4 களிக் கனிமங்கள்
களிக் கனிமங்கள் அளவில் இருக்கும். சூலகப்பை (ovary) 2 மி.மீ. அளவும், சூலகத்தண்டு 8 மி.மீ. நீளமும், சூலகமுடி கூர்மையும் கொண்டு இருக்கும். பழம் உண்ணத் தக்கது. காய்களை மே மாதத்திலும் பெருமளவில் ஆகஸ்டு-செப்டம்பர் மாதங்களிலும் பெறலாம். கனி இனிப்பாயிருக்கும். பழங்களைப் பாகு. ஜெல்லி முதலியவை செய்யவும், தோல் பதனிடவும். சாயம் தயாரிக்கவும் பயன்படுத்தலாம். காய்களைக் கொண்டு ஊறுகாய் தயாரிக்கலாம். இலைகளை டஸ்ஸார் பட்டுப்புழுவிற்கு உணவாகத் தரலாம். கிளாவை வேலியாகவும் வளர்க்கலாம். மரம் வெண்மையாகவும் கடினமாகவும் வழுவழுப் பாகவும் இருக்கும். இம்மரத்திலிருந்து சீப்பு, அகப்பை முதலியன செய்யலாம். முள் நிரம்பியுள்ளமையால் பெரும்பாலானவற்றை வேலியாக வளர்க்கலாம். களாக்காயில் வைட்டமின் C மிகுதியாகவுள்ளது. இதன் பூ, காய், பழம், வேர் முதலியவை மருத்துவத் தன்மை மிகுந்தவை. சிறிய பெரிய இளங்காய்களைப் பச்சையாக உண்ணலாம். காயைப் பறித்ததும் பால் வெளிவரும். சிறுகளாவிற்குக் கேரிஸ்ஸா ஸ்பைனாரம் (Carissa spinarum) என்று பெயர். இதைக்கேரிஸ்ஸா டிஃபுயூசா (Carissa diffusa) என்றும் கூறுவர். இதன் கிளைகள் பக்கத்திற்குப் பக்கம் வளைந்து வரும். இது பர்மா. ஸ்ரீலங்கா, இந்தியா போன்ற நாடுகளின் சமவெளி. மலைப்பகுதிகளில் 900 மீட்டர் உயரம் வரை வளர் கிறது. பூக்கள் வெண்மையாகவும் வெளிப்பக்கம் செம்மை நிறமாகவும் இருக்கும். இது பிப்ரவரி ஏப்ரல் வரை மிகுதியாகப் பூக்கும். இது 2-3 மீட்டர் இதன் உயரம் வளரக்கூடிய புதர்ச்செடியாகும். முள் 3 செ.மீ. நீளமாகத் தனித்தோ இரண்டாகக் கிளைத்தோ இருக்கும். வைகள் நீள்வட்ட வடிவில் இருக்கும். அடியி லுள்ள இலைகள் சற்று வட்டமாக இருக்கும். இலை கள் 3-4.5×1.5-3 செ.மீ. அளவுடன் நுனி அடிப் பகுதிகளில் கூராக இருக்கும். இலைக்காம்பு 3 மி.மீ. நீளம் இருக்கும். பூக்கள் 5 - 7 எண்ணிக்கையில் பூக்கும். பூக்கள் இலைக்கக்கத்திலும் தோன்றியிருக் கும். மஞ்சரித்தண்டு 3 மி.மீ. நீளமிருக்கும். புல்லி வட்டத்தில் 5 மடல்கள் ஈட்டி வடிவில் கூரிய நுனி யைப் பெற்று 2.5 மி.மீ. அளவில் இருக்கும். அல்லி வட்டம் 1.5 செ.மீ. குறுக்களவுடன் 1.4 செ.மீ. குழாயையும் 0.7 செ.மீ. அளவுள்ள மடல்களை யும் நீள்வட்ட வடிவில் பெற்றிருக்கும். மகரந்தத் தாள்கள் ஐந்தும் ஏறக்குறைய அல்லிவட்டக் குழலின் நடுப்பகுதியில் இணைந்திருக்கும். இத்தாள்கள் 3 மி.மீ. நீளமும், மகரந்தப் பைகள் 1-8 மி.மீ. அளவும் பெற்றிருக்கும். சூலகப்பை 1 மி.மீ. சூலகத்தண்டு 4 மி.மீ. அளவிருக்கும்; சூலகமுடி பிளவுற்றிருக்கும். குறுக்களவில் உருண்டையான காய்கள் 8 மி.மீ. பச்சையாகக் கூரிய நுனியுடன் இருக்கும். கோ. அர்ச்சுணன் நூலோதி.K. M. Mathew The Flora of the Tamilnadu Camatic, St. Joseph's College, Tiruchira- palli, 1983. களிக் கனிமங்கள் இவை நீரேற்ற அலுமினிய சிலிக்கேட்டுகள் ஆகும். இந்த இனத்தைச் சார்ந்த பல கனிமங்கள் உள்ளன. இவை களிமண், வெண்களிமண், களிப்பாறை (shale), களிக்கல் (mud stone), பனி ஆற்றுப்படிவு முதலியன வாகக் காணப்படுகின்றன. களிக்கனிமங்கள் பொதுவாகக் கயோலினைட் இனம், மாண்ட்மாரிலோனைட் இனம், பொட்டாசி யம் களி அல்லது நீர் கலந்த அபிரக இனம் என மூவகையாகக் கருதப்பட்டு வந்தன. சுயோலினைட், டிக்கைட் நேக்ரைட், ஹல்லாய்சைட் முதலியன முதல் எண்கோணம் 6-மடிப்பு நாற்கோணம் WW 4. மடிப்பு Al Si Al Al Si 3Si Al 147 கயோலினை னட் எதிரயனிகள் Si: Al Mg,Fe Mg(OH), H, O மாண்ட்மாரிலோனைட் அபிரகம் (1) மாண்ட்மாரி மஸ்கோவைட் குளோரைட் R [k+H,01 + Si-Al இல்லைட் லைபு லோனைட் (2) படம் 1 . களிக்களிமங்களின் பதப்பயனீட்டாய்வு சீரானது மாறுபாடுடையது கட்டமைப்பு