பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடுகளின்‌ மண்‌ வகைகள்‌ 215

காடுகளின் மண் வகைகள் 215 சதுரக் காடிகள் 4,6,10 அல்லது 16 என்னும் எண்ணிக்கையில் உள்ளன. எந்திரத் தண்டின் வெளிப் பகுதியில் உள்ள காடிகளைத் துருவல் முறையாலும் (milling) உள்பகுதியைத் (பெரிய துளையை) தொகுப்பு உளியாலும் அமைக்கலாம். காடிகள் மூன்று வகையாகும். அவை, பளுவால் வழுக்குபவை (sliding) பளு இல்லாமல் வழுக்குபவை, நிரந்தரமாகப் பொருந் துபவை ஆகும். எந்திரப் பகுதிகளுக்குச் சதுரக் காடிகளே பெரும்பாலும் பயன்படுகின்றன. தானி யங்கு தொழிலில் பொதுவாகச் சதுரக் காடிகளுக்குப் பதிலாக, சுருள் காடிகள் பயன்படுகின்றன. சுருள் காடிகள் நன்றாகப் பொருத்துவதற்கும், ஒன்றுக் கொன்று மாற்றிக் கொள்வதற்கும் தகுந்தவாறு சரி செய்வதற்குக் குறைந்த செலவே ஆகும். உருளை வடிவில் பொருத்தப்பட்ட எந்திரப்பகுதி களின் ஒப்புமைச் சுழற்சியைத் தடுப்பதற்கு, சுருள் காடிகள் பயன்படுகின்றன. சுருள் காடிகள். சதுரக் காடிகளைப் போலவே நடைமுறைப் பண்புகளைக் கொண்டுள்ளன. சுருள் காடிகள் சுருள் பற் சக்கரங் களைப் போன்றுள்ளன. இதன் காடி பொருத்தும் விதம் (தொகுப்புப் பகுதி) உள் பற்சக்கரத்தைப் பொருத்துவது போலவே உள்ளது. பற் சக்கரப் பற் களின் பகுதி புரியிடைத் தொலைவு (fractional pitch) அல்லது கட்டை அமைப்பு (stub form) 309அழுத்தக் கோணத்தில் உள்ளது போலவே சுருள் காடிகளின் மேற்பரப்புகள் (profiles) உள்ளன. எந்திரத் தண்டின் மேல் உள்ள சுருள் காடிகள், திருகு பல் வெட்டும் எந்திரம் (hober) மூலமாகவோ பற்சக்கர வெட்டியாலோ உருவாக்கப்படுகின்றன. அதே சமயம் உள் காடிகள் கொந்துளியாலோ (broa- ching tools) பற் சக்கர வெட்டியாலோ உருவாக்கப் படுகின்றன. பொருத்துவதில் மூன்று வகை உள்ளன. அவை வழுக்குதல், இறுக்குதல், அழுத்துதல் எனப் படும். உட்சுருள் ரம்பப் பல்விளிம்பின் (invoiute serration) அழுத்த கோணம் 45 ஆகும். சுருள் ரம்பப் பல் விளிம்பை உருவாக்கும் முறை, சுருள் காடி களைப் போன்றே இருக்கும். மூன்று விதமான பொருத்தும் முறைகள் (தளர்த்துதல், இறுக்குதல், அழுத்துதல்) வழக்கத்தில் இருந்தாலும், ரம்பப்பல் விளிம்பை உருவாக்கும் முறையில், நிரந்தரமான தொகுதியை உண்டாக்க அழுத்திப் பொருத்தும் முறையே பயன்படுகிறது. அவை இணையான மற்றும் கூம்புவடிவம் கொண்ட எந்திரத் தண்டுகளில் பயன் படுகின்றன. டி. இந்திரன் நூலோதி. Baumeister A. Avallone, Baumeister 111,Marks' Standard Handbook for Mechanical Engi- Edition, neers, Eighth Book Company, New York. 1978. McGraw -Hill காடுகளின் மண் வகைகள் காடுகளில் வளரும் தாவர வகைகளும் அவற்றின் உற்பத்தித் திறனும் அக்காடுகள் அமைந்துள்ள மண்ணின் பகுதிப்பொருள்கள், மண்ணின் அமைப்பு. மண்ணின் அடியில் இருக்கும் பாறைப் பொருள்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும். மர வகைச் சார்புடைய தாவரங்கள் மண்ணிலிருந்தே உரச்சத்து களையும் ஈரத்தையும் எடுத்துக் கொள்கின்றன. இவ்விரண்டும், தங்குதடையின்றிப் பெருமளவில் கிடைக்கும் மண் வகைகளிலேயே காடுகள் நன்கு வளரும். மண்ணில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். அதன் மூலமே ஆக்சிஜன் உட்சென்று கார்பன் டை ஆக்சைடு வெளியேற வாய்ப்பு இருக்கும். தாவர வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் கலவைப் பொருள்கள் மண்ணில் இருப்பது ஏற்றதல்ல. தாவரங்கள் வேர்களால் பற்றிக் கொண்டு உறுதி யாக நிற்பதற்கும் மண் உதவி புரிகிறது. மண்வகை, காடுகளின் மண்வகை வேளாண் மண் வகைகளிலிருந்து பல்வேறு விதங்களில் மாறுபட் டுள்ளது. பல்வேறு நாடுகளில் காட்டு மண்வகைகள் வேளாண்மைக்கு ஏற்றவையல்ல என ஒதுக்கப்படு கின்றன. தரமான மண்வகை பயிர்ச் சாகுபடிக்குக் கொண்டுவரப்படுகிறது. தரங்குறைந்தவை இயற்கைத் தாவரங்கள் வளரும் வகையில் விடப்படுகின்றன. காட்டு நிலங்கள் பொதுவாகப் பெரும் பாறைகளைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இம்மண் லகை வேளாண்மை நடைபெறும் மண் வகைகளை விட வயதில் குறைந்தது. மேலும் இது தனித் தாய்ப் பாறையிலிருந்து உருவாக்கம் பெற்றிருந்தால் இதிலுள்ள வேதிப் பொருள்கள் சமநிலையற்ற நிலையிலோ குறைபாடான நிலையிலோ இருக்கும். காட்டு மண் வகைகளை இயற்கையான உற்பத் திப்பொருள் அல்லது சற்றுத் திருத்தப்பட்ட உற் பத்திப் பொருள் எனலாம். ஆனால் வேளாண் மண்வகை நன்கு திருத்தம் செய்யப்பட்ட செயற்கை மண் வகையாகும். காட்டு மண்வகை கன்னி நிலங்கள் ஆகும். அவை இயற்கையான மண் அடுக்கு களையும் கரிம அடுக்களையும் கொண்டவை. பெரும் பாலான வேளாண் மண்வகையில் இந்தத் தூய கரிம அடுக்குகளைக் காண்பது அரிது. அவற்றின் மேல் அடுக்கு, பயிர்ச் சாகுபடியால் பெருமளவு மாறுதல் அடைந்து இருக்கும். வேளாண் நிலங்களில் பலவித ஊட்டச்சத்துப் பொருள்கள் சேர்க்கப்படுவதால் அவற்றில் ஒரு செயற்கை வேதித் தன்மை உண்டா கிறது. காட்டு மண் வகை அமைப்பு. காட்டு மண் வகைகள் பல்வேறு வகையான தாய்ப் பொருள்களி லிருந்து உருவாகின்றன. அவை மாறுதலடைந்த பாறை, மணற்பாறை வண்டல், செம்பொறை