காட்டுத் தாவரவியல் 201
(இந்தியா, மலேசியா), போர்னியோ,நியுகினியா தீவுகள், வடமேற்கு ஆஸ்திரேலியா ஆகிய பல பகுதி களில் உள்ளன. புவியிலேயே வெவ்வேறு வகை உயிரினத் தொகுதி பெருமளவில் காணப்படும் வாழ்விடம் இதுவே ஆகும். உயர் வெப்பமும், காற்றில் உயர் ஈரப்பதமும் இப்பகுதிகளில் நிலை யாகக் காணப்படும். இங்கு ஆண்டு முழுதும் மழை பெய்யும். இக்காடுகளில் பலவகைத் தாவரங்கள் செழித்து வளர்கின்றன. ஒரு சதுர கி.மீ பரப்பில் ஏறத்தாழ 200 வகைத் தாவரங்களைக் காணலாம். மரங்களின் உயரம் 25-35 மீட்டர் வரை இருக்கும். மரங்களின் அடிப்பகுதி, செடி கொடிகளால் சூழப் பட்டுள்ளது. மரங்கள். எப்போதும் உள்ளன. இலை தழைகள் மட்குவதால் இப்பகுதி மண் பசுமையாக வளமுடையதாக இருந்தாலும். மரங்கள் வழியாக ஒளி புக முடியாததாலும், காற்றின் ஈரம் மிகுதியாக இருப்பதாலும் தரைப்பகுதி ஈரத்தன்மை மிகுந்தோ சதுப்பு நிலமாகவோ காணப்படும். இச்சூழ் நிலையில் பலவகையான விலங்குகள் காணப்படு கின்றன. குறிப்பாகப் புழு, அட்டை, நத்தை, மரவட்டை, பூரான், தேள், பூச்சி வகை, மரத் தவளை, பல்லி, பச்சோந்தி, பலவகைப் பறவை. பறக்கும் அணில், குரங்கு, காட்டுப்பூனை, சிறுத்தை போன்ற பல விலங்குகளைக் காணலாம். மிகுவெப்பப் பருவக் காடுகள். இக்காடுகள், தென் கிழக்கு ஆசியா, மத்திய தென் அமெரிக்கா, வடக்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஃப்பிரிக்கா. பசிபிக் கடலிலுள்ள தீவுகள் போன்ற இடங்களில் காணப் படுகின்றன. இங்கு பொதுவாகத் தட்பவெப்பமும், மழை அளவும் மிகுதியாக இருந்தாலும்,இவை பருவகாலங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. இக்காடு களைப் பருவகாலக் காடுகள் என்றும் குறிக்கலாம். மரங்கள் ஏறத்தாழ 20.40 மீட்டர் உயரமுடையவை. இலைகள் பருவ மாறுபாட்டிற்கேற்ப நன்கு செழித்துக் காணப்படும். இலைகள் உதிர்ந்த பருவங்களில், மரங்களின் அடிப்பகுதியில் சிறுசெடிகொடித் தாவரங்கள் வளர்ந்து புதர்களாகக் காணப்படும். இங்குள்ள மரங்களில் தேக்கு குறிப்பிடத்தக்கது. புதர் மரங்களில் மூங்கில் குறிப்பிடத்தக்கது. . வை மாறா குறை வெப்ப மழைக்காடுகள். இங்கு பெருமளவு மழையும், வெப்பமும் காணப்பட்டாலும், இரண்டிற்கும் இடையேயுள்ள அளவு வேறுபாடு குறைவாகவே இருக்கும். இங்குள்ள மரங்களின் லைகள் அகன்று பெரியனவாகவும் பசுமை மலும் தோன்றும். இங்கு மகாகனி, ஓக், பாம்ஸ், லிம்போ, புனி முதலிய மரங்கள் உள்ளன. மேலும் செடிகள், கொடிகள் நிறைந்து காணப்படும். ஆனால் வறண்ட காலத்தில் இலைகள் உதிர்ந்து விடுகின்றன. விலங்குகளைப் பொறுத்தவரை அருகில் உள்ள நில நடுக்கோட்டுப் பகுதியில் காணப் படுபவையே இங்கும் காணப்படுகின்றன. காட்டுத் தாவரவியல் 201 காடுகள் இவ்வாறு பொதுவாகப் பிரிக்கப்பட் டாலும், இரு பிரிவுகள் சேரும் இடைச்சூழ்நிலை அமைப்பில் (ecotone) இருவகை நிலப்பகுதிகளின் மரங்களும், விலங்குகளும் காணப்படுகின்றன. இதை விளிம்பு விளைவு அல்லது விளிம்புகளின் நெறிமுறை என்பர். காடுகளில் தாவரங்களின் தெரகுதிகள் பொது வாக ஒன்றை அடுத்து மற்றொன்று இடம் பெற்றுத் தொடரும் தாவர வரிசைத் தொகுதியாகக் காணப் படும். ஒவ்வொரு வகைக் காடுகளிலும், குறிப்பிட்ட வகைத் தாவரங்கள் பிறவகைத் தாவரங்களைவிட மிகு எண்ணிக்கையில் இருந்து உயர்நிலை அல்லது உச்ச நிலைத் தொகுதியாகக் காணப்படும்.காட்டாக, ஊசி இலைக்காடுகளில் பைன் மரங்கள் உச்சநிலைத் தாவரமாக அமைந்துள்ளன. -அ. சங்கரன் நூலோதி.G.L. Clark, Elements of Ecology, Joha Wiley & Sons, Inc, New York, 1964. காட்டுத் தாவரவியல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காடுகளே மிகுதியாகக் காணப்பட்டன. காலப்போக்கில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் வீடுகள், விளைநிலங்கள், தொழிற் சாலைகள், அணைக்கட்டுகள், விளையாட்டு மைதா னங்கள், சாலைகள் எனப் பலவற்றை ஏற்படுத்தக் காடுகள் பயன்பட்டமையால் அவற்றின் பரப்பளவு குறைந்தது. இன்று இந்தியாவில் 74. 6 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் மட்டுமே காடுகள் உள்ளன. இது மொத்த நிலப்பரப்பில் 22.7% ஆகும். தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 16% காடுகள் உள்ளன. இந்திய வளக் கொள்கைப்படி மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியில் காடுகளை ஏற்படுத்த முயற்சி செய்யப்படுகிறது. நாட்டு நலம் பேணுவதில் காடுகள் பெரும் பங்கேற்கின்றன. மேகங்களைக் குளிர்வித்து, மழையைப் பொழிவிக்க ஓங்கி வளரும் காடுகள் தேவை. அடர்ந்த . காடுகளில் உள்ள மரம், செடி கொடிகள் மட்கி, மழை நீரை உறிஞ்சுகின்றன. தரையில் உள்ள தாவரங்களின் வேர்த்துளைகளின் மூலமாக நிலத்துள் சென்ற நீர், சுனைகளின் மூலமாக வெளியே வரும். மழை இல்லாக் காலங்களில் நீர் கிடைக்க இக்காடுகளே காரணம் ஆகின்றன. மழைத் துளிகள் வேகமாக நிலத்தில் விழாமல் பாதுகாத்து, மழை நீரோட்ட வேகத்தைக் குறைத்து, காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி மண் அரிப்பைத் தடுத்துப் புவியின் மேல்மண் அடித்துச் செல்லப் படாமல் காத்து நிற்கும் காடுகளே மண் வளத்தைப் பேணுகின்றன. உலகிலுள்ள பல் பாலைவனங்கள் வளமான