210 காட்டெருமை
1/0 காட்டெருமை உணவாகச் சமைத்து உண்ணப்படும். பாலுணர்வைத் தூண்டவும், பித்தப்பைக் கோளாறுகளை நீக்கவும், தீக்காயங்கள். கண்நோய்கள் ஆகியவற்றைப் போக்கவும் கிழங்கு மருந்தாகிறது. டயாஸ்கோரியா குளோபோசா. து டயாஸ் கோரியா அலாடாவின் ஒரு வகை ஆகும். வங்காளத்தில் இது மிகுதியாக வளர்கிறது. இது உருண்டை யாம் எனப்படும். தட்டைப்புழு நீக்கவும், குடற்புழுக்கள் நீக்கவும், தொழுநோய், மேகப் புண், மூலநோய், அடிவயிற்றுக் கட்டிகள், நச்சு நீக்கவும் இதன் கிழங்கு மருந்தாகிறது. டபாஸ்கோரியாஆப்போசிடா. இது டயாஸ்கோரியா படாடாஸ் என்றும் கூறப்படும். இது சின்னமன் யாம் என்று குறிப்பிடப்படும். இது சீனா. ஜப்பான், கொரியா, தைவான் ஆகிய நாடுகளில் பயிராகிறது. ஐரோப்பாவில் உருளைக் கிழங்கு நோயி னால் பாதிக்கப்பட்டபோது இந்தக் கிழங்கை ஆய்வு முறையில் பயிரிட்டனர். இதன் கிழங்குகள் கதிர் வடிவானவை. ஒரு மீட்டர் நீளம் வரை காணப் படும் இதன் வேர் வீக்க நீக்கியாகவும், பாம்புக் கடிக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. கே.ஆர். பாலசந்திரகணேசன் நூலோதி.J.W. Purseglove, Tropical Crips:Mono. cotyedons, English Language Book Society and Longman, London, 1975. காட்டு வாத்து அமைப்பில் காட்டு வாத்து (mallard duck) வீட்டில் வளர்க்கும் வாத்தின் அளவினதாகும். வளர்ப்பு வாத்துகள் அனைத்தும் இதன் வழி வந்தனவே. இது வடமண்டலங்களில் இனப்பெருக்கம் செய்யும். கோடைக்காலத்தில் ஆண் பறவை பல வண்ணங் களில் அழகுறக் காணப்படும். தெற்கே வலசை வரும். குளிர்காலத்தில் ஆண் கறுப்பும் பழுப்பும் கலந்த மங்கிய நிறமுடையதாக இருக்கும். இனப்பெருக்க காலத்தில் ஆணின் முதுகும் வயிறும் சாம்பல் நிற மாகவும் தலை பளபளக்கும் கரும் பச்சை நிறமாக வும் இருக்கும். மார்பு வெள்ளை நிறக் கறையோடு கூடிய செம்பழுப்பு நிறமாகத் தோன்றும். கால்கள் ஆரஞ்சு நிறமாகவும், அலகு பசுமை பூத்த மஞ்சள் நிறமாகவும் இருக்கும். வடதுருவம் தொடங்கி மத்திய தரைக்கடல் பகுதி வரை கோடைக் காலத்தில் இனப்பெருக்கம் செய்யும். குளிர்காலத்தில் பெரும் எண்ணிக்கையில் தெற்கே வலசை வரும்போது தென்னிந்தியாவில் மிக அரிதாகவே இதைக் காண முடியும். நீரில் சிறு கூட்டமாக நீந்தியவாறே இரை தேடும் பழக்க முடைய காட்டு வாத்து இரவு நேரங்களில் வயல்களில் சிதறிக் கிடக்கும் நெல் மணிகளையும் பிற தானியங்களையும் உண் ணும். இலை, தழை, தளிர், பயிரின் முளை, தவளை, புழு, பூச்சி, மீன் முட்டை ஆகியவற்றையும் உண வாகக் கொள்கிறது. 9 மணிக்கு 50-80 கி.மீ. வேகத்தில் பறக்கும் ஆற் றல் பெற்ற இதை வீழ்த்துவதில் வேட்டைக்காரர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதற்குக் காரணம் இதன் இறைச்சியின் சுவையே ஆகும். 'க்வாக் வாக்... க்வாக்' என இதன் கூப்பிடு குரவைப்போலவே வேட்டைக்காரர்கள் மறைந்திருந்து குரல் கொடுத்து ஏமாற்றி இதை அருகில் நெருங்கி வரச் செய்து வீழ்த்துவர். இரையைக் கண்டவுடன் காகம் கரை வதைப் போல இதுவும் 'டக்கட, டக்கட எனத் தன் நிறைவை வெளிப்படுத்தக் குரல் கொடுக்கும். நீர்நிலைகளை அடுத்து வளர்ந்திருக்கும் புல், புதர்களிடையே காய்ந்த புல், இலைதழை ஆகியன கொண்டு தரையில் கூடு கட்டி அதைத் தன் உடலின் சிறகுகளால் மென்மையாக்கி 6-10 வரை பசுமை கலந்த சாம்பல் நிற முட்டைகள் இடும். பெண் காட்டு வாத்து மட்டுமே 26 நாள் அடை காக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை காஷ்மீரத்தில் மிகுந்த அளவில் இனப்பெருக்கம் செய்து வந்த இது தற்போது மிக அரிதாக அங்கு இனப்பெருக்கம் செய்கிறது. காட்டெருமை க. ரத்னம் இது பாலூட்டி விலங்குகளுள் இரட்டைக் குளம்பிகள் வரிசையில் போவிடேஎனும் எருதுகள் குடும்பத்துள்