218 காடை
218 GFØL கின்றன. அதில் பரிமாற்ற நிலையிலுள்ள சோடியம் அளவில் உள்ளது. இந்தச் குறிப்பிடும்படியான சோடியம் மண்ணிலுள்ள ஊட்டச்சத்துக் கரைசலில் சோடா உப்பின் அளவை உயர்த்திவிடுகிறது. இது தாவரத்திற்குத் தீமைதரும். + . வன மண்வகைகளின் வளம். நாற்றுகள் பறிக்கப் படுவதாலும், பெய்யும் மழையால் கரையும் ஊட்டச் சத்துகள் நிலத்தின் கீழ் அடுக்குகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாலும் மண்ணிலுள்ள ஊட்டச்சத்து கள் நீக்கப்பட்டு விடுகின்றன. இதை ஈடுசெய் வதற்காக வேதி உரங்கள் மண்ணில் சேர்க்கப்பட வேண்டும். வேதி உரம் இடுவதால் மண்ணிலுள்ள ஊட்டச்சத்துக் கனிமங்களின் விகிதம் மாறுபட்டுக் கன்றுகளின் வளர்ச்சிக்கும் உருவாக்கத்திற்கும் ஏற்ற நிலையாக மாறுகிறது. மேலும் மண்ணின் நிலவியல் தன்மையையும் மேம்படுத்தி இயல்பாகவே மண்ணி லுள்ள பகுதிப் பொருள்களைக் கலவைகளாக மாற்றி வேர்களுக்குக் கிட்டும் வண்ணம் ஆக்குகிறது. மண்ணில் நைட்ரஜன், கால்சியம், மக்னீசியம். இரும்பு ஆகியவை போதுமான அளவில் இல்லா திருந்தால் மரங்களின் இலைகள் மஞ்சள் நிறம் அடைந்துவிடும். மணிச்சத்துக்குறைபாடு வெளிர்நீலம் முதலாகக் கருநீலம் வரை வண்ணத்தைத் தோற்று விக்கும். சாம்பல்சத்துக் குறைபாடு வெளிர் பச்சை நிறத்தை உண்டாக்கும். நாற்றங்கால் நிலையிலேயே வேதி உரம் இடப் படுகின்றது. பின்வரும் உரங்களை நாற்றுகளுக்குப் பயன்படுத்தலாம். கரிம உரங்கள் பசுந்தாள் உரங்கள் சாம்பல் உரம் கனிம உரங்கள்
- நீர்ம உரம், மட்கிய உரம்,
பீட், மட்கிய பீட் சணப்பை, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி அடுப்புச் சாம்பல், மட்கிய கரிமச் சாம்பல் மணிச்சத்து,
- நைட்ரஜன்,
பாஸ்ஃபரஸ் உரங்கள், சுண் ணாம்பு, மக்னீசியம் நுண்ணுயிர் உரங்கள்: பொருத்தமான நுண்ணு யிரையும், பூசணத்தையும் மண்ணில் கலந்து விடுதல். பய முதிர்ந்த மரங்களுக்கு உரமிடுவதால் னில்லை. ஆனால் அமிலத் தன்மையுடைய மணல் சார் மண்ணிலும், மணல் இருபொறை மண்ணிலும் ஹெக்ட்டேருக்கு 5-8 டன் கால்சியம் சேர்ப்பது நல்ல பலனைக் கொடுத்துள்ளது. என்டிசால் மண் வகை அமைந்துள்ள மலை யுச்சிகளிலும், சரிவு நிலங்களிலும் நிலக்காப்புக் காடுகள் வளர்க்கப்படலாம். மோல்லிசால் மண் வகைகளில் தகுந்த மேலாண்மை முறைகள் கடைப் பிடிக்கப்பட்டுக்காடு வளர்ப்பு முனைப்புடன் மேற் கொள்ளப்படலாம். இன்செப்டிசால் மண் வகை களுக்கு அறுவடைத் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்திச் செய்யும் நடுத்தர உற்பத்தி வனங்கள் வளர்ப்பு, பொருத்தமாகும். இவ்வனங்களை மிகு சரி வான இடங்களில் வளர்த்தால் மரம் வெட்டுவதை யும் கால்நடை மேய்ப்பதையும் தவிர்க்க வேண்டும். அல்ஃபிசால், அல்டிசால் மண்வகைகளில் சாகுபடி முறைகளை முனைப்புடன் பின்பற்றி காடுகளை வளர்ப்பது சிறந்தது. காடை சுவை உற்பத்திக் -டி. எஸ். மாணிக்கம் மயில், கவுதாரி, காட்டுக்கோழி, சுண்டாங்கோழி ஆகிய பறவைகள் சேர்ந்துள்ள பாசியனிடே குடும்பத் தைச் சேர்ந்தது காடை. இக்குடும்பத்தில் உருவத்தில் மிகச்சிறியதாகவும் உருண்டு திரண்ட உடலோடும் குறுகிய வாலோடும் உள்ள இதைத் தமிழில் குறும் பூழ் என்பர். புல்வெளிகளிலும் புன்செய் நிலங்களிலும் பயிர் விளைந்துள்ள விளைநிலங்களிலும் தரையோடு தரையாக ஒட்டிச் சிறு கூட்டமாகத் திரியும் இதை இறைச்சியின் கருதி வேட்டைக்காரர்கள் விரும்பி வேட்டையாடுகின்றனர். வீட்டுக் கோழி யைப்போலவே இதுவும் நெடுந்தொலைவு பறக்கும் ஆற்றலை இழந்து விட்டது. எனினும் தரையிலேயே இரைதேடித் திரியும் இது வேகமாக ஓடித் தப்புவதற் கேற்ற உறுதியான கால்களைப் பெற்றுள்ளது. உருவம், நிறவேறுபாடு, வாழும் சூழல் ஆகியவற்றின் காரண மாக இதைப் புதர்க் காடை (jungle bush quail). வண்ணக் காடை (painted quail) செங்காட்டுக் காடை (laterite bush quail) பெரிய சாம்பல் காடை (grey quail) மஞ்சள் கால் குறுங் காடை (yellow (legged button quail) என வகைப்படுத்தியுள்ளனர். புதர்க் காடை. இதன் உடலின் மேற்பகுதி சிவப்பும் மஞ்சளுங்கலந்த பழுப்பு நிறமாக இருக்கும். கறுப்பும் வெளிர் மஞ்சளுமான கறைகளும் கோடு களும் உடலின் மேற்பகுதியில் காணப்படும். மார்பும் வயிறும் கறுப்புப் பட்டைகளோடு கூடிய வெள்ளை நிறமாக இருக்கும். இரவில் புதர்களைப் புகலிடமாகக் கொண்டு தங்கும் இது சிறுசிறு குழுக் களாகப் பிரிந்து வெளிப்பக்கம் பார்த்தவாறு படுத்தி ருக்கும். காலால் மிதிக்கும் அளவுக்கு மனிதர் மிக நெருங்கி வரும்வரை அமைதியாக இருக்கும். ஒரே சமயத்தில் எழுந்து 'விர்ர்' என இறக்கை அடித்த