காட்டுச் சூழல் அமைப்பு 199
நீரோடைகளால் அரிப்பு மிகுதியாக ஏற்பட்டுச் சில மாதங்களில் மண் வளமற்றுவிடுகிறது. காட்டு நீரியல் சுழற்சி. காடுகளற்ற வெற்று நிலத்தை ஒப்பிடும்போது காடுகளில் உள்ள ஓடை களின் போக்கு. புயலின்போது குறைவாகவும், புயலுக்குப்பிறகு மிகுதியாகவும் உள்ளது. மழை நீரைச் சுமந்து வரும் மேகக் கூட்டங்கள் காடு களின் உதவியால் தான் மழையாகப் பொழிகின்றன. எனவே, வேளாண் தேவைக்கும். தொழிற்சாலை களுக்கும் நகர மக்களுக்கும் வேண்டிய இன்றியமை யாத் தேவையான மழைநீரைக் காடுகளே கொடுக் கின்றன. ஏனைய தாவரக் கூட்டங்களைவிடக் காடு களில் காணப்படும் தாவரங்கள் அடர்த்தியும் உயர மும் கொண்டுள்ளமையால் இவற்றிலிருந்து நீராவிப் போக்கால் மிகு நீர் இழப்பு ஏற்பட்டு, அது வளி மண்டலத்துடன் கலந்துவிடுகிறது. காடுகளில் உள்ள பெரிய மரங்களின் வேர்கள் நிலத்தில் ஆழ்ந்து வளரு வதால் நிலத்திலிருந்து பெருமளவு நீரைப் பயன் படுத்துகின்றன. ஆனால் பிற வாழ்விடங்களில் வளரும் புற்களும் ஏனைய சிறு செடிகளும் நிலத்தின் நீரைப் பெருமளவில் உறிஞ்சுவதில்லை; அத்தாவரங் களின் நீராவிப் போக்கால் மிகு அளவு நீரும் வீணா வதில்லை. புல்வெளி, மரங்களற்ற மண் இவற்றை ஒப்பிடும் போது காட்டு நிலம் நெருக்கமான மண்துகள்கள் இல்லாமல் காணப்படும்; இதனால், கிடைக்கும் நீரை விரைவாக உறிஞ்சி, நிலத்தில் தக்க வைத்துக் கொள் கிறது. மனிதரின் நடவடிக்கை அல்லது மேயும் விளங் குகளால் காட்டு நிலம் கெட்டியாகிறது; இவ்விதம் நிலம் கெட்டியாகாமல் இருந்தால் கிடைக்கும் நீர் எல்லாவற்றையும் உறிஞ்சிக் கொள்ளும்.காடுகளற்ற சூழலில் ஓடு நீரால் மண் அரிப்பு மிகுதியாக ஏற்பட்டுத் திடீரென்று வெள்ளம் பாயும் அபாயம் ஏற்படும். மரங்களை முழுதும் வெட்டுவதால் மண் அரிப்பும் வெள்ளச் சேதமும் ஏற்படும். தற்போது உள்ள காட்டு மேலாண்மையில், மரங்களின் கிளைகளை மட்டும் வெட்டி, காட்டின் நெருக்கத்தைக் குறைத்து அதனால் நிலத்தின் நீர் உறிஞ்சும் அளவையும் குறைக்கின்றனர். நிலநீர் மட்டத்தில் சென்று நீர் உறிஞ்சும் வேர்களைக் கொண்ட மரங்களை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. காடுகளின் வழிமுறை வளர்ச்சி, அனைத்து உயிரி னங்களுக்கும் பிறப்பு வளர்ப்பு, முதிர்ச்சி, இறப்பு என்னும் தொடர்ச்சியான வழிமுறை வளர்ச்சிப் பருவங்கள் உள்ளமை போலவே காடுகளுக்கும் உண்டு. வளர்ச்சிப் பருவத்தில் காடுகள் தாம் வாழும் இடத் தைப் பெரிதும் மாற்றி அமைக்கின்றன. இதனால் முன்பே வாழும் மரங்களைவிட வளர் பருவத்தில் உண்டாகிய புதிய மரங்கள் வளர வாய்ப்பு ஏற்படும். நெருப்பு, புயல், சூறாவளி போன்ற இடையூறுகள் ல்லையானால் புதிய தாவரச் சேர்க்கைகள் பல காட்டுச் சூழல் அமைப்பு 199 காட்டில் தொடர்ந்து வளரும். சான்றாக, வடகிழக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டில் செர்ரி, பெர்ச்,ஆஸ் பென் போன்ற மரங்கள் முன்னோடிச் சேர்க்கை களாக உள்ளன. காலப்போக்கில் இவை ஓக், மாப்பிள் ஆஷ் போன்ற பிற இனங்களால் நிரப்பப்படுகின்றன. இறுதியாக, இம்மரங்கள் நிலையானலையாகி உச்ச நிலைத் தாவரக் கூட்டங்கள் (climax vegetation) ஆகின்றன. இவை இடையூறுகள் ஏற்படினும் மாறுதல்களின்றி நிலைத்து நிற்கின்றன. ஹெம்லக், மேப்பிள், பீச் ஆகிய மரங்கள் உச்சநிலைத் தாவரக் கூட்டங்களாகி அவற்றின் கீழ் பல தாவரங்கள் வளர வும் வழிசெய்கின்றன. தற்காலச் சூழலில் பெரும் பாலான உச்சநிலைத் தாவரக் கூட்டங்கள் அடங்கிய காடுகள் நெருப்பு. விலங்குகள், மனிதரின் செயல் களால் பெரிதும் மாற்றப்படுகின்றன. இதனால் தாவரச்செல்வமிக்க வெப்பமண்டல மழைக்காடுகள், அளவிலும் எண்ணிக்கையிலும் அருகி வருகின்றன. . காட்டுச்சூழ்தொகுப்பு. இது ஓர் இயற்கைச் சூழ்தொகுப்பாகும். இதில் வெப்ப மண்டல மழைக் காடுகள், இலையுதிர் காடுகள், குளிர்மண்டலக் காடுகள் போன்ற பல சூழ்தொகுப்புகள் உள்ளன. சான்றாக, வெப்ப மண்டல மழைக்காட்டுச் சூழ் தொகுப்பில் மிகு எண்ணிக்கையில் தாவரங்கள் அடர்ந்து, பல படிநிலைகளில் காணப்படுகின்றன. பெரிய மரங்களுக்குக் கீழே உயரம் குறைந்த மரங்கள், புதர்ச்செடிகள், செடிகள், பூவாத் தாவரங்கள் ஆகிய பல தாவர வகை பல வரிசைகளில் காணப்படும். இவற்றுனூடே ஊர்வன,நடப்பன, பறப்பன ஆகிய விலங்குகளும் வாழ்கின்றன. உயிரிக் காரணிகளான இவற்றுடன் பல தனிமங்கள் அடங்கிய மண்ணும் உள்ளது. இதில் பல நுண்ணுயிரிகள் உள்ளன. காட்டுச் சூழ்தொகுப்பில் தாவரங்கள்,தயாரிப் போர், தாவரங்களை உண்டு வாழும் விலங்குகள், முதல்நிலை நுகர்வோர், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நுகர்வோர் ; மண்ணில் பல நுண்ணுயிரிகள் அடங்கிய சிதைப்போர் அடங்குவர். மேலும் உயிரி லிக் காரணிகளாக மண்ணின் மட்கில் உள்ள கார்பன், நைட்ரஜன், பாஸ்ஃபரஸ், சோடியம், பொட்டாசியம் போன்ற பல தனிமங்களும் அடங்கும். உயிர்க் காரணிகளுக்கும் உயிரிலிக் காரணிகளுக்கும் ஒத்திசை வான தொடர்ச்சி இருந்து கொண்டே உள்ளது. எனவே, காட்டுச் சூழ் தொகுப்பு என்பது ஒரு சம நிலையான, பலகாரணிகள் ஒருங்கிணைந்த ஒத்திசை வான நிறைவான ஓர் அமைப்பு ஆகும். கே.ஆர். பாலச்சந்திரகணேசன் காட்டுச் சூழல் அமைப்பு காடு என்பது சூழலியல் தொகுப்பில் மரங்கள் நிறைந்த ஒரு பகுதியாகும். மேலும் இது சூரியன்.