களிப்பாறை 7
பிரான்ஸ் நாட்டிலுள்ள மாண்ட்மாரிலோன் என்னு மிடத்தில் கிடைத்ததால் இப்பெயர் பெற்றது. நான்ட்ரோனைட் மாண்ட்மாரிலோனைட்டைவிட இரும்பு மிகுதியாக உடையது. சேப்போனைட் மற்றும் ஹெக்டோரைட், இரண்டிலும் மக்னீசியம் மிகுந்துள்ளது. களிக்கனிமங்கள் பொதுவாகப் பலவகைப்பட்ட குழிகளில் காணப்படுகின்றன. பெக்மடைட் எனும் பாறையில் ஆங்காங்கே கிடைக்கின்றன. கிரானைட், நைஸ் எனப்படும் மாற்றுருப்பாறை முதலியவற்றி லுள்ள ஃபெல்ஸ்பார்கள் மாற்றமடைந்து, சிதைந்து, களிக் கனிமங்களாகத் தோன்றுகின்றன. புவியின் மட்டத்தில் அல்லது அருகிலுள்ள பகுதிகளில் ஏற்படும் இம்மாற்றத்தால் கயோவினைட் முதலானவை உண்டாகின்றன. இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் என்னுமிடத்தில் இத்தகைய பொய்யுருக்கொண்ட கயோலினைட் காணப்படுகிறது. கலிஃபோர்னியாவி லுள்ள பாலா பகுதியில் பல களிக் கனிமங்கள் கிடைக்கின்றன. களிக்கனிமங்கள் இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, கேரளா முதலிய பகுதிகளில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் நெய்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், செங்கற்பட்டு மாவட்டத் திலும் கிடைக்கின் ன்றன. மண்ணின் புரை அளவு, நீரை உறிஞ்சி வைக்கும் ஆற்றல் இவற்றின் விளைவாகத் தாவரங்களின் வளர்ச்சிக்கு மண்ணிலுள்ள களிக்கனிமங்களின் அளவே காரணமாகவுள்ளது. மண்ணின் வளத்திற்கு க்கனிமங்களே காரணமாகும். களிக்கனிமங்கள் பீங்கான் முதலான பொருள்கள் செய்வதற்கும், பெட்ரோலியம் தூய்மை செய்யும் ஆலைகளிலும், ரப்பர் கம்பளி முதலியன தயாரிக்கவும், சில கண் ணாடிப் பொருள்கள். செங்கல் முதலியன தயாரிப் பதிலும், சிமெண்ட் உற்பத்தியிலும் பயன்படுகின்றன. இல. வைத்திலிங்கம் தளர்வானது வண்டல். (< 1/256 மி.மீ) களிப்பாறை 7 நூலோதி. W.E Ford, Dana's Text Book of Mineralogy. Fourth Edition, John Wiley & Sons, New York, 1955. களிப்பாறை இது ஒரு வகைப் படிவுப்பாறை ஆகும். இப்பாறை கனிக்கனிமங்களாலானது. களிக்கனிமங்களாலாகிய பல பாறைகள் உள்ளன. அவை களிப் பாளப்பாறை shale), மண் - கல் (mud-stone). களிக்கல் (clay stone), நுண் களிக்கல் (silt stone) என்பன ஆகும். இவற்றில் களிக்கல் என்னும் பாறை கெட்டியானது; 0.002 மி.மீக்கும் சிறிய துகள்களால் ஆனது. நுண்களிக் கல் என்னும் பாறை கெட்டியானது; தில் உள்ள களிக்கனிமத் துகள்கள்' மி.மீ. அளவில் உள்ளன. மண்கல் என்னும் பாறை பல்வேறு அளவு களில் உள்ள துகள்களால் ஆனதாகும். I 16 1 256 களிப் பாளப்பாறை நுண் களிக்கனிமங்களால் ஆனது; கெட்டியானது. ஆனால் இப்பாறை பாளங் களாக எளிதில் பிரியக்கூடியது; பிளந்து பிரியக்கூடிய தன்மை இப்பாறையின் சிறப்புத் தன்மையாகும். ஆகையால் இது களிப்பாளப்பாறை எனப்படுகிறது. படிவுப்பாறையாகிய களிப்பாளப்பாறை உருமாற்றம் அடைந்து மேலும் கெட்டியானதாகிப் பலகைப் பாறை (slate) என்னும் மாற்றுருப் பாறையாக மாறு கிறது. களிப்பாளப்பாறை 0.01 மி.மீட்டருக்கும் சிறிய துகள்களால் ஆனது. இப்பாறையில் சுயோலி னைட், மாண்ட்மாரிலோனைட், இல்லைட் முதலான களிக்கனிமங்கள் பெருமளவில் உள்ளன. இதில் அபிரகம், குளோரைட், குவார்ட்ஸ் எனப்படும் பளிங்கு குளாக்கோனைட் முதலான கனிமங்கள் சிறிய அளவில் உள்ளன. கரியும். கால்சியமும் மிகக் குறைந்த அளவில் அழுக்குகளாக இடம் பெற்றுள்ளன. உருமாறியது கெட்டியானது நுண்களிக் கல் (1/100 மி.மீ) குவார்ட்சைட் மண்கல் (தகடு அற்றது) மண் அர்ஜிலைட் (பிளவற்றது ) களிமண் களிப்பாறை (தகடாகக் காணப்படும்) (>1/256மி.மீ) படம் 1. களிமண் படிவுகளின் பதபபயனீட்டாய்வு பலகைப்பாறை (துணைப் பிளவு)