பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டுப்‌ பூனை 205

விளை நிலங்களை அவை மிகுதியாக அழிப்ப தால், காட்டுப் பன்றிகளைப் பயிர்க் கொல்லிகளாக அரசு அறிவித்து உள்ளது. காட்டுப் பன்றிகளின் தசைக்காக மனித தரால் அவை வேட்டையாடப்படு வேட்டை கின்றன. நீண்ட கழிகளால் பன்றிகளை யாடும் வழக்கம் வட இந்தியாவில் உள்ளதாகக் கீ என்னும் வனவிலங்கியலார் தெரிவிக்கிறார். -துரை. சுந்தரமூர்த்தி நூலோதி. E.P.Gee The Wild Life of India, Collins, London. 1964.' காட்டுப் பூனை 205° துள்ள நகங்கள் பாதங்களின் அடிப்பகுதியில் அமைந் துள்ளமையால் அவற்றின் கூர்மை மழுங்குவதில்லை. மரம் ஏறவும் எதிரிகளைத் தாக்கவும் இந்நகங்கள் பயன்படுகின்றன. காட்டுப் பூனை வை ஸ்காட்லாண்ட், வேல்ஸ் மற்றும் ஐரோப்பா வின் குன்றுகள் நிறைந்த பகுதிகளிலும் ஆங்காங்கே உள்ள ஒதுக்குப்புறமான காடுகளிலும் காணப்படுகின் றன. பொதுவாகவே, காட்டுப்பூனைகள் (jungle cat: Felis Chaus) பாறைகள் நிறைந்த உயர்ந்த இடங்களி லும் மான்கூட்டங்கள் வாழும் பகுதிகளிலும் வாழ் கின்றன. இப்பூனைகள் தங்கும் இடமான குகைகள் அல்லது கூடுகள் ஒதுக்குப்புறமான பாறைகளின் இடுக்குகளில் அமைகின்றன. காட்டுப் பூனைகள் எப்போதும் மக்கள் குடி யிருப்புகளிலிருந்து விலகியே வாழ்கின்றன. இரவு வேளைகளில் முயல், குழிமுயல், பறவை, கோழி, ஆட்டுக் குட்டி போன்றவற்றை வேட்டையாடுகின் றன. கிடைத்த இரையைத் தேக்கி வைக்காமல் உடனே விழுங்கிவிடுகின்றன. காட்டுப்பூனையின் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக இருப்பவை புலன்களின் கூர்மையான செயல் திறனும், வேகமாக ஓடிமறையும் இயல்புமேயாகும். காட்டுப் பூனை எப்போதும் தனிமையாகவே காணப்படும். இனச்சேர்க்கையின்போது மட்டுமே ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து காணப்படும். கருவுற்ற பெண்பூனை அறுபத்தெட்டு நாள் கழித்து நான்கு ஐந்து குட்டிகளை ஈனும். ஈன்ற குட்டிகளை மிகவும் கவனமாகப் பேணி அவற்றின் பாதுகாப்புக்குக் கேடு தரும் விலங்குகளை எதிர்த்துப் போராடும். குட்டிகளும் சண்டையிடும் வல்லமை பெற்றுள்ளன. தாய்ப்பால் குடித்து வளரும் இவை பால் குடிக்கும் பருவம் கடந்ததும் தனித்து வாழத் தொடங்குகின் றன. ஒரு காட்டுப் பூனையின் வாழ்நாள் பதினாறு ஆண்டுகளாகும். காட்டுப் பூனை நடக்கும்போது விரல்களால் தரையைத் தொட்டு நடக்கிறது. உள்ளங்கால்களைத் தரையிலிருந்து சிறிது உயர்த்தியே நடக்கிறது. இம்முறையைக் கையாள்வதால் பூனை மிக விரை வாக ஓடுகிறது. உள் இழுத்துக் கொள்ளுமாறு அமைந் Jungle Cat ¡Felis chaus; குட்டையான, கூர்மையான, எப்பக்கமும் திருப் பக்கூடிய காது மடல்கள், இருட்டிலும் பார்க்குந் திறன், மோப்ப உணர்வு ஆகியவற்றால் காட்டுப் பூனை நன்கு செயல்படுகிறது. ஒளியில் நோக்கும் போது கண்ணில் செங்குத்துக்கோடு போல் காணப் படும். கண்மணி அடர் இருட்டில் மிகவும் அகலமாக விரிந்து ஒளியைக் கண்ணுக்குள் அனுப்புகிறது. எனவே மிகவும் ஒளி குறைந்த சூழ்நிலையிலும் காட்டுப் பூனையால் பார்க்க முடியும். மேல் உதடுகளில் நீண்ட மீசை மயிர் காணப் படுகிறது. அது தொடு உணர்ச்சி இழையாகப் பயன் படுகிறது. உணர்விழைகளும், மோப்பத் திறனும் கூரிய பார்வைத்திறனும் காட்டுப் பூனை இருட்டிலும் உணவு தேடியலைவதற்குப் பேருதவி புரிகின்றன. சிறிய உளிப்பற்களும், நீண்டு, பின்புறமாகச் சற்று வளைந்த கோரைப் பற்களும், முன் கடைவாய், பின்கடைவாய்ப் பற்களும் உள்ளன. முன், பின் கடைவாய்ப் பற்கள் பிற பாலூட்டி விலங்குகளில் உணவை அரைப்பதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. ஆனால் காட்டுப் பூனையின் கடைவாய்ப் பற்கள் மிகவும் உறுதியானவை; கூர்மையானவை. டென்டைன் பகுதியின் மேல் காணப்படும் எனாமல் (enamel) மிகக் கெட்டியான பகுதி. இது தேய்வதே ல்லை. பல்லின்