பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 காந்த இயக்கு விசை

236 காந்த இயக்கு விசை 1. 3 1. ஏற்பி 2. மின்கல அறையின் வில்சுருள் 3. மின்கல அறை 4. ஒலி நுழைவாயில் 5. ஒலி வாங்கி படம் 2. காதின் பின்புறம் பொருத்திக்கொள்கிற காதுகேள் சுருவி பகுதி சட்டைப்பைக்குள் வைத்துக் கொள்ளக்கூடிய அளவிலிருக்கும். துவளக்கூடிய மின் கம்பிகள் மூலம் காதொலியன் இணைக்கப்பட்டிருக்கும். அதைக் காதில் செருகிக் கொண்டால் வெளியே தெரியாத அளவுக்கு அது சிறியதாயிருக்கும். மேலும் சிறிய அளவிலான காதுகேள் பொறிகள் காதுக்குப் பின்னால் பொருத்திக் கொள்ளக்கூடிய வகையிலும், மூக்குக் கண்ணாடியின் சட்டத்தில் பொருத்தக் கூடிய வடிவத்திலும் அமைக்கப்படுகின்றன. இத் தகைய பொறிகளில் காதொலியன் உட்படஅனைத்து உறுப்புகளும் ஒரே அலகில் அடக்கப்பட்டுவிடுகின்றன. - கே. என். ராமச்சந்திரன் காது வலி NO காரணமாக புறச்செவியிலோ, நடுச்செவியிலோ காதுவலிக்குக் காரணங்கள் இருக்கலாம். புறச்செவியில் அடை பட்டுக் கிடக்கும் மெழுகு, வலிக்குக் லாம். காதினுள், பீச்சுங்குழல் உதவியால் வெப்ப மான நீரில் கலக்கப்பட்ட 1% சோடியம் பைகார்ப னேட் கரைசலைச் செலுத்தினால், மெழுகு அகற்றப் பட்டு வலி நின்று விடும். பிற பொருள்கள், சில சமயம் வெளிச் செவியுள் சென்று வலியை உண்டாக் கலாம். அவற்றை எளிதில் அகற்றிவிடலாம். புறச் செவி அழற்சியே காது வலிக்கு முக்கியமான காரண மாகும். புறச் செவியுள் தோன்றும் கொப்புளங்களும் வலியை உண்டாக்குகின்றன. கிளிசரின், இத்தை யால் அல்லது நுண்ணுயிர் எதிர் மருந்துகள், ஹைட்ரோகார்ட்டிசோன் கரைசல் முதலியவை நல்ல பலனளிக்கின்றன. புறச் செவி அழற்சியால் உறுத்தல், வலி, சீழ், குறைந்த அளவிலான செவிட் டுத் தன்மை ஆகியவையும் காணப்படும். காதினுள் நுண்ணுயிர் எதிர் மருந்துகளைச் சொட்டுகளாக உட்செலுத்தியும் குணப்படுத்தலாம். நடுச்செவி அழற்சியில் வலியும், காய்ச்சலும், சிவந்து வீங்கிய செவிப்பறையும் காணப்படுகின்றன. நுண்ணுயிர் எதிர் மருந்துகளும், எஃபிட்ரின் சொட்டு மருந்தும் உதவும். தேவைப்பட்டால் செவிப்பறையில் அறுவை செய்ய நேரிடும். மருத்துவம் தாமதமானால் மாஸ்டாய்டு அழற்சி ஏற்படலாம். நாட்பட்ட நடுச்செவி அழற்சியிலும் வலி தோன் றலாம். செவிட்டுத்தன்மை மிகுந்து, கெடு நாற்ற முடைய சீழும் வெளிப்படும். சிலபோது செவிப் பறை கிழிவதால் வலியும் செவிட்டுத் தன்மையும் தோன்றலாம். இதில் காதில் இரைச்சலும், இரத்த வெளியேற்றமும் காணப்படும். இதற்கு மருத்துவம் அளிக்கக் கூடாது. சொட்டு மருந்துகள், நுண்ணுயிர் எதிர் மருந்துகள் தேவையில்லை. முழு ஓய்வே போதும். . நடுச் செவியில் அரிதாகத் தோன்றும் புற்று, காது வலிக்குக் காரணமாக இருக்கலாம். எட்டாம் கபால நரம்பின் புற்றுக் கட்டிகளும், செலி வலிக்குக் காரணமாக இருக்கும். வலியின் காரணத்தைப் பொறுத்து மருத்துவம் அமையும். சாரதா கதிரேசன் நூலோதி. Harding Rains (Ed), Bailey & Loves Short Practice of Surgery, 17th Edition, ELBS, London, 1979. காந்த இயக்கு விசை காந்தப் பாயக் கோடுகளின் ஒரு மூடிய கண்ணி காந்தச் சுற்று (magnetic circuit) எனப்படும். ஓர் அயக்காந்தப் பொருளாலான வளையத்தில் ஒரு சும்பி சுற்றப்பட்டிருப்பதாகக் அதிலுள்ள சுற்றுகளின் (turns) கொள்ளலாம். எண்ணிக்கை N; அதன் சராசரிச் சுற்றளவு 1 மீ, அதில் பாயும் மின் னோட்டம் I ஆம்பியர், கம்பிச் சுருளுக்குள் உள்ள காந்தப் புலச் செறிவு (magnetic intensity) H எனில்