காண்டாமிருகம் 227
கொம்புகளும் பெற்றுள்ள இவ்வகைக் காண்டா மிருகம் தாவரவுண்ணி; வளர்கரு நிலையில் மட்டுமே வெட்டுப்பற்கள் காணப்படுகின்றன. கருவளர் காலம் 17-18 மாதம். ஒரு முறைக்கு ஒரு குட்டி மட்டுமே பிறக்கும். இந்தச் சிறப்பினத்தில் இரண்டு உள்ளி னங்கள் உள்ளன. தென்பகுதி சதுரவாய்க் காண்டா மிருகம் (Ceratotherium simum sim) | வடக்குப்பகுதி யின் சதுரவாய்க் காண்டாமிருகம் (Ceratotherium simum cottoni) என இவை வகைப்படுத்தப்படும். சதுரவாய்க் காண்டாமிருகத்தின் காதோரத்தில் மட்டும் சில மயிர் இருக்கும். பொதுவாக இவ்வினம் வெள்ளைக் காண்டாமிருகம் எனக் குறிப்பிடப் பட்டாலும் உடல் கருஞ்சாம்பல் நிறமுடையது. இவை சிறு கூட்டமாக வாழும். ஆண் காண்டா மிருகங்கள் தம் எல்லையைச் சிறுநீரால் குறிக்கின்றன. பொதுவாகச் சாணக்குவியலில் சாணமிடுகின்றன. வெயில் நேரத்தில் மர நிழலில் ஓய்வெடுக்கின்றன. குளிராக இருக்கும்போதும் மழை பொழியும்போதும் அடர்ந்த புதர்களுக்கடியில் தங்குகின்றன. சில வேளைகளில் இவை இரவு முழுதும் சேற்றுக் குட்டை களில் புரளுகின்றன. குளிர்காலங்களில் உடல் மேல் மண்ணை வாரி இறைத்துக்கொள்கின்றன. இவற்றின் இனப்பெருக்க காலம் ஜூலையிலிருந்து செப்டம்பர் வரை என்றாலும் பெண் காண்டாமிருகங்கள் மற்றக் காலங்களிலும் இணைவிழைச்சுப் பருவத்தில் இருப் பனவாகக் கூறப்படுகிறது. கருவளர்காலம் 18 மாதங்கள். பொதுவாக ஓர் ஈற்றில் ஒரு குட்டி பிறந்தாலும் சில ஈற்றுகளில் இரண்டு குட்டிகளும் பிறந்துள்ளன என்பதற்குக் குறிப்புகள் உள்ளன. பிறந்த 24 மணி நேரத்தில் குட்டி, தாயைத் தொடர்ந்து செல்ல முடிகிறது. தாய் ஓர் ஆண்டு வரை குட்டிக்குப் பால் கொடுத்தாலும் அது பிறந்து ஒரு வாரத்தில் புல்லைத் தின்னத் தொடங்குகிறது. 1892 இல் சதுரவாய்க் காண்டாமிருக இனம் அற்றுப்போய் விட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் ஆ ஃப்ரிக்காவின் ஒரு பகுதியில் சில சதுரவாய்க் காண்டாமிருகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் காக்கப் பட்டதன் விளைவாக இவ்வினம் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது. ஜெயக்கொடி கௌதமன் காண்டாமிருக வண்டு 227 வளரும் பகுதிகளை உண்பதால் மரம் வளர்ச்சி குன்று வதுடன் அதன் உற்பத்தித் திறனும் தாக்கமடை கிறது. தென்னை மட்டுமன்றிக் கரும்பு, அன்னாசி, பனை, பேரீச்ச மரங்களையும் இவ்வண்டுகள் தாக்கி, பேரழிலை விளைவிக்கின்றன. $ தமிழ் நாட்டிலும் பிற இடங்களிலும் காணப் படும் இதன் விலங்கியல் பெயர் ஒரிக்டஸ் ரைனா சிராஸ் Oryctes thinoceros ). இது ஸ்கராபிடே என்னும் வரிசையைச் சார்ந்த வண்டுகளில் ஒன்றாகும். இவ்வண்டு ஏறத்தாழ 5 செ.மீ. நீள முடையது.. உடல் தடித்தும், கருமை நிறத்துட னும் காணப்படும். ஆண் - பெண் காண்டாமிருக வண்டு களின் அமைப்பில் ஒரு சில வேறுபாடுகள் காணப் படுகின்றன. ஆண் வண்டின் தலையின் மேல் பகுதி யில் நீண்ட வளைந்த கொம்பு ஒன்று உள்ளது. தலைப் பகுதியிலுள்ள கொம்பு காண்டாமிருகத்தை நினைவுபடுத்துவதால் இது காண்டாமிருக வண்டு என்று கூறப்படுகிறது. பெண் வண்டுக்கு கொம்பு மட்டுமே காணப்படும். மற்ற களில், ஆண் வண்டுகளுக்கு மட்டுமே இக்கொம்பு காணப்படுகிறது. ஆனால் ஒரிக்டஸ் ரைனாசிராஸ் என்னும் இனத்தைச் சேர்ந்த காண்டாமிருக வண்டின் ஆண் பெண் இரண்டுக்குமே கொம்புகள் இருப்பது சிறப்பாகும். காண்டாமிருக வண்டு மேல் தோற்றம் ஒரு சிறிய வண்டு ன இளவுயிரி காண்டாமிருக வண்டு காண்டாமிருக வண்டு தென்னை மரத்தைத் தாக்கும் ஒரு பயிர்க்கொல்லி ஆகும். இவ்வகை வண்டுகள் இந்தியாவில் தென்னை வளரும் இடங்களிலெல்லாம் மிகுந்து காணப்படுகின்றன. தென்னை மட்டைகளுக் கிடையே தங்கி இலைகளைத் தின்று மரத்திற்குக் கேடு விளைவிக்கின்றன. மேலும், இளம் மரத்தில் அ க. 8 15 அ - பக்கத் தோற்றம் கூட்டுப்புழு க வாழ்க்கைச் சுழற்சி. பெண் காண்டாமிருக வண்டு. ஏறத்தாழ 140 வெண்மையான முட்டைகள் எருக்குழிகளிலும், குப்பை மேடுகளிலும் 5-15 செ.மீ ஆழத்தில் இடுகிறது. சூழ்நிலைக்கேற்ப 8-18 நாள் களில் முட்டைகளிலிருந்து இளவுயிரிகள் வெளிப்படு கின்றன. லை அழுகிய மட்கிப்போன பொருள் களை உணவாகக் கொண்டு வளர்ச்சியடைகின்றன