காண்டாமிருகம் 225
க யியல் வல்லுநரை ஜாவாவுக்கு அனுப்பி, ஜாவா காண்டாமிருகத்தின் வாழிடம், நடத்தை ஆகியன பற்றி அவர் மூலம் ஆராய்ந்தறிந்தது. அவர் அறிக்கை, ஜாவா காண்டாமிருகங்கள் அடர்ந்த காடுகளில் தனித்தனியாக வாழ்கின்றன; காடுகளின் ஓரத்திலும் மலைக்காடுகளிலும் உள்ள இள மரங்களின் தழைகளையும், புதர்களையும் மேய் கின்றன. இவை பெரிய மரங்களின் தாழ்ந்த கிளை களை முறித்து அவற்றிலுள்ள இலைக் கொழுந்து களை மட்டும் உண்ணும்; இவை ஆறுகள் கடலுடன் கலக்கும் ஆற்றுப் புகுமுகங்களிலும் அவ்வப்போது கடலிலும் குளிக்கின்றன; இவற்றின் சிறுநீர், ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறமாக இருக்கும் என்றது. அனைத்துக் காண்டாமிருக இனங்களிலும் இயற்கை வாழிடங்களிலும் மிகுதியாகக் காணப்படும் னம் டைசெராஸ் பைக்கார்னிஸ் (Diceros bicornis) எனப்படும் ஆஃப்ரிக்கக் கறுப்புக்காண்டாமிருக இனமே யாகும். இதன் உடல்நீளம் 300-375செ.மீ; தோள்மட்ட உயரம் 150-160 செ.மீ; எடை ஏறக்குறைய 2 டன்; தலையிலுள்ள 2 கொம்புகளில் முன்கொம்பின் நீளம் மிகுதி, சிலவற்றில் மூன்றாம் கொம்பு ஒன்றும் காணப் படும் வால்நுனிகாதுகளில் மயிரும்காணப்படும். தழை காண்டாமிருகம் 225 களைப் பறித்து உண்பதற்கேற்ப மேலுதடு முன்புறம் நீண்டுள்ளது. வெட்டுப் பற்களும் கோரைப்பற்களும் இல்லை. தாடையின் ஒவ்வொரு பக்கத்திலும் 7 கடைவாய்ப் பற்கள் உள்ளன. கருவளர்காலம் 15-16 மாதங்கள். வட்ட ரொடீஷியாவில் அடிக்கடி மூன்று கொம்புள்ள காண்டாமிருகங்கள் காணப்பட்டன. 5 கொம்புடைய காண்டாமிருகம் கூட இருந்ததாகக் கூறப்படுகிறது. பிறக்கும்போது காண்டாமிருகக்குட்டி களுக்குச் செவிமடல்கள் இருப்பதில்லை. கறுப்புக் காண்டாமிருகம் உண்மையில் கறுப்பு நிறமானதன்று. அதன் நிறம் உண்மையில் கருஞ்சாம்பல் நிறம் என் றாலும், அது வாழுமிடத்தில் விழுந்து புரளுவதால் அந்த இடத்து மண்ணின் நிறத்திற்கேற்ப உடல் நிறம் பெறுகிறது. தோலில் மயிரோ - வியர்வைச் சுரப்பிகளோ இல்லாமையால் இவை சேற்றில் விழுந்து புரளுவதில் பெருவிருப்பமுடையவை. சமயங்களில் சேற்றை விட்டு வெளியேற முடியாமல் வை சேற்றில் சிக்கிக் கொள்ளும்போது கழுதைப் புலிகளால் தாக்கப்படுகின்றன. கறுப்புக் காண்டாமிருகங்கள் 20 மீ. தொலை வுக்குள் இருக்கும் பொருள்களை மட்டுமே தெளி வாகப் பார்க்க முடியும். ஆனால் கூர்ந்து கேட்கும் ஜாவா காண்டா டாமிருகம் அ. ச.8-15