காண்டாமிருகம் 223
செராட்டின் என்னும் பொருளாலானவை. கொம்பு உடைந்தால் மீண்டும் வளரும் தன்மையுடையது. காண்டாமிருகங்கள் 50 ஆண்டுகள் வரை வாழக் கூடியன என்று நம்பப்படுகிறது. காண்டாமிருகக் கொம்பு இணைவிழைச்சுப் பொருளாகப் (aphrodiasic) பயன்படுகிறது என ஆசிய மக்கள் நம்பியதால் காண்டாமிருகங்கள் பெருமளவில் வேட்டையாடப் பட்டுக் கொல்லப்பட்டன. மேலும் அவற்றின் கொம்பு களிலிருந்து அழகிய கோப்பைகள் செய்யப்பட்டன. ஆசியாவிலும், ஆஃப்ரிக்காவிலுமுள்ள காண்டா மிருகங்களின் எண்ணிக்கை மிகுதியாகக் குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்த இந்தியக் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை தற்போது சில நூறு என்னும் அளவில் குறைந்து விட்டது. ஏறத்தாழ 170-500 சுமத்ரா காண்டாமிரு கங்களே எஞ்சியுள்ளன எனக் கூறப்படுகிறது. சுமத்ரா காண்டாமிருகம். இன்று வாழும் காண்டாமிருகச் சிறப்பினங்களிலேயே இது மிகவும் சிறியது. காண்டாமிருக வகை மென்மயிர் போர்த்திய உடல் பெற்றுள்ளது. உடல் நீளம் 250-280 செ.மீ; உயரம் 110-150 செ. மீ; இதற்கு 2 கொம்புகள் காண்டாமிருகம் 223 உள்ளன. முன் கொம்பு ஏறக்குறைய 25 செ.மீ. நீள முடையது. பின்கொம்பு சிறிய மொட்டுப் போன்றது. தோலில் பல மடிப்புகள் உள்ளன. காதுகளில் மயிர்க் கொத்துக்கள் காணப்படுகின்றன. வயதாகும்போது தோல் மெல்லியதாகி விடுகிறது. முன்பு இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலும், இந்தோனேசியாவிலும் பரவலாகக் காணப்பட்ட காண்டாமிருகம் தற் போது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. மார்க்கோபோலோ, சுமத்ரா காண்டாமிரு கத்தைக் கிழக்கு ஆசியாவில் மலேசியப் பகுதிகளில் பார்த்தார். இயற்கைச் சூழலில் இதன் பழக்கவழக் கங்களைப் பற்றிய முழுமையான குறிப்புகள் கிடைக்க வில்லை. ஆனால் இந்த இனம் மிக விரைவில் அற்றுப் போய்விடும். சுமத்ரா தீவில் சில நூறு சுமத்ரா காண்டாமிருகங்களும் போர்னியோ, பர்மா, தாய் லாந்து, மலேசியா ஆகிய பகுதிகளில் ஒருசிலவும் வாழ் வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இவற்றின் இயற்கை வாழிடங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருவதாலும் இவ்வினம் காணப்படும் இடங்களில் வாழும் சீனர்கள் இவற்றை வேட்டையாடுவதாலும் இவற்றைக் காப்பது எளிதான செயலன்று. சுமத்ரா காண்டாமிருகம்