பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 காதுகேள்‌ பொறி

234 காதுகேள் பொறி 2 பொருள்கள் மீது பட்டு மீளும். எதிரொலியைக் கேட்டு அவற்றில் அடிபடாமல் வேகமாகப் பறக்கிறது. விலங் குகள் தேகளி, அரைவட்டக் குழாய்களின் உதவியால் உடலின் நிலையையும், இயக்கத்தையும் உணர் கின்றன. புவிஈர்ப்பிற்கு ஏற்ப உடல் நிலையில் உணர்ச்சித் தாவல் இருப்பதால். மீன் வளைந்து நீந்துவதும், மல்லாந்த தவளை உடலை நிமிர்த்திக் கொள்வதும், பூனை, அணில் போன்றவை மேலே யிருந்து கீழே விழும்போது கால்கள் தரையில் ஊன்றும் வண்ணம் திரும்பிக்கொள்வதும் இயல்பாக நடை பெறுகின்றன. பாம்பிற்குச் செவி இல்லை. இது ஒலி அதிர்வுகளை உடல் மூலம் உணர்கிறது. பிடாரன் பாம்பு மகுடி இசைக்கும்போது செய்கிற அசைவு களைக் கண்ணால் பார்த்துத் தன் படமெடுத்த தலையை அசைக்கிறது. டி.எம். பரமேஸ்வரன் படம் 5. உட்செவி சமநிலை ஏற்பி அங்கம் 1. மெக்குலாவில் (உப்புகள்) 3. கிரிஸ்டாவில் ஓட்டோலித் ஓட்டோலித் (உப்புகள்) தொடப்படுகின்றன. மனிதனின் காது போன்றே நத்தை எலும்பில் உள்ள காக்ளியாவின் நிணநீரில் அழுத்தம் ஏற்பட்டு, அடிப்படைச் சவ்வு அசைந்து அதனால் கார்ட்டி அங்கம் தூண்டப்படுகிறது. இத னால் எழும் நரம்பு உணர்வு மூளையில் பதிந்து ஒலி உணர்வு உண்டாகிறது. மீனுக்குக் காக்ளியா, கார்ட்டி அங்கம் இல்லை. அதன் விலாப் பக்கத் தோலின் உள்ளே குழிகள் உள்ளன. இவற்றால் நீரில் உள்ள ஓட்டம், அதிர்வு, ஒலி ஆகியவற்றை உணர்கிறது. இந்தக் குழிகளில் குழாயும் சவ்வுப் பையும் உள்ளன, அவற்றுள் ஒன்றில் சிறு புடைப்புத் தெரியும். இது லாக்னா எனப்படும். இதில் உள்ள மூன்று காதுக்கல் உறுப்பு கள் புவிஈர்ப்புக்கு ஏற்பச் சரிந்து சமநிலையை உணர்த்தும். மீனுக்கு ஆக்க அறிவை உண்டாக்க முடியும். நீரின் வெளியே மணி ஓசை எழுப்பி, உணவுப்பொருள் போட்டுப் பழக்கிய மீன்கள், மணி ஓசை கேட்டவுடன் வெளி மட்டத்திற்கு வருகின் றன. மனிதனால் கேட்க முடியாத ஒலி அலைகளை நாய் கேட்டுப் பிரித்துணர்கிறது. கேளா ஒலி எழும் ஊதலின் ஓசை நாய்க்குக் கேட்கும்: மனிதனுக்குக் கேட்காது. 包 வெளவால் 98.000 அதிர்வுகளை உணரவல்லது. அது எழும் மிகை ஒலி சுற்றி உள்ள சுவர் முதலிய காதுகேள் பொறி காது என்பது ஒலிகளை உணரும் அமைப்பு. வெளிக் காதில் நுழைகிற ஒலி அலை அதன் பல கூறுகளை யும் கிளர்வு செய்ய விளை வைக்கிறது. அதன் வாகத் தோன்றும் மின் குறியீடுகள் கேள் நரம்பின் (auditory nerve) வழியாகக் காதிலிருந்து மூளைக்கு அனுப்பப்படுகின்றன. இந்தக் கூறுகளில் ஏதாவது ஒன்று நோய் காரணமாகவோ விபத்துக் காரண மாகவோ பழுதடையலாம் அல்லது கேள் நரம் பிலோ மூளையின் ஒலி உணர் செல்களிலோ பழுது ஏற்படலாம். அவ்வாறான நிலைகளில் கேள்திறன் குறைகிறது. பழுதின் அளவைப் பொறுத்துக் கேள் திறன் ஓரளவு அல்லது முழுமையாகவே மறைந்து போகலாம். சில வகைப் பழுதுகளை அறுவை அல் லது. மருத்துவ முறை மூலம் நீக்கவோ, குறைக்கவோ முடியும். சில சமயங்களில் காது கேள் பொறிகளின் உதவியால் கேள்திறனை மிகுதிப்படுத்தலாம். பொதுவாக, காதுகேள் பொறி ஒலி ஆற்றலைப் பெருக்கும் கருவியே ஆகும். தொடக்க காலங்களில் செவிக்கொம்பு (ear trumpet) என்னும் ஒரு நீண்ட காம்புள்ள புனல் வடிவக் கருவி, காது கேள் பொறி யாகப் பயன்பட்டு வந்தது. அதன் விரிந்த முனை யில் எழுப்பப்படும் ஒலிகள், குவிக்கப்பட்டுக் குறுகிய முனையில் சேரும். குறுகிய முனையிலுள்ள வாய்ப் பகுதியைக் காதில் செருகிக்கொண்டால் ஒலியை உணரலாம். இந்த அமைப்பில் பலவகையான மாதிரிகள் உருவாக்கப்பட்டிருந்தன. நீண்ட, விறைப் பான காம்புக்கு மாற்றாகத் துவளக்கூடிய ரப்பர் குழல்கள் வேண்டிய திசையில் செவிக் கொம்பைத் திருப்பிக் கொள்ளும் வசதியை அளித்தன. பல வகைப் பூவேலைப்பாடுகளும், நுட்ப அலங்காரங்களும்