232 காது
232 காது cood. 12, 10 13 5 3. 6. படம் 1. காதின் குறுக்கு வெட்டுத் தோற்றம் செவிமடல் 2. செவிச் சிறகு 3. சுத்தி எலும்பு 4. மூன்று அரை வட்டக் குழாய் 5. யுட்ரிக்கிள், சல்க்கஸ் காது நரம்பு வெஸ்டிபுலர் பிரிவு ?. காது நரம்புக் காக்ளியாபிரிவு 8. காக்ஸியா 9. தொண்டை - நடுச்செவிக் குழாய் 10. அங்கவடி எலும்பு 11. பட்டடை எலும்பு 12. செவிப்பறை 13, வெளிச் செவிக்குழாய். கூம்பு ஒளி மாறுபட்டிருந்தால் செவிப்பறையின் இயல் பான தோற்றம் மாறியுள்ளமை தெளிவாகும். நடுச்செவிக் குழிவு. நீள, அகலம் 15 மி.மீ. ஆழம் 1.2 மி.மீ கொண்ட காற்றறையில் சுத்தி. பட்டடை, அங்கவடி என்னும் மூன்று சிற்றெலும்புகள் நார்களால் முட்டாகச் சங்கிலித் தொடர்போல் இணைக்கப்பட்டுள்ளன. மூன்று எலும்புகளின் எடை 1/150 அவுன்ஸ். சிற்றெலும்புகள் நடுச்செவியின் சுவர் களோடு தசை நார்களால் இணைக்கப்பட்டுள்ளன. அங்கு, சிறு அறைகளான அமைப்பு வந்துவிடுகிறது. சிற்றெலும்புகளுடன் இணைந்துள்ள ஸ்டெபிடீயஸ், டென்சார் டிம்ப்பானாய் தசைகள் எலும்புகள் மிகு ஒலியால் மிகுதியாக அசையாவண்ணம் பாதுகாக் கின்றன. சிற்றெலும்புகளின் செயலால் ஒலி அதிர்வு 18 மடங்கு உயர்த்தப்படுகிறது. நடுச்செவியின் அடிப் பகுதியில் தொண்டை நடுச்செவிக்குழாயின் வாய்ப் பகுதி உள்ளது. இதன் வழியாகக் காற்று நடுச்செவிக் குள் செலுத்தப்படுகிறது. இதனால் நடுச்செவிக் காற்றழுத்தமும் வெளி உலகக் காற்றழுத்தமும் சம மாக்கப்படுகின்றன. நடுச்செவியைச் சுற்றிலும் முக்கிய உறுப்புகள் உள்ளன. அவை ஏழாம் கபால நரம்பு, சிக்மாய்டு சைனஸ் சிரை, பெருமூளையின் செவிப் பகுதி, கிடைமட்ட அரை வட்டக்குழாய் மற்றும் மாஸ்ட்டாய்டு (mastoid) காற்றறை எனப்படும். நடுச்செவியின் உட்பகுதி புடைப்பாக இருக்கும். இதில் அங்கவடி எலும்பின் அடித்தகடு இணைகிற 3.2 சதுர மி.மீ. பரப்புள்ள நீள்வட்டச் சாளரமும்,