224 காண்டாமிருகம்
224 காண்டாமிருகம் இந்தியக் காண்டாமிருகம். உடல் நீளம் 210-240 செ.மீ; உயரம் 110-200 செ.மீ; எடை 1500-2000 கி.கி. பெண் பெண் காண்டாமிருகங்கள் சற்று உருவில் சிறியவை. தோல் பெரிய மடிப்புகளால் பல பகுதி களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உடலின் சில பகுதிகளில் மட்டுமே மயிர் காணப்படுகிறது. ஒவ்வொரு காலிலும் மூன்று விரல்கள் உள்ளன. நகங்களுக்கடியில் உள்ள தசைத் திண்டுகள் காலைத் தூக்கும்போது வெளிப்படு கின்றன. மேலுதட்டில் ஒரு விரல் போன்ற அமைப்பு உள்ளது. கீழ்த்தாடையிலுள்ள கூர்மையான கோரைப் பற்கள் தற்காப்பு உறுப்புகளாகப் பயன்படுகின்றன. மேல் தாடையில் கோரைப் பற்கள் இல்லை. ரைனோசெராஸ்பொதுவினத்தில் ரினோசெராஸ் யுனிக்கார்னிஸ் எனப்படும் இந்தியக் காண்டாமிருகம் (Rhinoceros unicornis) ரை. சாண்டைக்கஸ் எனப் படும் ஜாவா காண்டாமிருகம் (R. Sondicus) ஆகிய இரண்டு சிறப்பினங்கள் உள்ளன. இந்தியக் காண்டா மிருகங்கள் குளங்கள். சேறு நிரம்பிய குட்டைகளில் ஓய்வெடுக்கின்றன. இவை நன்றாக நீந்தக்கூடியவை. பிரம்மபுத்திரா போன்ற அகலமான ஆறுகளைக்கூட இவை எளிதாக நீந்திக் கடந்து செல்கின்றன. விலங்குக் காட்சிச் சாலைகளில் இவை குறிப்பிட்ட ஒரே இடத்தில் காணப்படுகின்றன. சாணக்குவியலின் நாற்றத்தால் இவை கவரப்படுகின்றன எனக் கூறப் படுகிறது. அஸ்ஸாமில் இவற்றின் இனப்பெருக்க காலம் பிப்ரவரியிலிருந்து ஏப்ரல் வரை நீடிக்கிறது. அஸ்ஸாமில் காசிரங்கா சரணாலயத்தில் இந்தியக் காண்டாமிருகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவை பொதுவாகப் புற்கள், மூங்கில் குருத்துகள், குளங்களி லுள்ள வெங்காயத் தாமரைச் செடிகள் ஆகியவற்றை உண்கின்றன. பிற விலங்குகள் காண்டாமிருகங் களைக் கண்டால் ஒதுங்கிச் செல்கின்றன. பெண் காண்டாமிருகம், 48 நாளுக்கு ஒருமுறை இணைவிழைச்சுப் பருவத்துக்கு வருகிறது. ச ள விழைச்சுப் பருவம் தொடங்கிய 24 மணி நேரத் துக்குள் இனச்சேர்க்கை நடைபெறுகிறது. கருவளர் காலம் 462-489 நாள், பிறந்த குட்டியின் எடை 65 கி.சி. பெண் குட்டிகள் 3 வயதிலும் ஆண்குட்டிகள் 7-9 வயதிலும் இன முதிர்ச்சியடைகின்றன. . ஜாவா காண்டாமிருகம். இதன் தோற்றம் பழக்க வழக்கங்களைப்பற்றி மிகக் குறைவாகவே அறியப் பட்டுள்ளது. முன்பு இந்தியாவின் கிழக்குப் பகுதியி லும், சுமத்ரா, ஜாவா தீவுகளிலும் பரவலாகக் காணப் பட்ட இவ்வகைக் காண்டாமிருகங்கள் அழியும் நிலையிலுள்ளன. 1967 இல் உலக வனவிலங்கு நிதி யமைப்பு, ரூடால்ஃப் ஷெங்க்கல் என்னும் நடத்தை இந்தியக் காண்டாமிருகம்