காந்த ஒளியியல் 247
தைச் செலுத்தும்போது எலெக்ட்ராள்களின் ஓடு பாதைகள் வட்டமாயிரா. அலைவுப் பரவல்களின் திசையில் ஓடுபாதைகளின் வெளிப்புற விட்டங்களைப் பொறுத்தே அலைவுகளின் அலைவு நேரங்கள் தீர் மானிக்கப்படுகின்றன. எனவே கேளா ஒலிப்பரவலும் காந்தப் புலமும் பல்வேறு திசைகளில் அமைந்திருக் கும்போது உள்ள அலைவு நேரங்களை அளந்து ஒரு பெர்மி பரப்பைக் கணக்கிட்டு விட முடியும். காந்த ஒளியியல் சி. சுப்ரமணியன் ஒளியியல் நிகழ்வுகளில் காந்தப்புலத்தின் தாக்கத் தால் ஏற்படும் விளைவை விளக்கும் இயற்பியல் பிரிவு காந்த ஒளியியல் (magnetooptics) எனப்படும். ஒளி என்பது மின்காந்தக் கதிர்வீச்சேயாகும். ஒளிக்கும் காந்தப் புலத்திற்கும் இடையே இடைவினை (interac tion) நேரிடுவது போல் தோன்றுகிறது. ஆயினும் காந்த ஒளியியல் விளைவுகளை ஏற்படுத்தும் வினை கள் ஒளி மற்றும் காந்தப் புலத்தின் நேரிடையான இடை வினைகள் அல்ல. இவ்விளைவுகளில், காந்தப் புலத்தின் தாக்கத்தாலேயே பொருளானது ஒளியை உமிழவோ உட்கவரவோ செய்கிறது. சீமென் விளைவு. ஓர் ஒளிமூலத்தை (light source) ஒரு காந்தப்புலத்தில் வைத்தால் அதன் நிற மாலை வரிகள் பிளவுபடுகின்றன. இது சீமென் விளைவு (Zeeman effect) எனப்படும். இந்த விளைவு நிறமாலைகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் இன்றியமையாத் தகவல்களைப் பெற முடிகிறது. ஒவ்வொரு நிறமாலை ஆற்றல் மட்டமும் ஒரு தனிச் சிறப்பான வகையில் பிளவுபடுகிறது. இப்பண்பின் மூலம் நிறமாலை ஆற்றல் மட்டங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் சீமென் விளைவின் உதவியால் எலெக்ட்ரானின் மின்னூட்டத்திற்கும், நிறைக்கும் உள்ள தகவையும், காந்தத் திருப்புத்திறனையும் கணக்கிட முடிகிறது. உட்கவர்ச்சி வரிகளில் ஏற்படும் சீமென் விளைவு தலைகீழ்ச் சீமென் விளைவு (inverse Zeeman effect) எனப்படும். வலிமை குறைந்த காந்தப் புலத்தால் தோன்றும் நிறமாலை வரிகள், சீமென் விளைவைவிட, ஒன்றுக்கொன்று நெருங்கிக் காணப் படும். இவ்விளைவு பாஸ்சன்பேக் விளைவு எனப் படும். பெரும்பாலான காந்த ஒளியியல் நிகழ்வுகள் சீமென் விளைவை அடிப்படையாகக் கொண்டே விளக்கப்படுகின்றன. எனவே காந்த ஒளியியலின் அடிப்படை விளைவாகச் படுகிறது. சீமென் விளைவு கருதப் ஃபாரடே விளைவு. ஒரு தளமுனைவாக்கம் (plane polarised) செய்யப்பட்ட ஒளியைக் காந்தப் கரந்த ஒளியியல் 247 புலத்தில் வைக்கப்பட்ட ஊடகங்கள் சுழற்றுவது ஃபாரடே விளைவு ஆகும். . வாய்ஜ் விளைவு. திசையொவ்வாப் பண்பியலான (anisotropic) ஒரு பொருளைக் காந்தப்புலத்தில் வைப்பின், அப்பொருள் இரட்டை ஒளிவிலக்கத் தன்மையுடையதாக (birefringent) மாற்றமடைகிறது. மேலும் இதன் ஒளிப்பண்புகள் ஓரச்சுப் படிகத்தின் ஒளிப்பண்பையே ஒத்துள்ளன. காந்தப் புலத்திற்கு ணையாக ஆய்வுகள் செய்யும்போது, இரட்டை ஒளி விலகலின் முடிவே ஃபாரடே விளைவாகும். காந்த விசைக் கோடுகளுக்குச் செங்குத்தாகச் செய்யப்பட்ட ஆய்வுகள் மிகுந்த சிக்கலானவை. மேலும் இவ் விளைவின் தாக்கம் மிகக் குறைவானதால் இது 1898 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் படவில்லை. குறுக்குக் காந்த ஒளியியல் இரட்டை ஒளிவிலகல், வாய்ஜ் விளைவு (voigt effect) எனப் படுகிறது. இயல்பான சீமென் விளைவையுடைய பொருள் களுக்கு வாய்ஜ் விளைவை எளிதாகக் கணக்கிடலாம். மிகுந்த சிக்கலான சீமென் விளைவையுடைய பொருள் களின் முடிவைக் கருதுகோளின்படி முன்னரே அறிந் திருந்தாலும், அளவுகளின் அடிப்படையில் சிக்க லானவையே. வாய்ஜ் விளைவானது 1, மற்றும் Ip எண்களைப் (indeces) பொறுத்துக் காணப்படுகிறது. காந்தவிசைக் கோடுகளுக்குச் செங்குத்தாக முனைவாக்கம் செய்யப் பட்ட ஒளியும் (ns), காந்தவிசைக்கோடுகளுக்கு இணையாக முனைவாக்கம் செய்யப்பட்ட ஒளியும் (np) ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காணப்படுகின்றன. காந்தப் புலத்தில் உட்கவர் வரிகளால் (absorption lines) சீமென் விளைவு தோன்றும்போது, npஇன் மதிப் பானது காந்தப்புலத்தைப் பொறுத்துப் மாறுவதில்லை. னெனில் மையப்பகுதி ns = } (n+ + n) Пр s