காது 231
காது 231 குழல்களின் நேரியலற்ற பண்புகள் பயன் தருகின்றன. சில நேரங்களில் எளிய உணர் ஆதாயக் குறுகிய வரிசை ஏற்பியாகப் (acceptor) பயன்படும் மீளாக்க மற்றும் உயர் மீளாக்கக் காணி (regenerative detector) இத்தகைய பயனீட்டில் அடங்கும். அலை காணல் நேர்மை. மிகுதியான பயனீடுகளில் காணும் செயல்பாட்டின் நேர்மை (fidelity) முக்கிய காரணி யாகும். அலைவீச்சுப் பண்பேற்றப்பட்ட ஊர்தி அலையின் அலைவீச்சு மாறல்களின் உருவை நேர்மை யாக மீண்டும் அளிப்பதே ஒரு சிறந்த நேரியல் காணி யின் பண்பாகும். கீழ்க்காணும் வழிகளில் ஒரு காணி யின் இச்செயல்பாட்டுத் தரம் குறையலாம். பண் பேற்றத்தில் இல்லாத அதிர்வெண்கள் காணியின் வெளியளிப்பில் இருப்பின் அலை வீச்சுச் சீர்குலைவு நிகழும். பண்பேற்றத்தின் பல்வேறு அதிர்வெண் பகுதிகள் அதே ஒத்த அலைவீச்சுகளோடு காணியின் வெளியளிப்பில் கொடுக்கப்படாவிட்டால் அதிர்வெண் சீர்குலைவு நிகழும். பண்பேற்றத்தின் அதிர்வெண் பகுதிகள் மாறுபட்ட தறுவாய் உறவோடு காணியின் வெளியளிப்பில் தரப்பட்டால் தறுவாய்ச் சீர்குலைவு நேரிடும். இத்தகைய சீர்குலைவுகள் குறிப்பாக அலை வீச்சுப் பண்பேற்றக் காணிகளிலேயே நேரிடக்கூடும். சில பயனீடுகளுக்கு இலட்சிய ஈரடுக்கு விதி (square law) பயன்படும். இதில் ஊர்தி அலை, வீச்சின் ஈரடுக் கோடு நேர் விகிதப் பொருத்தமுள்ளது. ஒரே அலை வரிசைச் செலுத்தல் கையாளப்படும்போது முதல் பண்பேற்றும் குறிப்பைச் சீர்குலைவின்றிப் பெறுவ தற்கு இவ்வகைக் காணி தேவைப்படுகிறது. தக்க சேர்க்கைகளால் எந்த ஒரு நேரியலற்ற கருவியும் ஈரடுக்கு விதிக் காணியாக மாற்றப்பட இயலும். வை அளக்கும் பயனீடுகளிலும் பயன் தரும். காது எஸ்.சுந்தரசீனிவாசன் சம து ஒலியைக் கேட்கவும் உடலின் நிலையை முளைக்கு உணர்த்தவும் உதவும் முக்கிய உறுப்பாகும். காது அல்லது செவியை வெளிச்செவி, நடுச்செவி. உட்செவி என மூன்றாகப் பிரிக்கலாம். பொதுவாக வல. இடப்புறச் செவிகளும் அமைப்பில் ஒன்றாக இருக்கும். ஒலியின் அளவையும் (செறிவு) ஒலி வரும் திசையையும் அறிய இரு செவிகளின் நலமும் திறனும் சமஅளவில் இருக்க வேண்டும். பிறவியிலேயே உண்டாகும் கோளாறாலும் நோயாலும் ஒரு காது பாதிக்கப்பட்டிருந்தால், அதன் விளைவால் ஏற்படும் வேறுபாடு தெளிவாகத் தெரியும், குழந்தையின் செவி எலும்பு அளவிலும் அமைப்பிலும் பெரியவர்களின் செவி எலும்பைவிடச் சிறியதாக இருக்கும்; சில பகுதிகள் முழுவளர்ச்சி பெற்றிரா. வெளிச்செவி. காதின் சிறகு, வெளிச்செவிக் குழாய், செவிப்பறை இவற்றைக் கொண்ட வெளிச் செவி, ஒலி அலைகளை வாங்கிச் செவிப்பறையை நோக்கி அனுப்பும் பாதையாக உள்ளது. காதுமடலை மனிதனால் அசைக்கவோ, ஒலி வரும் திசை நோக்கித் திருப்பவோ இயலாது. ஆனால் விலங்குகள் காதின் சிறகுகளை ஒலி வரும் திசையில் திருப்பி ஒலியின் தன்மையை உணர்ந்து தப்பி ஓடவும் னத்துடன் சேரவும் பயன்படுத்துகின்றன. வெளிச்செவிப் பாதை குருத்தெலும்பாலும் எலும் பாலும் ஆனது. இதன் நீளம் 24 செ.மீ. இதில் வெளியே 8 மி.மீ. குருத்தெலும்பாலானது; உள்ளே 16 மி.மீ. எலும்பாலானது. செவிப்பாதையின் மெல்லியதோல் குருத்தெலும்பின் மேலும் எலும்பின் மேலும் ஒட்டி இருக்கும். குருத்தெலும்புப் பகுதியில் முடிகளும் எண்ணெய்ச் சுரப்பிகளும் உள்ளன. இங்குள்ள பசை போன்ற குரும்பி (wax) எலும்பு போன்ற பூச்சிகள் காதுள் செல்லாதவாறு தடுக்கிறது. செவிப்பறை நீள்வட்ட வடிவமும் முத்துப்போன்ற நிறமும் கொண்டு மெல்லியதாகவும், விறைப்பாகவும் உள்ளது. ஏறத்தாழ 9 மி.மீ விட்டமும் 1/10 மி.மீ கனமும் கொண்டது. பரப்பு, ஏறக்குறைய 69 சதுர மி.மீ. வெளிப்பக்கம் ஸ்கோமஸ் செல்களும் உள்பக்கம் அடுக்குச் செல்களும் இடையே விறைப்பூட்டுகிற நார்த்திசுக்களும் கொண்ட அடுக்குகளாக உள்ளன. செவிப்பறையின் விறைப்பான பகுதியின் மேலே நார்த் திசுக்கள் இல்லாத தளர்ந்த பகுதியை முன், பின் மடிப்புகள் பிரிக்கின்றன. சுத்தி எலும்பின் கைப்பிடி விறைப்பான பகுதியின் உள்பக்கம் இணைந்துள்ளது. தளர்ந்த பகுதியின் உட்பக்கம் நடுச்செவியின் மாடம் (attic) ஆகும். இங்கு, கைப்பிடி எலும்பின் தலைப் பகுதி உள்ளது. செவிப்பறையுடன் சுத்தி எலும்பு ணைந் துள்ளமையால் அதன் மேல் விழும் ஒலி அலைகள் சுத்தி எலும்பின் மூலம் சிற்றெலும்புச் சங்கிலித் தொடரால் உட்செலி வரை உயர்த்தப்பட்டுச் செலுத் தப்படுகின்றன. செவிப்பறை ஒரு சுவர் போல் வெளிச் செவிப் பாதையையும் நடுச் செவியையும் பிரிக்கிறது. அன்றியும் இது மேலிருந்து கீழாக ஒரு கோணத்தில் அமைந்துள்ளது. வெளிச் செவி எலும்புப் பகுதியில் அரை வட்டத்தில் உள்ள ஒரு குழிவான கால்வாயின் விறைப்பான பகுதி, நடுப்பகுதி எனப்படும். உட்பக்க முள்ள சுத்தி எலும்பின் கைப்பிடி ஒரு கோடாகத் தெரியும். அதன் முனைக்கு அம்போ (umbo) என்று பெயர். வெளிச்செலிப்பாதை வழியாக ஒளியைச் செலுத்திச் செவிப்பறையைப் பார்த்தால் அம்போவி லிருந்து கீழே ஒரு கூம்பாக ஒளி எதிரொளிக்கும். நடுச்செவிக் கோளாறால் செவிப்பறை புடைத்தாலும் உள்பக்கம் கூம்பின் இழுக்கப்பட்டாலும் நுனி மறைந்து விடுகிறது அல்லது மாறுபட்டு விடுகிறது.