202 காட்டுத் தாவரவியல்
202 காட்டுத் தாவரவியல் மேலும் தூ வெப்பமான பரவக்கூடிய தீமையைத் தடுப்பதற்குக் காடுகளே உதவுகின்றன. குளிரான, புயல், சூறாவளி போன்றவற்றைத் தடுத்துக் காடுகள் தென்றலாக அளிக்கின்றன. தொழிற்சாலைக ளால் ஏற்படும் வான்மண்டல மாசுகளைப் போக்கி, மரங்கள் ய்மையான காற்றாகக் காடுகளிலுள்ள தருகின்றன. மரங்கள் காடுகளில் வாழும் பறவை, வனவிலங்கு போன்ற உயிரினங்களுக்கும், மண்ணில் அளித்து வாழும் நுண்ணுயிரிகளுக்கும் ஊட்டம் உதவுகின்றன. இத்தகைய பயன் மிகுந்த காடுகளின் முக்கியத்துவத்தாலேயே அவை பச்சைத்தங்கம் எனப் படுகின்றன. பொதுவாகக் காடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் அறிவியல் காட்டியல் என்றும், காடுகளின் பராமரிப்பு, காட்டு மேலாண்மை என்றும், புதிதாகக் காடுகளை உண்டாக்குவது காடு வளர்ப்பு என்றும், காட்டில் உள்ள மரங்களைப் பேணிக் காப்பது மரம் வளர்ப்பு என்றும், காட்டில் உள்ள உயிரினங்களுக்கும் அவற்றின் சூழ்நிலைக்காரணிகளுக்கும் இடையே உள்ள உறவுமுறையைப் பற்றித் தெரிந்து கொள்வது காட்டுச் சூழ்நிலையியல் என்றும், காட்டில் தாவரங்கள் அவற்றின் பயன், காட்டில் கிடைக்கும் பொருளாதார, மருத்துவப் பயன் மிக்க தாவரங் களைப் பற்றிப் படிப்பது காட்டுத் தாவரவியல் என் றும், காட்டில் உள்ள வன விலங்குகளைப் பாது காப்பது வனவிலங்குப் பாதுகாட்பு என்றும் பெயர் பெறும். உள்ள காட்டுப் பகுதியில் உள்ள விலங்குகளைப் பாது காக்கும் பொருட்டு வனவிலங்குப் புகலிடங்கள் அமைக்கப்படுகின்றன. மிக அண்மைக் காலத்தில் காட்டில் உள்ள நகர்ப்புற மக்களின் மரங்களின் தேவையை முன்னிட்டு அவர்கள் பல இன மரங்களை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். இது சமூகக்காடுகள் என்றும், இவ்விதக் காடு வளர்ப்பு, சமூகக் காட்டி யல் என்றும் கூறப்படும். காடுகளிலிருந்து மனிதனுக்குப் பல பொருள்கள் கிடைக்கின்றன. இத்தகைய பொருள்களைப் பற்றிப் படிப்பது காட்டுத் தாவரவியலின் முதன்மை நோக்க மாகும். மனிதன் தன் தேவை அனைத்திற்கும் தன்னைச் சுற்றி உள்ள மரம், செடி, கொடிகளி லிருந்தே உணவு, உறையுள், உடை ஆகியவற்றைப் பெற்று வந்தான். வரலாற்றுக் காலத்தின் தொடக் கத்தில் வாழ்ந்த மனிதன், தான் வாழ மரங்களா வான வீட்டைக் கட்டினான். அவற்றை உண்டாக்க மரக்கருவிகளையே பயன்படுத்தினான். தனது உண விற்காகக் காடுகளில் விலங்கினங்களை திரிந்த முதலிய நாகரிகம் வேட்டையாட மரத்தாலான வில், அம்பு வற்றையே பயன்படுத்தினான். அவன் வளர வளர, மரங்களிலிருந்து மேலும் மேலும் பல நீள் பொருள்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டான். அவற்றுள் மிகவும் மரக்கட்டை முக்கியமானது ஆகும். மரக்கட்டைகள் அந்நாளில் வாழ்ந்த மக்க ளுக்கு எளிதில் கிடைத்தன. அன்று கிடைத்த கருவி களால் அவன் தனக்கு வேண்டியவற்றை எளிதாகச் செய்து கொண்டான். கட்டை வலிமையானது; கட்டையில் உடையது; கெட்டியானது. மின்சாரமும், வெப்பமும் எளிதில் கடத்தப்படுவ தில்லை, ஈரத்தால் துருப்பிடிப்பதோ படிகங்கள் ஆவதோ இல்லை. மரக்கட்டைகளை எளிதில். விரும்பியவாறு பயன்படுத்தலாம். எனவே மனித நாகரிசுத்தில் மரம் மனிதனோடு ஒன்றி வளர்ந்தது. தன்மை என் மரக்கட்டை என்பது தாவரங்களில் இரண்டாம் நிலைக் குறுக்கு வளர்ச்சியால் ஏற்பட்டது. இதில் விதைமூடா வகைத் தாவரங்களிலிருந்து (gymnos- permae) கிடைத்த மரங்கள் மென்கட்டைகள் றும், இருவித்திலைத் தாவரங்களில் இருந்து கிடைத் தவை வன் கட்டைகள் என்றும் கூறப்படும். கட்டை யில் சைலம், ஃபுளோயம் என்னும் இரு சிக்கலான திசுக்கள் இருந்த போதும் சைலம் திசுவே மிகு அளவில் காணப்படும். சைலத்தில் டிராக்கீடுகள், வெஸல்கள், சைலம் நார்கள், சைலம் பாரன்கைமா முதலியன அடங்கும். மரக்கட்டைகளை இனம் கண்டு கொள்வதற்கு முன் பின் கட்டை வளர்ச்சி வளையங்கள், வைரக் கட்டை, சோற்றுக் கட்டை, உருவம் முதலியன உதவும் கட்டைகளின் வகைப்பாட்டிற்குத் துளைகள் உதவும். விதைமூடாத்தாவரக் கட்டைகளில் வெஸல்கள் ல்லாமையால் அவை துளையற்ற கட்டைகள் எனப்படும். இருவித்திலைத் தாவரக் கட்டைகள் துளைக் கட்டைகள் எனப்படும். காஸ் டனியா, பெடுலா போன்ற மரங்களில் பெரிய வெஸல்கள் ஒவ்வொரு பருவத்தின் தொடக்கத்தி லும் இருக்கும். பிறகு சிறிய வெஸல்கள் உண்டாகி, பல வளையமாகக் காணப்படுவதால் இவை வளையத் துளைக் கட்டைகள் எனப்படும். குளிர் மண்டல மரங்களில் வசந்த காலத்தில் பெரிய மெல்லிய செல் சுவருடைய செல்கள் அமைந்த முன்கட்டை அல்லது வசந்தகாலக் கட்டை உண்டாகும். கோடைக் காலத் தில் சிறிய தடித்த செல் சுவரோடு கூடிய கட்டைகள் கோடைக் காலக்கட்டை எனப்படும். கட்டைகளில் மெல்லிய, சோற்றுச் செல்களால் (parenchyma cells) ஆ5 கிய கதிர்கள் மைய அச்சிற்குக் குறுக்காக அமைந்து இருக்கும். இவை அகலம், உயரம், அமைவு முறை ஆகியவற்றில் வேறுபட்டுக் கட்டைகளின் தன்மைகளை அறுதியிடும். உள்ள கட்டைகளின் தொடக்ககாலத்தில் செல்கள் உயிருள்ளவையாகச் செயல்திறம் பெற்றுக் காணப்படும். இது சோற்றுக் கட்டை எனப்படும். கட்டையின் பின்னர் உண்டாகிய செல்களில் பல