240 காந்த ஒத்ததிர்வு
240 காந்த ஒத்ததிர்வு பொருளின் ஓர் பாரா காந்தப் மூலக்கூறுகள் நிலைத்த காந்தமுடையவை. மூலக்கூறிலுள்ள ஒன்று அல்லது மேற்பட்ட இணையாத (uupaired) எலெக்ட் ரான்களே இப்பண்பிற்குக் காரணமாகும். மோலார் காந்த ஏற்புத் திறன் கொண்டு குறிப்பிட்ட மூலக்கூறு அல்லது அயனியிலுள்ள இணையாத தனித்த எலெக்ட் ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடலாம். சாதாரண வெப்பநிலையில் ஆக்சிஜன் மூலக்கூறில் எலெக்ட்ரான்கள் உள்ளன இரண்டு இணையாத எனக் கணக்கிடப்பட்டது. மெர்க்குரஸ் குளோரைடின் மூலக்கூறு HgCl எனக் கொண்டால் அதில் ணையாத தனித்த எலெக்ட்ரான் இருக்கும். ஆகவே அது பாரா காந்த ஏற்புத் திறன் கொண்ட தாக இருக்க வேண்டும். ஆனால் மெர்க்குரஸ் ளோரைடு டயா காந்தப் பண்பு கொண்டதாக உள்ளது. இதன் மூலம் மெர்க்குரஸ் குளோரைடு HgC! என்னும் வாய்பாடு கொண்டிருக்க இயலாது, HgCl, என்னும் வாய்பாடு கொண்டது என அறியப் படுகிறது. அதே போல் ஹைப்போஃபாஸ்பாரிக் அமிலம் H,P,O என்னும் வாய்பாடு கொண்டதாக அறியப்படுகிறது. அணைவு அயனிகள் (Complex ions) அல்லது தொகுதிகள் இவற்றில் உள்ள தனித்த, எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அவற்றின் அமைப்பு களையும் அறிய இயலும். &. இணையாத நூலோதி. F. Albert ரா. முருகேசன் Cotton and Geoffrey Wilkinson, Advanced Inorganic Chemistry, John Wiley and Sons, Inc, Newyork. 1984; Samuel Glasstone. Text Book of Physical Chemistry, Second Edition, Macmillan India Ltd, Madras, 1986. காந்த ஒத்ததிர்வு சில குறிப்பிட்ட அணுக்களின் காந்தத் தற்சுழற்சி அமைப்புகள் திசை மாறும் காந்தப் புலங்களுக்கு ஆட்படும்போது சில குறிப்பிட்ட ஒத்ததிர்வு அதிர் வெண்களில் ஆற்றலை உட்கவர்வது காந்த ஒத்த தீர்வு (magnetic resonance) எனப்படும். அதற்குக் காந்த அமைப்பின் இயல்பு அதிர்வெண்களுக்குச் சமமான அதிர்வெண்ணுடன் காந்தப் புலங்கள் திசை மாற வேண்டும். பெரும்பாலான நிகழ்வு களில் காந்த அமைப்பின் இயல்பு அதிர்வெண் என்பது, H என்னும் ஏதாவது ஒரு காந்தப் புலத் தைச் சுற்றிக் காந்த அமைப்பிலுள்ள அணுக்கள் அல்லது அணுக்கருக்களின் மொத்தக் காந்தத் திருப்புத்திறனின் அச்சுச் சுழற்சியின் அதிர்வெண் ணாகும். இது அணுக்கருக் காந்தத்துவம், எ எலெக்ட் தற்சுழற்சிக் . பல் ரான் காந்தத்துவம் போன்ற காரணங்களால் தோன்றும். ஒவ்வொரு காரணத் திற்கும் இந்த இயல்பு அதிர்வெண்ணின் மதிப்பு ஒவ்வொரு குறிப்பிட்ட மதிப்புடன் மதிப்புடன் இருக்கும். எனவே ஒத்ததிர்வு முறைகள், தேவையான குறிப் பிட்ட கூறுகளைத் தேர்ந்தெடுத்து ஆராய்வதில் மிகுந்த உதவியாக உள்ளன. காட்டாக, வலுவற்ற அணுக்கருக் காந்தத்துவத்தை அதனுடன் வழக்க மாகக் கூடி வருகிற, அதை விட மிகப் பெரியதான எலெக்ட்ரான் பாரா காந்தத்துவம் அல்லது டயா காந்தத்துவத்தால் மறைக்கப்பட்டுவிடாமல் தனித்து ஆராய முடிகிறது. அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு அதாவது அணுக் சுருக்களால் வெளிக்காட்டப்படும் ஒத்ததிர்வு ஒரு மைக் காந்தத் திருப்புத்திறன் கொண்ட ஹைட்ரஜன் போன்ற அணுக்கரு இருப்பதை வெளிப்படுத்து வதுடன் அது அண்மையிலுள்ள அணுக்கருக்களுடன் இடைவினை செய்வதையும் வெளிப்படுத்துகிறது. இவ்வாறு மூலக்கூற்றுக் கட்டமைப்பைக் கண்டு பிடிப்பதற்கு இம் முறை ஒரு வலிமையான கருவி யாக விளங்குகிறது. எலெக்ட்ரான் பாரா காந்த ஒத்ததிர்வு எனப்படும் இணை சேராத எலெக்ட் ரான்களால் வெளிக் காட்டப்படுகிற ஒத்ததிர்வைக் கண்டுபிடிப்பதும் ஒரு முக்கியமான பயன்பாடு ஆகும். தோற்றம் M என்னும் காந்தத் திருப்புத் திறன் வட்டமிடும் மின்னோட்டங்களிலோ, உள்ளார்ந்த தற்சுழற்சிகளிலோ தோன்றுவதாக இருப்பதால் எப் போதும் அதனுடனே J என்னும் ஒரு கோண உந்தம் சேர்ந்துள்ளது. அவற்றுக்கிடையிலான தொடர்பு பின்வருமாறு: M=yJ (1) இங்கு ? என்பது சுழல் காந்தத் தகவு ro- magnetic ratio) எனப்படும். ஓர் அமைப்பு, காந்த ஒத்ததிர்வு காட்ட வேண்டு மென்றால் அது ஒரு காந்தத் திருப்புத்திறன், ஒரு கோண உந்தம் ஆகியவற்றைப் பெற்றிருப்பதுடன் சுழற்று விசைகளையும் (torques) கொண்டிருக்க வேண்டும். அணுக்களின் அணுக்கருக்களிலிருந்து, எலெக்ட்ரான்களின் தற்சுழற்சியிலிருந்து அல்லது மூலக்கூறுகளின் சுழற்சியின்போது நகரும் அணுக் கரு மின்னூட்டத்திலிருந்து காந்தத் திருப்புத் திறன் தோன்றக் கூடும். கோண உந்தமும் அதே தோற்று வாய்களிலிருந்து தோன்றுகிறது. வெளியிலிருந்து செலுத்தப்படும் காந்தப் புலங்கள் அண்மையிலுள்ள அணுக்கருக்களால் அல்லது அணுக்களால் அல்லது மூலக்கூறுகளால் செலுத்தப்படுகிற காந்த இரு முனைத் திருப்புத்திறன் அல்லது ஓர் அணுவின்