரங்களாகின்றன. பைன், ஓக் போன்ற ஒரு சில மரங்களே பலவகைச் சூழ்நிலைக் காரணிகளைக் கொண்ட, பல்வேறு வகையான அமைவிடங்களிலும் வாழும் நிலையைப் பெறுகின்றன. ஆனால் வால்நட், சைகாமோர் போன்ற ஒரு சில தாவரங்கள் குறிப்பிட்ட சூழ்நிலைக் காரணிகள் அமைந்த. குறிப்பிட்ட வாழிடங்களிலேயே வாழும் நிலையை அடை கின்றன. இதனால் முன்னர்க் குறிப்பிட்ட தாவரங் கள் பல வாழிடங்களிலும், பின்னர்க் குறிப்பிட்ட தாவரங்கள் ஒரு சில வாழிடங்களிலுமே கான ணப்படு கின்றன. ய மர இனங்களின் காட்டு பலவகையான சேர்க்கைகள் பல வாழிடங்களிலும் உள்ளன. சான்றாக வடகிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் குளிர்ச் சியான. உயரமான ஈரமான, அமில நிலங்களில் ஸ்புரூஸ் - ஃபர் வகை மரங்கள் குறிப்பிடும்படியாக உள்ளன. தாழ்ந்த நில மண்வகைகளில் கெட்டியான கட்டைகளுடைய மரங்களும், மணற்பாங்கான அல்லது பாறைகள் உள்ள வறண்ட வாழிடங்களில் பைன் மரங்களும் மிகு விஞ்சு தன்மை பெற்றுள்ளன. வெதுவெதுப்பான, வறண்ட சூழலில் ஓக் மரங்களும் ளிர்ச்சியான மாப்பிள் ஈரமான பகுதிகளில் பீச், கு போன்ற மரங்களும் விஞ்சு தன்மை பெற்று வளர்கின்றன. மேற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு உயர்ந்த மலைப்பகுதிகளில் ஸ்புரூஸ், ஃபர் மரங்களும், படிப்படியாக உயரம் குறைந்த பகுதிகளில் பைன், ஓக் மரங்களும் வளர்ந்துள்ளன. வாழிடங்களில் காட்டின் பாதிப்பு. காடுகள் வளர்ச்சி பெற்று நிலைத்த பிறகு வாழிடங்களும் பெருமளவில் மாறுதல் அடைகின்றன. மரங்களற்ற திறந்த வெளிகளைவிட மரங்கள் அடர்ந்த காடுகளின் பகல் வெப்பநிலை குறைந்து, இரவு வெப்பநிலை மிகுதியாக இருக்கும். இதைப்போலவே திறந்தவெளியைவிட வளர்ச்சிப் பருவத்தில் உள்ள மரங்கள் அடர்ந்த காடுகளின் காற்று வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும். ஈரம் மிகுந்த மேகக்கூட்டம் காட்டு மரங்களால் மழை பொழிவு நிலையடையும். மூடுபனியோ, சிறு தூறலோ இருக்கும் பகுதிகளில் மரங்களால் மழை பொழிவு உண்டாகிறது. வளிமண்டலத்தில் உள்ள ஈரம் சிறிய துளிகளாகக் கிளை. லைகளில் படிய, அந்நீர்த்துளிகள் குவிய, அவை லைகளிலிருந்து மூடுபனிச் சொட்டுகளாக (fog drop) வடிகின்றன. நெருங்கி வளரும் மரங்களின் இலைகள் சூழ்ந்துள்ளதால் தரையில் குறைந்த அளவு மழை பொழிவும், பனிப்பொழிவும் விழும். காடுகளில் மரங்கள் அடர்ந்த தரையில் பல வகைத் தாவரங்களின் கிளை, லை முதலிய வற்றின் சிதைவடையாத மட்கு அதிகமான சூழலில் சில வகையான தாவர, விலங்குகள் வாழ்கின்றன. ஊட்டப்பொருள் நிறைந்த மேல் மண்ணை ஓடுநீர் அரித்துக் கொண்டு கீழ் மண்பகுதியில் சேர்க்கிறது. மரங்களின் வேர்கள் இப்பொருள்களின் ஒரு பகுதியை உறிஞ்சிக் கிளைகளையும், இலைகளையும் தோற்றுவிக்கின்றன. கிளைகளும், இலைகளும் முதிர்ச்சி அடைந்து மீண்டும் நிலத்தை அடைகின்றன. குளிர்ந்த ஈரமான நிலையில் ஸ்புரூஸ், ஃபர் மரங்கள் அடர்ந்த காடுகள் உள்ளன. நிலத்தின் ஊட்டச்சத்து ஓடு நீரால் அரிக்கப்பட்டு, பிறகு வெண்மையான நில மாகக் காட்சி அளிக்கும். குளிர் மண்டல வெதுவெதுப் காடுகளில் அரித்த மண்ணிற்குக்கீழ் உள்ள பகுதி குறைந்த அளவில் உள்ளது. வெப்பமண்டல மழைக்காடுகளில் நனைந்த, வெதுவெதுப்பான நிலை யில் அலுமினியம், இரும்பு போன்ற தாதுக்கள் தவிர எஞ்சிய தாதுக்கள் யாவும் அரிக்கப்படுகின்றன. இங்கு மண்ணில் உள்ள ஊட்டப் பொருள்களை வேர்கள் உறிஞ்சி, கிளை உண்டாக்க, அவை இலைகளை மீண்டும் மண்ணிற்கே வந்து சேர்வதால் மண்வளம் ஒரே சீராக உள்ளது. வேளாண்மை முதலிய காரணங் களுக்காகக் காடுகளை அழிக்கும்போது ஓடும் பான