பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 காட்டெருமை

2/2 காட்டெருமை எருமை எனக் குறிப்பிடப்படும் இது ஆற்றல்மிக்க விலங்கு ஆகும். 2மீ உயரமும், 3மீ நீளமும், ஏறத்தாழ 900 கி.கி. எடையும் இருக்கும் இதன் கொம்புகள் தடித்த, நீண்ட, பெரிய தட்டையான அமைப்புடன் தலையின் மேற்புறத்தில் நெருக்கமாக அமைந்து வெளிப்புறம் அகலமாக நீண்டு சென்று பிறகு மேல் நோக்கி வளைந்து ஒரு பெரிய வட்டத்தின் பக்கங் களைப் போல் இருக்கும். கொம்பின் பரப்பு வரி வரி யாக வளையங்களாக அமைந்திருக்கும். பெரும்பாலும் போவிடே குடும்பத்தில் மிகப் பெரிய கொம்புகள் கொண்டவை காட்டெருமைக களேயாகும். இவற்றின் தோல் கறுப்பாக. வழவழப்பாக முடியின்றி உள்ளமையால் விரைவில் சூரிய வெப் பத்தை ஏற்றுக் கொண்டு விடுகிறது; சிலசமயங்களில் வெடிப்புகளும் ஏற்படலாம். இந்நிலையைத் தவிர்ப் பதற்காகவே இவை எப்போதும் நீர் நிலைகளிலேயே அமிழ்ந்து கிடக்கின்றன எனக் கருதப்படுகிறது. இதன் பொருட்டே இவை நீர் எருமைகள் எனப்படுகின்றன. போவிடேவைச் சேர்ந்த வேறு எந்த விலங்கும் நீரிலேயே வாழ விரும்புவதில்லை. மத்திய இந்திய, தென்னிந்தியச் சதுப்பு நிலக்காடுகளிலே இவை வாழ்ந்து வந்தன. எளிதாக இவை காடுகளிலே மேயச் சென்ற வீட்டு எருமைகளுடன் கலந்து இனப்பெருக் கம் செய்து வந்தன. தனால் இவை சாதாரண எருமைகளோடு இரண்டறக் கலந்துவிட்டன. காட்டெருது (gaur). இந்தியக் காடுகளில் குறிப் பாக வட கிழக்கில் அஸ்ஸாம் காடுகள், தென்னிந்தி யாவில் முதுமலை, பந்திப்பூர், ஜவஹர் தேசிய வனம், பழனி,கூர்கு, ஆனைமலைக் காடு போன்ற இடங் களில் பெருமளவில் காணப்படுகின்றன. காட்டெருது களின் உருவ ஒற்றுமையைக் கொண்டு இவற்றை இந்திய பைசன் (indian bison) என்று தவறாகக் கூறுகின்றனர். ஏனெனில் உண்மையான பைசன்கள் அமெரிக்க பைசன்களே. அடுத்து, இந்தியாவைப் பொறுத்த வரையில், உண்மையான காட்டெருமை கள் (bos bubalis) காடுகளில் இல்லாமையால் இந்தக் காட்டெருதுகளையே காட்டெருமைகள் என்றும் கார் (gaur) என்றும் பொதுவாகக் குறிக்கின்றனர். கார் வெப்ப மழைக்காடுகளிலும் (tropical rain forests), திறந்த புல்வெளிகளிலும், மலைச் சரிவுகளிலும் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. வை உலகிலேயே மிகப்பெரிய, மிக எடுப் பான மிகுந்த வலிமை, ஆற்றல், துணிவு உடைய தாவர உண்ணி விலங்காகும். இவை அமெரிக்க பைசனைவிடப் பெரியவை. முதிர்ந்த காளைகள் பெரிய குன்றைப்போல் திண்மையானவை; ஆண்மைக்