பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 காடிகள்‌

214 காடிகள் ஃபரஸ் வளர் சிதை மாற்றங்களில் உண்டாகும் கோளாறுகள் காரணமாக ஏற்படும் ஏற்படும் ரிக்கெட்ஸ், டெட்டானஸ், எலும்பழிதல் முதலான நோய்களுக்குக் காட் ஈரல் எண்ணெய் மிகவும் ஏற்றதாகும். சென்ற நூற்றாண்டில் இந்த எண்ணெய் நோய் நீக்கியாகப் பயன்பட்டது. 1922 இல் இதில் உள்ள வைட்டமின் A. வைட்டமின் D கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சிறப் பாக வைட்டமின் D பற்றாக் குறை நோய்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. எண்ணெயின் தரமும் அதிலுள்ள வைட்டமின்களின் தரமும் மீன்களின் இனம், வயதுக்கேற்றவாறு மாறுபடும். இளம் மீன்களைவிட முதிர்ந்த மீன்களில் கொழுப்புக் குறைவாகவும் ஈரல் எண்ணெயில் வைட்டமின்களின் தரம் உயர்வாகவும் இருக்கும். மீன் எண்ணெய் உற்பத்தியில் நார்வே, ஜப்பான் ஐஸ்லாந்து, போலந்து ஆகிய நாடுகள் முன்னணியி லுள்ளன. மீன்களிலிருந்து அகற்றிய ஈரலை நீராவி, நீர், அமிலம் அல்லது காரம் ஆகியவற்றில் வேக வைத்துக் காய்ச்சி, எண்ணெய் எடுக்கப்படுகிறது. பின்னர் வேண்டாத கழிவுப் பொருள்களை அகற்றி எண்ணெய் தூய்மைப்படுத்தப்படும். காட் மீன் எண்ணெய் ஊட்டச் சத்து மிகுந்ததாகும். ஒலியிக் அமிலம், கேடோலியிக் அமிலம், பால்மிட்டோலியிக் அமிலம் ஆகியவற்றின் கிளிசரைடுகள் சேர்ந் துள்ளமையால் காற்றுப் படும்படி வைத்தால் வைட்டமின் அழிந்துவிடும். காடிகள் கு. சம்பத் உருளை வடிவில் இணைக்கப்பட்ட எந்திரப் பகுதி களின் ஒப்புமைச் (relative) சுழற்சியைத் தடுப்பதற்கு, சாவியைவிடத் தொடர்ச்சியான புடைப்புகள் (projec- tions), வரிப்பள்ளங்கள் (slots) ஆகியவை பயன்படு கின்றன.காடிகள் (splines) என்பன எந்திரத் தண்டில் (shaft) ஏற்படுத்திய பள்ளங்களாகும். காடிகளில் சதுரம், உட்சுருள் (involute) என்னும் இரண்டு வகை உள்ளன. ஆற்றலைக் கடத்தும்போது ஏற்படும் விசையைப் பகிர்ந்து கொள்ள, பல புடைப்புகள் (தொகுப்புச் சாவிகள்-integral keys) வேண்டியுள்ள மையால், காடிகளை ஆழமற்றவையாக அமைத்து எந்திரத் தண்டைப் பலவீனப்படுத்தாமல், ஒரு தரமான சாவியைப் போல் அமைக்கலாம். படம் 1.காடி உருளை