பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதுகேள்‌ பொறி 235

கொண்ட செவிக்கொம்புகள் அரசர் பிரபுக்களின் பயனுக்காக உருவாக்கப்பட்டன. அத்தகைய பழங் காலக் கலைச் செல்வங்களைப் பல அருங்காட்சியகங் களில் காணலாம். இன்றைய காதுகேள் பொறி திரிதடையங்களால் transistors) உருவாக்கப்பட்ட மின்னணுக் கருவி யாகும். மின்சார உருப்பெருக்க முறைகளின் மூலம் அதில் ஒலியின் ஆற்றல் பெருக்கப்படுகிறது. ஒலி அதிலுள்ள ஒளி வாங்கியில் (microphone) விழுந்து மெல்லிய மின்னோட்டமாக மாற்றப்படுகிறது. மின் னோட்டம் உருப்பெருக்கிக் (amplifier) கட்டத்தில் ஆற்றல் பெருக்கம் அடைகிறது. அங்கிருந்து அது ஏற்பி (receiver) என்னும் கருவிக்குச் செல்கிறது. ஏற்பி அந்த மின்னாற்றலை மீண்டும் ஒலி ஆற்ற லாக மாற்றுகிறது. ஒலி வாங்கியில் விழுந்த ஒலியை விட ஏற்பியிலிருந்து வெளிப்படும் ஒலியின் செறிவு பன்மடங்கு மிகுந்திருக்கும். காதுகேள் பொறிக்குத் தேவையான மின்னாற்றலைச் சாதாரணமான உலர் மின் கலங்கள் அல்லது மறுமின்னேற்றக்கூடிய மின் சேமக் கல அடுக்குகளிலிருந்து (rechargeable storage batteries) அளிக்கலாம். தற்காலக் காதுகேள் பொறிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல் பெருக்கிக் சுட்டங்கள் (amplifi- cation stages) அமைக்கப்படுகின்றன. அவை யாவும் தொகுப்புச் சுற்றுகளால் (integrated circuits) உரு வாக்கப்பட்டு ஒரே ஆக்கக்கூறாக அமைக்கப்படு கின்றன. இன்றைய பெருமளவு தொகுப்புச் சுற்று (LSI) முறைகளின் பயனாக அவற்றை மிகவும் சிறிய அளவிலும், எடைகுறைந்தவையாகவும் உருவாக்க முடிகிறது. அத்துடன் உற்பத்தி விரைவானதாகவும் சிக்கனமானதாகவும் உள்ளது. . இன்றைய காதுகேள் பொறிகள் பயன்படுத்து வோரின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு சரிப்படுத்திக்கொள்ளும் வசதிகளுடன் உள்ளன. அவற்றைத் தேவையில்லாதபோது நிறுத்தவும் மீண்டும் செயல் தொடங்கவும் இணைப்பு மாற்றிகள் (switch) வைக்கப்பட்டுள்ளன. தேவையான அள வுக்கு ஒலியின் செறிவை ஏற்றி இறக்கிக் கொள்ள வும், சுற்றுச் சூழலின் ஓசை அளவுக்கு ஏற்றவாறு ஒலியை மாற்றியமைத்துக்கொள்ளவும் உதவும் குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுருதியைக் சுட்டுப் படுத்தவும் (tone control) தகுந்த அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. செவிப்புலன் நலிவுற்றவர்களில் சிலருக்குப் பேச்சைப் புரிந்துகொள்கிற செறிவு நெடுக்கம் (inten- sity range) விரிவானதாகவும் மற்றவர்களுக்குக் குறுகியதாகவும் இருக்கும். சிலர் மெல்லப் பேசினால் புரிந்து கொள்வர். ஆனால் உரத்த ஒலிகளை உணர மாட்டார்கள். இது போன்ற குறைகள் உள்ளோர் பயன்படுத்துகிற காதுகேள் பொறிகளில் தானாகவே காதுகேள் பொறி 235 ஒலியைச் சரி செய்துகொள்கிற ஒலிக் கட்டுப் பாட்டு (volume control) அமைப்பு, பொருத்தப்பட்டி ருக்கும். அது தானாகவே ஆற்றல் பெருக்கத்தைச் சீர்படுத்தி, வெளிப்படும் ஒலிச்செறிவு சீராக ஒரே மட்டத்திலிருக்கும்படிச் செய்யும். தொடக்க கால மின் காதுகேள் பொறிகளைப் பயன்படுத்தியவர்கள், தலைப்பட்டைகளில் (head bands) பொருத்தப்பட்ட காதொலியன்களை (ear- phones) மாட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. இது வசதிக் குறைவாயிருப்பதுடன் தோற்றப்பொலி வையும் குலைக்கும். இன்றைய காதுகேள் பொறி களின் காதொலியன்கள் சிறிய அளவில் நெகிழிப் பொருள்களால் செய்யப்பட்டுக் காதின் துளைக்குள் செருகிக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. எலும்பு வழிக்கடத்து ஏற்பிகள் ( bone conduction receivers) எனப்படும் உறுப்பு, சில காதுகேள் கருவி களில் அமைக்கப்பட்டுள்ளது. இது செவிப்பறை (eardrum) முழுமையாகப் பழுதடைந்தவர்களுக்கு உதவும். அது ஒலி அலைகளை வெளிப்படுத்துவ தில்லை. அதற்கு மாறாக மண்டையோட்டின் எலும்புகளில் அதிர்வுகளை உண்டாக்கும். 2. 6.3 or 2. 7. 6 3. 5. -46a"> 1. ஒலி வாங்கிச் சுருளின் இணைப்பு மாற்றி ஒலிவாங்கி 3. ஒலி வாங்கிச் சுருள் 4. மின் னோட்டத்தை வரம்பு செய்யும் கட்டுப்பாட்டுப் பகுதி 5. மின்கல அறை 6. ஏற்பி 7. சுருதிக் கட்டுப் பாட்டுச் சக்கரம். படம் 1. சட்டைப்பைக்குள் வைத்துக்கொள்ளக் கூடிய காதுகேள் கருவியின் பின் மூடியைத் திறந்தால் தெரிகிற காட்சி. காதுகேள் பொறியில் பல வகை உள்ளன. ஒரு வகையில் ஒலிவாங்கியும் ஆற்றல் பெருக்கியும் உள்ள