204 காட்டுப் பன்றி
204 காட்டுப் பன்றி ரப்பர் மரத்திலிருந்து கிடைக்கின்றன. காஸ்டில்லா எலாஸ்டிகா என்னும் மரத்திலிருந்து பனாமா ரப்ப ரும், ஃபைகஸ் எலாஸ்டிகா என்னும் மரத்திலிருந்து அஸ்ஸாம் ரப்பரும்; பார்த்தீனியம் அர்ஜென்டேட்டம் என்னும் புதர்ச்செடியிலிருந்து குயாயூல் ரப்பரும் எடுக் கப்பட்டுப் பலவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றன. துணி ஆலைகள், காகிதத் தயாரிப்பு, பற்பசை, வண் ணம், இனிப்புப் பொருள் ஆகியன தயாரிப்பில் பயன் படுத்தப்படும் கோந்து அகேஷியா செனீகல், அஸ்ட் ராலகஸ் கம்மிஃபெர், ஸ்டெர்கூலியா யூரென்ஸ், ஸிபஸ் ஜூலிஃபுளோரா ஆகியவற்றிலிருந்தும், பூச்சு மருந்து, பாய், மணப்பொருள் தயாரிக்க உதவும் ரோசனங்கள் அனாகார்டியேசி, பர்சரேசி, சுட்டி ஃபெரே, லிலியேசி, ஸ்டைரேசி ஆகிய குடும்பங்களைச் சேர்ந்த தாவரங்களிலிருந்தும் கிடைக்கின்றன. புரா . துணிகள், கம்பளங்கள் அச்சிடவும், லினோலியம், மெழுகு, மை, ஒட்டும் பொருள்கள், மருந்துகள். வேதிப்பொருள்கள் தயாரிக்கவும் உதவும் எண்ணெய். ரோசனமான டர்பென்டைன், கனடா பால்சம் முதலி யவையும் கூம்புத் தாவரங்களிலிருந்து எடுக்கப்படு கின்றன. யுகலிப்டஸ். சின்கோனா, சர்ப்பகந்தி, நித்தியகல்யாணி, அட்ரோபா, டிஜிடாலிஸ் முதலிய காட்டில் கிடைக்கும் தாவரங்கள் பல மேல்நாட்டு மருத்துவ முறையிலான மருந்துகள் தயாரிக்கவும், வசம்பு, பாலை, எட்டி, குப்பைமேனி, துத்தி, வேலிப் பருத்தி, முடக்கத்தான், ஆடாதொடாப்பாளை. தூதுவளை, வல்லாரை போன்ற மூலிகைகள் இந்திய மருத்துவ முறையிலான மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. -கே.ஆர். பாலச்சந்திரகணேசன் நூலோதி.C.H. Stoddard, Essentials of Forestry Practice, John Wiley & Sons, New York, 1978. காட்டுப் பன்றி B இவ்விலங்கு அனைத்து வாழிடங்களிலும் கூட்டமாக வாழ்ந்து, அனைத்து உணவையும் உண்டு விரைந்து இனப்பெருக்கம் செய்யக்கூடியது. நீண்ட தலை தட்டையான மூக்கு, குட்டைக் கால்கள், வெளியில் வளைந்து நிற்கும் கோரைப் பற்கள், சாம்பல் நிறமும் கருநிறமும் கலந்த உடல் ஆகிய புறத்தோற்றங் களைக் கொண்டுள்ள இவை 90 செ. மீ. உயரமும், 200 கிலோ உடல் எடையும் கொண்டவையாகும். புதர் மண்டிய காடுகள், புல்வெளிகள், பயிர்நிலங் களை ஓட்டியுள்ள நிலப்பகுதிகளில் கூட்டமாக வாழ் கின்ற காட்டுப் பன்றிகள் (sus scrofa) இந்தியா. இலங்கை, பர்மா, சயாம் போன்ற நாடுகளில் மிகுதி யாகக் காணப்படுகின்றன. நீண்ட கூம்பு வடி ล மான தலையையும், தட்டையாகப் பறந்து விரிந்த மூக்கையும், குட்டைக் கால்களையும், வாயிலிருந்து வெளியில் நீண்டு மேல்நோக்கி வளைந்துள்ள கோரைப் பற்களையும் (30 செ.மீ.நீளம்) சாம்பல் விரவிய கறுப்பு நிற உடலில் வெண்ணிறத் தடித்த மயிர்களடர்ந்த உருவையும் பெற்றுள்ள காட் டுப் பன்றிகளில் ஆண் பன்றிகளிடம் செறிந்த மயிர்ப் பிடரி காணப்படுகிறது. மேல்தாடை, கீழ்த்தாடைக் கோரைப்பற்கள் வாயிலிருந்து வெளிப்பட்டு மேல் நோக்கி வளைந்துள்ளன. பன்றிக் குட்டிகள் பழுப்பு நிற மேனியில் கறுப்பு நிறக் குறுக்குப் பட்டைகளைக் கொண்டுள்ளன. . வலிமையான மூக்கால் நிலத்தைக் கீறி வேர். கிழங்கு ஆகியவற்றையும், இலை, தழை, பயிர் பூச்சி, பாம்பு, இறந்து போன விலங்கு ஆகியவற்றை யும் உண்கின்ற அனைத்துண்ணிகள், வைகறை, மங்கிய மாலை வேளைகளில் உணவு உண்ணும் காட்டுப் பன்றிகள் மழைக்கால காலத்துக்குப் பின்னால் விளை நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழிக்கின்றன. . பெரும் கூட்டமாகவே காணப்படும் காட்டுப் பன்றிகள் வலிமை மிக்க ஆண் பன்றியின் தலைமை யில் செயல்படுகின்றன. ஒரு பன்றிக் கூட்டத்தில் நூற்றெழுபது பன்றிகளைப் பார்த்ததாக டன்பார் பிராண்டர் என்னும் வனவிலங்கியலார் தெரிவிக் கிறார். ஆண் பன்றிகள் வீரம் மிக்கவை: புலி, சிறுத்தை ஆகிய எதிரிகளை எதிர்த்து வெல்லும் திறம் மிக்கவை. நுட்பமான அறிவு, திட்டமிட்ட முடிவு, வீரம் ஆகிய இயல்புகளைக் கொண்டிருந்தாலும் அவற்றின் பார்வைப்புலனும், செவிப்புலனும் ஓரளவே நன்னிலையிலுள்ளன. எல்லாக் காலத்திலும் உணவு மிகுதியாகக் கிடைப்பதால் புணர்ச்சியில் மிகுவேட்கை யுடன் ஈடுபட்டு மழைக் காலத்திற்கு முன்பும், பின்பும் ஒவ்வொரு பெண் பன்றியும் ஆறு குட்டி களைப் பெறும். புல் லை தழைகளைக் கொண்டு ஏற்படுத்தும் மறைவிடங்களில் குட்டிகளை ஈன்று அக்கறையுடன் பேணும் தாய்ப்பன்றிகள் அச்சமூட்டும் மனநிலையில் காணப்படும். இணைகளைப் பெறுவ தற்காகச் சண்டையிடும் ஆண்பன்றிகள் உட லுறவுக் குப் பின் தனித்தோ கூட்டத்துடனோ வாழும்.