காடை 219
காடை 219 ஒரு வாறு நாலாத் திசைகளிலும் பறக்கும். சற்றுத் தொலைவு பறந்தவுடன் மீண்டும் குழுவாகச் சேர்ந்து கொள்ளும். நீர் குடிக்க வரும்போதும் புல்வெளியைவிட்டு மற்றொரு புல்வெளிக்குச் செல்லும்போதும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாகச் செல்லும் காட்சி காணத் தக்கது. 'வ்வி, வ்வீ வும் 'ச்சீ.. ச்சக், ச்சீ, எனவும் இனப்பெருக்க ST GOT காலத்தில் ஆண் குரல் கொடுக்கும். ஆகஸ்ட்-ஏப்ரல் வரை இனப்பெருக்கம் செய்யும் இது புல்புதர்களின் ஓரத்தில் தரையில் புல்லால் கூடமைத்து 4-8 வரை வைக்கோல் நிறத்திலான வெளிர் நிற முட்டைகளை இடும். சிறு தானியங்களோடுகூடப் புல்விதைகள், ளந்தளிர், கறையான், சிறு புழுபூச்சி ஆகியவற்றை து உணவாகக் கொள்கிறது. வண்ணக் காடை. ஆவில் இதன் தலை சுறுப்பு; உடல் பழுப்பாக வெண் கோடுகளோடும் கருங் கறைத் திட்டுகளோடும் காணப்படும். இதன் மார்பும் வயிறும் செம்பழுப்பாகப் பல வண்ணக் கறைகளை யும் திட்டுகளையும் கொண்டு திகழ்வதால் இதை வண்ணக் காடை என்பர். நீர்வளம் செறிந்த மலைப் பகுதிகளில் உயர்ந்து வளரும் புல்வெளிகளிடையே மட்டும் காணப்படும் இதன் பிற பழக்கவழக்கங்கள் முந்தைய புதர்க் காடையை ஒத்தனவே. காட்டுவழி களில் புழுதியில் புரண்டு கிடக்கும் இது மக்கள் நெருங்கும்போது பிற காடை இனங்களைப் போல அஞ்சி ஓடுவதில்லை. பெண் மட்டும் தரையில் பட்ட முட்டைகளை அடைகாக்கும். குஞ்சுகள் விரைவில் ஓடவும் பறக்கவும் ஆற்றல் பெற்று விடு கின்றன. டப் செங்காட்டுக் காடை மைசூர், ஆந்திரா ஆகிய பகுதிகளில் செம்மண் காடுகளில் திரியும் இதன் உடலின் மேற்பகுதியும் இறக்கை வால் ஆகியவையும் சிவப்பு நிறமாக இருக்கக் காணலாம். வாழும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப உயிரினங்களின் வண்ணங்கள் பெறும் மாற்றத்திற்கு இதைச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம். பிற பழக்க வழக்கங் களில் இது புதர்க் காடையை ஒத்ததே. வடிவ தன் பெரிய சாம்பல் காடை, இந்தியாவில் காணப்படும் காடைகளுள் இதுவே உருவில் பெரியது. உடம்பின் மேற்பகுதியில் செம்பழுப்பும் கறுப்புமான புள்ளிகளும் கோடுகளும் நிறைந்திருக்கும். கழுத்தின் குறுக்கே கறுப்பு வளையம் ஒன்றைப் பெற்றுள்ள இதன் மார்பு வெளிர் கருஞ்சிவப்பாக இருக்கும். வடக்கே இருந்து குளிர்காலத்தில் வலசை வரும் இது வழியில் வேட்டைக்காரர்களுக்கும் விபத்துக்களுக்கும் உள்ளாகிப் பெரும் அளவில் இறந்துவிடுகிறது.தென் இந்தியாவில் குளிர் காலத்தில் புதர்களிடையேயும் ஓடைக்கரைகளிலும் தனித்தோ ஆணும் பெண்ணு மாகவோ திரியும் இது கண்ணில் படுவது அரிது. வைகறையிலும், மங்கிய மாலைப் பொழுதிலும் இடைவிடாமல் கொடுக்கும் குரலிலிருந்து இது இருப்பதை அறிந்து கொள்ளலாம். ஆள் வரும் ஒலி கேட்டவுடன் 'விர்' என இறக்கையடித்துச் சிறு சீழ்க்கை ஒலி எழுப்பியவாறு பறந்து சென்று மீண்டும் தரை இறங்கும். தென் இந்தியாவில் மிக அரிதாகவே இது இனப்பெருக்கம் செய்கிறது. இனப் மழைக் காடை. இது தோற்றத்தில் முந்தைய பெரிய சாம்பல் காடையை ஒத்தது.எனினும் இனப்பெருக்கம் செய்யும் மழைக்காலத்தில் இதன் அலகும் கால்களும் முறையே மஞ்சளாகவும் வெளிர் சிவப்பாகவும் நிறமாற்றம் பெறுகின்றன. ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்போது பெரும் எண்ணிக்கையில் வடக்கே யிருந்து வரும் இவை தென்னாட்டில் பெருக்கம் செய்தபின் மழைக்காலம் முடிந்தவுடன் குஞ்சுகளோடு மீண்டும் வடக்கே சென்றுவிடுகின்றன. மழைக்காலத்தில் பெரும் எண்ணிக்கையில் எங்கும் காணப்படுவதால் இதை மழைக்காடை என்பர். மேகமூட்டமான நாள்களில் தொடர்ந்து பகல் முழுதும் 'விச்,, விச்., விச், எனக் குரலெடுத்துக் கத்திக்கொண்டு இருக்கும். பிற பழக்க வழக்கங்கள் பெரிய சாம்பல் காடையை ஒத்தனவே. குறுங்காடை. மழைக் காடை அளவினதான தன் உச்சந்தலை பழுப்பாகவும் தலையின் பக்கங்கள் கரும்புள்ளிகளோடுகூடிய வெண்மை நிறம் கொண்ட தாகவும் இருக்கும். உடலின் மேற்பகுதி கருஞ் சிவப்பான பழுப்புநிறமாகவும் மார்பும் வயிறும் மங்கிய மஞ்சள் நிறமாகவும் இருக்கும். மார்பில் சிறுசிறு கறுப்பு நிறக்கோடுகள் காணப்படும். பிற காடைகளைப் போலக் கூட்டமாகத் திரியாமல் தனித்தோ இணையாகவோ புதர்களிலும் புல்வெளி களிலும் மறைந்து திரியும். காடுகளில் பழுத்து விழுந்த அழுகிய இலைகள் புதிதாகக் கிளரப்பட்டி ருப்பது கொண்டு இது அந்த வட்டாரத்தில் இருப் பதைத் தெரிந்து கொள்ளலாம். புல்விதை, சிறு தானியம், பசுமுளை, புழுபூச்சி ஆகியவற்றை உண வாகக் கொள்ளும். 'ட்டிர்ர்ர்.. ட்டிர்ரர். ட்டிாார்". என மோட்டார் வண்டி எழுப்பும் ஒலியைப் போலப் பெண் பறவை இனப்பெருக்க காலத்தில் குரல் கொடுத்து ஆணுக்குத் தன் இருப்பிடத்தை உணர்த்தும், மார்பைத் தரையோடு பொருத்திப் படுத்தபடி 'லூன்., லூன்., லூன். ' எனக் குரல் கொடுக்கவும் செய்யும். ஜுன் - செப்டம்பர் யான இனப்பெருக்கப் பருவத்தில் இது திரியும் பகுதி யில் நாள் முழுதும் இக்குரலொலியைக் கேட்கலாம். விளைநிலங்களில் பயிரிடையே அல்லது புதர்களி டையே தரையைப் புல்லால் மென்மையாக்கிச் செம் பழுப்பு நிறக்கறைகளும் சுறுத்த ஊதா நிறக் கறை களும் கொண்ட கருஞ்சாம்பல் நிறந்தோய்ந்த வெண்மை நிறத்தில் 4 முட்டைகள் இடும். வரை