பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டு வள்ளி 209

காட்டு வள்ளி 209 என்னும் பூசணத்தால் இளம் தண்டு. இலை வாடலும் உண்டாகின்றன. ஹிடரோலிகஸ் மெலிஸ் என்னும் யாம் விட்டில் பூச்சியாலும், ஆஸ்பிடி யெல்லா ஹார்டிஐ என்னும் செதில் பூச்சியாலும் உலகம் முழுதும் அழிவு உண்டாகிறது. ஒரு ஆண்டிற்கு 20 மில்லியன் கிழங்குகள் உற்பத்தி செய்யப்படு கின்றன. மேற்கு ஆஃப்ரிக்காவில் பெருமளவில் விளைகின்றன. பெருக்கச் சிறு சிறு குமிழங்கள் உள்ளன. இவற்றில் உணவு சேமிக்கப்பட்டுள்ளது. இவற்றை உண்ண லாம். தண்டும் இலைகளும் கிழங்கின் நுனியிலிருந்து தரைமேல் தண்டாக வளர்ந்து கொடி ஆகும். கொடி குறிப்பிட்ட திசையில் பின்னிப் படர்வது பேரினப் பண்பு ஆகிறது. சில கொடிகள் வலப்புற மாகவும் வேறுசில இடப்புறமாகவும் பின்னிப் படர் கின்றன. இலைகள் தனி இலைகள்; இதய வடி வானவை; இலைக்காம்பு உடையவை; முக்கிய நரம் புகள் லைத்தாளின் தொடக்கத்தில் தோன்றிப் பிறகு வலைப் பின்னலைப்போல் பிரிகின்றன. சிவ இலைகள் 3-5 மடல்கள் அல்லது சிற்றிலை களைப் பெற்றுள்ளன. இலைகளில் உள்ள சுரப்பிகள் பூச்சிகளைக் கவர்கின்றன. பூக்கள். ஈரில்லம் உடையவை (dioecious) . ஆண் பூக்கள் மிகு எண்ணிக்கையில் ஒரு தனிக் கொடி யிலும், பெண் பூக்கள் குறைந்த எண்ணிக்கையில் ஒரு தனிக் கொடியிலும் அமைந்து இருக்கும். டயாஸ் கோரியா டிரைஃபிடா என்னும் இனத்தில் மட்டும் இருபால் பூக்கள் உள்ளன. ஆண்பூக்களும் பெண் பூக்களும் இலைக்கோணத்தில் நுனிவளர் கிளை மஞ்சரியில் உள்ளன. பூக்கள் சிறியவை. ஆரச்சமச்சீர் உடையவை ; பச்சை அல்லது இளம் மஞ்சள் நிற முடையவை. இதழ்கள். இரு அடுக்குகளில் மூன்று, மூன்றாக வரிசைகளில் இருக்கும். மகரந்தத்தூள்களும் இரு மூன்று மூன்றாக உள்ளன. பெண் பூக்களில் கீழ் மட்டச்சூல்பை, 3 சூல் அறைகள், ஒவ்வொரு சூல் அறையிலும் 2 சூல்கள் அச்சுச்சூல் அமைவில் உள்ளன. சூலகமுடி 3. கனி 3 அறைகள் கொண்ட வெடிகனி கனியிலும் விதையிலும் சிறகுகள் உள்ளன. விதையில் இரு வித்திலைகள் சில ஆஃப்ரிக்க இனங்களில் உள்ளன. முளைசூழ் தசை உண்டு; சிறிய இருக்கும்; மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் நடை பெறுகிறது. கரு பயிரிடும் முறை. பெரும்பாலான இனங்கள் சிறு கிழங்குகள் மூலமும், ஒரு சில பெருக்கச்சிறு குமி ழங்கள் (bulbils) மூலமும் பயிரிடப்படுகின்றன. கிழங்குகள் வறட்சிக் கால இறுதியில் மேடுகளில் நடப்படுகின்றன. ஒரு ஹெக்ட்டேர் நிலப்பரப்பில் நடுவதற்கு 10,000-15,000 சிறு கிழங்குகள் தேவைப் படும். நைட்ரஜன், பாஸ்ஃபரஸ், பொட்டாசியம் உரங்கள் பொதுவாக இடப்படும். கொடிக்கு அடிப் படையாகக் கொழு கொம்புகளை நட்டால் விளைச் சல் மிகும். பயிர்ப் பெருக்க முறையில் ஒயிட் ஸிஸ்பன் பார்படோஸ் என்னும் வகைகள் சிறந்த விளைச்சலைக் கொடுக்கின்றன. நோய்கள், பூச்சிகள். செர்கோஸ் போரா கார்பொனேஸியா என்னும் பூசணத்தால் இலைப் புள்ளி நோயும், கிளியோஸ்போரியம் பெஸ்டிஸ் அ. க. 8 14. டயாஸ்கோரியா அலாடா. து இயற்கைவாழ் னமாக வளர்வதில்லை. இது தென்கிழக்கு ஆசியா வில் அஸ்ஸாம் பர்மாப் பகுதியில் இயற்கையாக வாழ்கின்ற டயாஸ்கோரியா ஹாமில்டோனியை, டயாஸ்கோரியா பெர்மிலிஸ் ஆகிய இனங்களிலிருந்து தோன்றி இருக்கலாம். இது கி.மு.100 இல் தாய் லாந்து, வியட்நாம், சீனா, நியூசினியா, ஸெலபீஸ், பாலினேஷியா ஆகிய நாடுகளில் பரவி இருந்தது. து ஆசியாடிக் யாம், வெள்ளை யாம் அல்லது சிறகுள்ள யாம் எனப்படும். கிழங்குகள் 5-60 கி.கி எடை வரையிருக்கும். கிழங்குகள் நீளமானவை. உருண்டையானவை சில சமயங்களில் இவற்றில் மடல்கள் அல்லது கிளைகள் இருக்கும். இது இந்தி யாவில் தக்காண பீடபூமி, கர்நாடகம், கொங்கணம், குஜராத், மஹாராஷ்டிர மாநிலங்களில் பயிரிடப் படுகிறது. கிழங்குகள் காய்கறியாகப் பயன்படு கின்றன. டயாஸ்கோரியா அகுவியாடா. டயாஸ்கோரியா எஸ்குலன்டா என்றும் இதற்குப் பெயருண்டு. இதன் கிழங்குகள் உருளைக்கிழங்குகளைப் போல் சிறியவை. இதன் தோல் பழுப்பு நிறமானது. சதை வெண்மை நிறமுடையது. இனிப்புச் சுவையுடன் உள்ளமை யால் விரும்பி உண்ணப்படுகிறது. ந்தியாவில் மஹாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத் மாநிலங்களில் இறைவைப் பயிராகப் பயிரிடப்படுகிறது. டயாஸ்கோரியா பல்பிஃபெரா. இது ஆசியா, ஆஃப்ரிக்காக் கண்டங்களில் இயற்கைவாழ் ண மாகக் காணப்படுகிறது. இதன் தரைக்கீழ்த் தண்டுகள் மிகவும் சிறியவை. தரைமேல் தண்டுகளிலிருந்து உண்டாகும் பெருக்கச்சிறு குமிழங்களே பயன் படுகின்றன. இவை பழுப்பு அல்லது சாம்பல் நிற இலைக் கோணத்திலிருந்து தோன்றும். இதில் நச்சுத் தன்மையுள்ள ஒரு குளுகோசைடு உள்ளது; எனவே கசப்புச் சுவை உடையது. கிழங்கைப் பொடி செய்து புண்ணின்மேல் தூவலாம். கிழங்கை, சீரகம் பாலுடன் கலந்து மூலநோய், வயிற்றுப்போக்கு, மேகநோய் இவற்றிற்கு மருந்தாகக் கொடுக்கலாம். டயாஸ்கோரியா பெண்டாஃபில்லா. இது ஆசியாவின் வெதுவெதுப்பான, ஈரமுள்ள காடுகளில் வளரும். கிழங்குகளில் நச்சுத்தன்மை இல்லை. கொடிகள் இடப்புறமாகப் பின்னிப் படரும்; முள்கள் உடை யவை, 5 சிற்றிலைகளுடன் காணப்படும். கிழங்கு