220 காடை
220 காடை மஞ்சள் கால் குறுங்காடை. இதன் உச்சந்தலை கருஞ்சிவப்பும் வெளிர் மஞ்சளும் கலந்த சுறுப்பு நிறமாக இருக்கும். தலையின் பக்கங்கள் வெளிர் மஞ்சள் நிறங்கொண்டவை. உடலின் மேற்பகுதி கருஞ்சாம்பல் நிறந்தோய்ந்த பழுப்பு நிறத்தில் இடை யிடையே சிறிய கறுப்புப் பட்டைகளையும் கோடு களையும் கொண்டிருக்கும். ெ தொண்டையின் நிறம் வண்மை. மார்பும் வயிறும் வெளிர் மஞ்சள் நிறங் கொண்டவை. நடு மார்பில் துரு நிறக் கறைத் திட்டும் வயிற்றின் பக்கங்களில் உள்ள கறுப்புக்கறைத் திட்டுகளும் இதன் உடலுக்கு மேலும் அழகு சேர்ப் பன. கால்கள் மஞ்சள் நிறங்கொண்டவை. ஆணைவிடச் சற்றுப்பருத்த தோற்றம் கொண்டிருப்ப தோடு கழுத்தில் ஆழ்ந்த சிவப்புக் கழுத்துப் பட்டை யும் பெற்றிருக்கும். சமவெளிகளிலும் மலைகளிலும் வறண்ட புல்வெளிகளைச் சார்ந்து திரியும் இதன் பிற பழக்க வழக்கங்கள் குறுங்காடையின் பழக்க வழக்கங்களை ஒத்துள்ளன. 4 பெண் காடைகள் குறைந்த தீவனத்தை உண்டு குறுகிய இடத்தில் வளரக்கூடியவை. விரைவில் பருவ மடைந்து அதிக முட்டைகளிட்டு இனப்பெருக்கம் செய்யும் பண்புகளையும் பெற்றுள்ளன. காடைகள் ஆண்டொன்றுக்கு 3-4 முறை வரை இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடையவை. பெட்டைகள் 5-6 வாரத்தில் பருவம் அடைந்து முட்டையிடத்துலங்கும். ஓர் ஆண்டில் சராசரியாக 250-300 முட்டைகள் வரை இடும். இவை சிறிய உடல் அமைப்புக் கொண்டுள்ளமையால் ஒரு கோழி வளர்க்கக் கூடிய டத்தில் சுமார் 8-10 காடைகளை வளர்க்கலாம். இளப்பெருக்கம், இவை ஆண்டு முழுதும் இனப் பெருக்கம் செய்கின்றன முட்டைகள் மெல்லிய ஓடு காடை களைக் கொண்டு காணப்படுவதால் கவனமாகச் சேகரித்தால் உடைந்து சேதமடைய வாய்ப்புகள் இரா. இனப்பெருக்கத்திற்குக் காடைகளைப் பராமரிக்கும் போது அவை 10-24 வார வயதுடையவையாக இருக்க வேண்டும்.ஆண் காடையை 3 பெட்டை களின் இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தலாம். இனப் பெருக்க காலங்களில் தரமான, சத்துள்ள தீவனம் கொடுக்க வேண்டும். ஆண்காடைகளின் அலகைக் குை றைத்து விடவேண்டும். காடை முட்டைகளைச் செயற்கை முறையில் அடை காப்புக் கருவி மூலம் குஞ்சு பொரிக்கச் செய்ய லாம். காடைக் குஞ்சுகள் பொரிந்து வெளிவர 18 நாளாகும். வளர்ப்பு முறை. குஞ்சுகளை ஆழ்கூள முறை யிலும் மற்றும் செயற்கை முறை அடைகாக்கும் கருவி யிலும் வளர்க்கலாம். தொடக்கத்தில் 100°F வெப்ப மும், பின்னர் மெதுவாகக் குறைத்து மூன்றாம் வாரத் தில் 70°F இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண் டும். ஒவ்வொரு குஞ்சுக்கும் வளரும் காலத்தில் 75 ச.செ.மீ. பரப்பளவு தேவை. முட்டையிடும் பருவத் தில் 200-250 ச.செ.மீ. பரப்பளவு தேவை. வளரும் காலத்தில் பழுப்பு நிறச் சிறகுகள் காண்ட ஆண் காடைகளைப் பெண் காடைகளிலி ருந்து பிரித்து விட வேண்டும். ஆறாம் வாரத்தில் பெட்டைக் காடைகளை முட்டையிடும் கூண்டுகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும். இரவு முழுதும் வெளிச்சம் தேவையில்லை. 12 மணி நேரம் இருட்டுத் தேவை. காடைகளைக் கொழுக்க வைக்க வேண்டுமானால் மட்டும் 8 மணி நேரம் வெளிச்சமும் 16 மணி நேரம் இருட்டும் அளிக்க வேண்டும். முட்டையிடும் பருவத் தில் 16 மணி நேரம் வெளிச்சம் தேவை.