பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 காண்டாமிருகம்‌

226 காண்டாமிருகம் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் உடையன. தாயும் கன்றும் பிரிந்துவிட்டால் அவை அருகருகில் இருந் தாலும் மோப்ப உணர்வைக் கொண்டே ஒன்று சேர் கின்றன. மனிதர்களையோ மரங்களையோ புதிய பொருள்களையோ அவை. அச்சமின்றி நெருங்கிச் சென்று, மோப்ப ஆற்றலால் கண்டறிந்த பிறகு விலகிச்சென்றுவிடுகின்றன. இந்த இயல்பினால் சில காண்டாமிருகங்கள், அடையாளம் தெரியாத பொருள்களை முரட்டுத்தனமாகத் தாக்கிக் மடை டகின்றன. மனிதர்களால் வேட்டையாடப்படும் இடங்களில் வாழும் காண்டாமிருகங்கள் முரட்டுத் தன்மையுடையவையாக உள்ளன. பிற இடங்களில் அமைதியாக உள்ளன. ஒருமுறை காயப்படுத்தப்பட்ட காண்டாமிருகம் முரட்டுத்தன்மை அடைவதும் உண்டு. இவ்வகைச் கருங்காண்டாமிருகங்கள் நன் றாக நீந்துவதில்லை. ஆனால், மலைகளில் 2700 மீட்டர் உயரம் வரை செல்கின்றன. இவை அடர்ந்த புதர்கள், காடுகள், புல்வெளிகள், வறண்ட பகுதிகள் போன்ற இடங்களில் வாழ்கின்றன. மிகுந்த வறட்சி யான இடங்களிலும் ஈரமான இடங்களிலும் இவை காணப்படுவதில்லை. ஐரோப்பியர்கள் ஆஃப்ரிக்காவில் குடியேறிய பின்னர் ஆஃப்ரிக்கக் காண்டாமிருகங்கள், அவற் றின் இயற்கையான வாழிடத்திலிருந்து பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டன. பிரெஞ்சுக்காரர்கள் வாழும் ஆஃப்ரிக்கப் பகுதிகளில் இவை 1930 ஆம் ஆண் டில் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. அக்காலம் தொடங்கிக் கடுமையான சட்டம் இயற்றப்பட்டுக் காண்டாமிருகங்கள் காக்கப்படுகின்றன. கருங் காண்டாமிருகங்கள் தம் வாழுமிடங்களுக்கு எல்லை அமைத்துக்கொள்வதில்லை. இவை பிற்பகலில் மேயத் தாடங்குகின்றன. மற்ற நேரங்களில் மரத்தடி களிலோ சேற்றுக் குட்டைகளிலோ படுத்து ஓய் வெடுத்துக் கொள்கின்றன. இரவில் நீர் நிலைகளுக் கருகில் இவை ஒன்றையொன்று துரத்தி விளை யாடுவதைக் காணலாம். சிறிய புதர்ச்செடிகளிலும், முட்புதர்களிலும் மரக்கிளைகளிலுமுள்ள கொழுந்து இலைகளை இவை உண்ணுகின்றன. இவை எருதைப் போல ஒரு புறமாகச் சற்றுச் சாய்ந்து படுத்துத் தலையைத் தரையில் வைத்தபடி தூங்கும். கருங்காண்டாமிருகம் தனித்தோ. நான்கு அல்லது ஐந்து விலங்குகளடங்கிய சிறிய கூட்டமாகவோ காணப்படும். காண்டா மிருகங் களின் தோலில் ஒட்டிக்கொண்டுள்ள ஆமைகள், ஓட் டுண்ணிகளைப் பிடித்து உண்ணுகின்றன. காண்டாமிருகக் குட்டிகளைச் சிலசமயம் சிங் கங்கள் பிடித்து உண்ணுகின்றன. காண்டாமிருகங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டாலும் காயப் படுத்திக் கொள்வதில்லை. காண்டாமிருகங்கள் ஆண்டின் அனைத்துப் பருவங்களிலும் இனச்சேர்க்கை யில் ஈடுபடுகின்றன. ஓர் ஈற்றில் ஒரு குட்டிதான் பிறக்கும். குட்டி பிறக்கும்போது 25கி.கி எடை இருக்கும். வயது வரை தாய், குட்டிக்குப் பாலூட்டுகிறது. 2 சதுர வாய்க் காண்டாமிருகம். செரட்டோத்திரீயம் சைமம் எனப்படும் சதுர வாய்க் காண்டாமிருகம் (Ceratotherium simum) ஆஃப்ரிக்காவில் சாவன்னா புல்வெளிகளில் காணப்படுகிறது. இதன் உடல் நீளம் 3.6-4 மீ. தோள்மட்ட உயரம் 1.6 -2 மீ. உடல் எடை 3 டன். அகன்ற சதுரமான உதடுகளும், 2 கறுப்புக் காண்டாமிருகம்