பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டெருமை 211

காட்டெருமை 211 அடங்கும். இயற்கையாகக் காடு, புல்வெளி சதுப்பு நிலப்பகுதி, மலைச்சாரல் ஆகிய இடங்களில் வாழும் விலங்கு ஆகும். தாவர உண்ணி விலங்குகளுள் மிகப் பெரியது, கம்பீரமானது, வலிவுள்ளது. கொன்றுண்ணி காடுகளில் வாழும் பெரும் விலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றின் முக்கிய இரை விலங்குகளான காட்டு எருமை, மறி மான் எனப்படும் ஆன்ட்டிலோப் (antelope) நீல்காய் (nilgai) கருமான் (black buck) சின்காரா (chinkara) எனப்படும் கேசல்லிகள் (gazelles) போன்றவை இக்குடும்பத்தில் உள்ளன. இவ்வாறே மனிதர்களின் இன்றியமையா உணவுத் தேவைகளான இறைச்சி. பால் இரண்டையும் தரும் முக்கிய கால்நடைக ளான வெள்ளாடு, செம்மறியாடு, எருது, ஆகியவையும் இக்குடும்பத்தைச் சேர்ந்தவையே. எனவே உலகத்தில் பெரும்பாலான விலங்குகளின் (மனிதன் உட்பட) உணவுக் களஞ்சியமான இவை இயற்கைச் சமன்பாட்டில் (natures balance) மிக முக்கியமான இடம் பெற்றுள்ளன. எருமை இவ்விலங்குகள் அனைத்திற்கும் தடித்த, வலிவான பல வடிவங்களில் வளைந்த கொம்புகள் தலையின் மேற்பகுதியில் எடுப்பாக அமைந்திருக்கும். மண்டை ஓட்டிலிருந்து வளர்ந்த எலும்பின் உட்பகுதியைக் கொம்புப் பொருளால் ஆன உறை மூடியிருக்கும். இவை குறுக்குவெட்டில் உருளையாகவோ, தட்டை யாகவோ, முக்கோணமாகவோ இருக்கும். வகை. உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பல வகையான காட்டு எருமைகள் வாழ்கின்றன. பெரும் பாலும் வை பெரிய மந்தைகளாக, கூட்டங்களாக வாழும். கொன்றுண்ணிகளால் கொல்லப்படுவ தோடல்லாமல், மனிதர்களாலும் இவை வேட்டை யாடப்பட்டு வந்தன. அண்மைக் காலத்தில் பல நாடுகளில் இவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பல மறைந்து போகும் நிலைக்கே வந்துள்ளன. காட்டெருமை (wild buffalo - bos bubalis), காட் டெருது (இந்திய பைசன் எனத் தவறாக எண்ணப் படுவது), (bloils. gaurus) காயல் எனும் அஸ்ஸாமியக் காட்டெருமை (bos frontalis) பேன்ட்டிங் அல்லது செயின் எனப்படும் மலேயா காட்டெருமை (banting or tsaine - bos sondaicus) யாக் எனப்படும் திபேத்தி யக் காட்டெருமை (yak-bos grunniensis ) என்பன இந்தியாவில் காணப்படுகின்றன. து. க. 8-14 அ காட்டெருமை