216 காடுகளின் மண் வகைகள்
216 காடுகளின் டிண் வகைகள் முதலியன ஆகும். காடுகளின் நில அமைப்பு, சமவெளி களைத் தவிர ஏனைய இடங்களில் பெரும்பாலும் மேடு பள்ளங்களாக மாறி இருக்கும். மண்ணிற்கும் வளரும் தாவரங்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அதாவது குறிப்பிட்ட மண் வகையில் குறிப்பிட்ட வகைத் தாவரம்வளரும் தன்மையைக்காண முடியும். அல்ஃபிசால், அல்டிசால் மண் வகைகளில் 2500 மிமீ. மழைப் பொழிவுள்ள இடங்களில் இலையுதிர் காடு களும், 2500-3000மி.மீ. மழை பெய்யும் இடங்களில் பகுதி பசுமை இலைக்காடுகளும் உருவாகின்றன. பசுமை இலைக்காடுகளும் (3000 மி.மீ மழை), பகுதி பசுமை இலைக்காடுகளும் (2500-3000 மி.மீ. மழை) உள்ள இடங்களில் இன்செப்டிசால் மண் வகை அமைந்துள்ளது. என்டிசால் மண் வகை மித வெப்ப மண்டல அகன்ற இலைக்காடுகள் உருவாக உதவும். மாலிசால் மண்வகை, பனி மூட்ட இலையுதிர்காடு களும், வெப்ப மண்டலச் சாவன்னா புல் வெளி களும் உருவாகும் இடங்களில் காணப்படும். வன மண் வகைகளின் அடுக்கமைப்பு விவரம். வன மண்,யுடிக் ஹேப்லஸ்டால்ஃப்ஸ் (udic haplus- talfs) குடும்பத்தைச் சேர்ந்தது. அது மணற்பாங்கான இருபொறைத்தன்மை, கலப்புத்தன்மை, ஒரே சீரான உயர் வெப்பமுள்ள தன்மை கொண்டுள்ளது. அழுத்த மான செம்பழுப்பு நிறம் முதல் செம்பழுப்பு நிறமும் இலேசான அமிலத்தன்மை முதல் அமிலமே இல்லாத நடுநிலைத் தன்மையும் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 600. 650 மீ உயரமும் 5 - 179 சரிவும் கொண்ட மலைச்சாரல்களில் காணப்படுகிறது. வள மண் வகை. காடுகளின் மண் வகை ஐந்து ஆகும். அவை முறையே, என்டிசால்கள், இன்செப்டி சால்கள், அல்ஃபிசால்கள், அல்டிசால்கள், மோல்லி சால்கள் எனப்படும். என்டிசால். இது ஆழம் குறைந்தது முதல் ஓரளவு ஆழம் உடையது வரை இருக்கும். பருமனான இரு பொறை மண்ணாகும். மிகக் கூடுதலான அளவில் நீர் வடியும் தன்மை கொண்டது. மிகக் குறைந்த அளவி லேயே ஊட்டச்சத்துக் கொண்டிருக்கும். இவ்வகை மண் மலையுச்சிகளிலும் காட்டு நிலங்களின் சரிவுகளி லும் காணப்படும். பெரும்பாலும் இம்மண் வகையில் மித வெப்ப மண்டல அகன்ற இலைக்காடுகள் காணப்படும். இன்செப்டிசால். இது ஓரளவு ஆழம் முதல்மிக ஆழ மானது வரை இருக்கும். இது நன்கு நீர் வடியும் தன்மை கொண்டது. இதன் கீழ்மட்ட அடுக்கு உறுதி குறைந்ததாக இருக்கும். வ்வகை மண் மலை அடிவாரப் பகுதிகளில் காணப்படும். பசுமை லைக் காடுகளும் பகுதி பசுமை இலைக்காடுகளும் இதில் காணப்படுகின்றன. அல்ஃபிசால். து ஆழமானது. அடர் பழுப்பு நிறம் கொண்டது. நன்கு நீர் வடியும் தன்மை உடை யது. பெருமளவில் கார அயனி தெவிட்டிய நிலை பெற்றது. சமவெளிக்காடுகள் உள்ள இடங்களில் இம்மண் வகை இருக்கும். இலையுதிர்காடுகளும் பகுதி பசுமை லைக்காடுகளும் இங்குக் காணப் படுகின்றன. அல்டிசால். இது ஆழமான மண். பழுப்பு நிறமும் நன்கு நீர் வடியும் தன்மையும் கொண்டது. இதன் கார அயனி நிலை குறைந்த அளவிலேயே இருக்கும். இது மலைச்சரிவுகளில் பரவியிருக்கும். இங்குப் பெரு மளவில் லையுதிர் காடுகள் காணப்படும். மோல்விசால். இது மிக ஆழமான மண் வகை. அடர் பழுப்பு நிறம் கொண்டது. கரிமப் பொருளைப் பெருமளவில் பெற்றிருக்கும். மிக லேசானது முதல் ஓரளவு வரை சரிவு கொண்ட நிலங்களில் இம்மண் வகை காணப்படும். இங்கு ஈரமான இலையுதிர் காடுகள், வெப்ப மண்டலச் சாவன்னா புல் வெளிகள், ஈரமான பசுமை லைக்காடுகள் ஆகியவை காணப் படும். மரங்களின் வளர்ச்சியில் நல்லதொரு சூழலாக மண் அமையும் விதம் காடுகளிலுள்ள மரங்களின் வேர்கள் மண்ணினுள் 4-5 மீட்டர் ஆழம் வரை செல்கின்றன. அடித்தளத் தில் இருபொறைத் தன்மையுள்ள மண்ணில் இதை விடச் சற்று குறைந்த ஆழம் வரையே வேர்கள் பரவுகின்றன. இருபொறை மண்ணில் வேர்கள் அடர்ந்து பருக்கின்றன. மண்ணிலுள்ள காற்றோட் டத்தின் காரணமாக வேர்களின் வளர்ச்சி பெரு மளவில் பாதிக்கப்படுகிறது. மண்ணிலுள்ள காற்றில் ஆக்சிஜன் 9-12 %க்கும் குறைவாக இருக்கும்போது மரத்தின் வளர்ச்சி தடைப்படுகிறது. அதே சமயம் மண்ணிலுள்ள கார்பன் டைஆக்சைடு அளவு கூடுத லாக இருக்குமானால் அதுவே தாவரத்தின் வளர்ச் சிக்கு இடையூறாகிவிடும். மண்ணிலுள்ள காற்றில் கார்பன் டைஆக்சைடு 1%க்கும் கூடுதலாகாமல் இருப்பதே தாவர வளர்ச்சிக்கு ஏற்ற சூழ்நியை லையாகும். மண்ணில் ஹைட்ரஜன் சல்ஃபைடு இருப்பது தாவரத் துக்குக் கேடு தரும். வன மரங்கள் மண்ணிலிருந்து பல்வேறு அளவுகளில் நீரையும் ஊட்டச்சத்துகளை யும் எடுத்துக் கொள்கின்றன. வெவ்வேறு வகையான மரங்கள் இலைகளின் மூலம் ஆவியாகும் நீரின் அளவு அட்டவணையில் தரப்பட்டுள்ளது. வன மரங்களின் ஊட்டச்சத்துத் தேவை. பைன், ஸ்புருஸ் போன்ற ஊசியிலை மரங்களும், பிர்ச் மரமும் பெருமளவில் நைட்ரஜனை எடுத்துக் கொள்கின்றன. அகன்ற இலை கொண்ட மரவகைகள் மிக அதிக அளவில் கால்சியச் சத்தையும், ஓக் மரங்கள் சிலிகான் சத்தையும், பிர்ச் மரங்கள் சாம்பல் சத்தையும் எடுத்துக் கொள்கின்றன. அனைத்து வகை மரங்களும்