250 காந்த ஓய்வு
250 காந்த ஓய்வு அவை, தற்சுழற்சிக்கும் உரிமைக் கோவைக்கும் இடை யில் இணைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அந்த இணைப்பு, நேரம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதன் அதிர்வெண் நிறமாலையில் தற்சுழற்சி அமைப்பின் இயல்பு அதிர்வெண்கள் அடங்கியிருக்க வேண்டும். காந்தப்புலம் செலுத்தப்பட்டுள்ளபோது தற்சுழற்சிகளின் அச்சுச் சுழற்சியின் அதிர்வெண் இத்தகைய இயல்பு அதிர்வெண்களுக்கு ஓர் எடுத்துக் காட்டு ஆகும். அணுக்கரு ஓய்வு. ஓய்வு வகை அணுக்கருக்களில் சீமென் டை சில டைவினைகளும். தற்சுழற்சி - தற்சுழற்சி வினைகளும் எப்போதும் இன்றியமையாதவை. வேளைகளில் அணுக்கருவின் கோள வடிவற்ற மின் பரவீடு (மின் நான்முனைத் திருப்புத்திறன்) ஓய்வு நேரத்தைப் பாதிக்கிறது. நான்முனை ஆற்றல் புறக் கணிக்கத் தக்கதாக இருக்கும்போது, ஒரு வலிமை யான நிலையான காந்தப் புலத்தைச் செலுத்திய பின்னர் காந்தமாக்கல் வழக்கமாக அடுக்குக் குறித் தன்மையில் வெப்பச் சமநிலையை அணுகுகிறது. நேர மாறிவி, தற்சுழற்சி உரிமைக் கோவை ஓய்வு நேரத்துக்குச் சமமானதாகி விடுகிறது. அணுக்கரு ஓய்வு எப்போதும் காந்த ஒத்ததிர்வு முறைகளின் மூலமே ஆராயப்படுகிறது. குறிப்பாக வலிமை குறைந்த அணுக்கரு பாரா காந்தத் தன்மையை வேறு முறைகளில் துலக்க முடியாது. பேரளவு அணுக்கருக் காந்தமாக்கல் M, நிலையான காந்தப் புலமான H இன் திசையிலிருந்து விலகி கோணத்தில் சாய்ந்திருந்தால், திசையன் M ஐச் சுற்றி அச்சு சுழல்கிறது. Hக்கு இணையாக உள்ள Mஇன் ஆக்கக்கூறு தற்சுழற்சி- உரிமைக் கோவை ஓய் வின் உதவியால் தன் வெப்பச் சமநிலை மதிப்புக்குத் திரும்புகிறது. தற்சுழற்சி - தற்சுழற்சி இணைப்பு. பல அச்சுச் சுழற்சி அதிர்வெண்களைத் தோற்றுவிக்கிறது. இதன் காரணமாக அணுக்கருக்கள் தமக்குள் நிலை தவறிப் போகின்றன. இதன் காரணமாக Hக்குச் செங்குத்தான M இன் ஆக்கக் கூறுகள் உரிமைக் கோவையுடன் ஆற்றல் பரிமாற்றம் (தற்சுழற்சி-தற் சுழற்சி ஓய்வு ) ஏற்படாமலேயே சிதைந்து மறை கின்றன. ஓர் அணுக்கரு . ஒரு அதை அடுத்துள்ளவற்றைப் தற் ஓய்வு நொடி பொறுத்து மிகு வேகத்துடன் நகருமானால் சுழற்சி - தற்சுழற்சி ஓய்வு நேரம் நீள்கிறது. அணுக்கரு இயக்கங்கள் மிக விரைவானவையாக உள்ள போது ஏறத்தாழ அனைத்துத் திண்மங்களிலும் நேரங்கள் பல மைக்ரோ நொடி முதல் பல வரையான அலைவுகளில் அமைகின்றன. தற்சுழற்சி- தற்சுழற்சி ஓய்வு நேரங்களை அளவிடுவது. அணு இயக்கங்களை ஆராய்வதில் விரிவாகப் பயன்பட்டு வருகிறது. உலோகங்கள். பாரா காந்தப் பொருள்கள். பாரா காந்த மாசுகள் அடங்கிய டயா காந்த மின் கடவாப் பொருள்கள் ஆகியவற்றில் காந்த இரு முனைகள் எலெக்ட்ரான்களுடன் இணைவதால் தற் சுழற்சி - உரிமைக் கோவை ஓய்வு தோன்றுகிறது. நீர்மங்கள், வளிமங்கள். சில திண்மங்கள் ஆகிய வற்றில் மிக விரைவான தன்விரவல் அல்லது மூலக் கூற்றுச் சுழற்சிகள் காரணமாக அணுக்கருக்களின் சார்பு இருப்பிடங்கள் விரைவாக மாற்றம் அடையும் போது காந்த இருமுனைகள் பிற அணுக்கருத் திருப்புத் திறன்களுடன் இணைப்புக் கொள்வதாலும் தற்சுழற்சி - உரிமைக்கோவை ஓய்வு தோன்றும். அணுக்கரு மின் நான்முனைகள், ஓம்பும் பொருளின் மின் புலங்களுடன் இணைவதாலும் தற்சுழற்சி- உரிமைக் கோவை ஓய்வு தோன்றலாம். இதற்கான ஓய்வு நேரங்கள் ஒரு மைக்ரோ நொடிக்கும் குறைந்த மதிப்புக்களிலிருந்து பல மணி வரையான மதிப்புகளு டன் அமைகின்றன. உண் பாரா காந்த ஓய்பாடு. இதை ஆராய ஒத்ததிர்வு முறைகளைப் பயன்படுத்தலாம். ஆயினும் ஒரு மாறிக்கொண்டிருக்கிற காந்தமாக்கும் புலத்தைப் பின்பற்றிச் செல்லக்கூடிய திறமையைப் பெற்றிருப் பதை ஆராய்வதன் மூலமும் தற்சுழற்சி - உரிமைக் கோவை ஓய்வின் காரணமாக உரிமைக் கோவையின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தை ஆராய்வதன் மூலமும் பாரா காந்த ஓய்வை அறியலாம். மையில் பாரா காந்த அயனிகளின் தற்சுழற்சிகளை வெப்ப மாற்றீடற்ற முறையில் காந்த நீக்கம் செய்து உரிமைக் கோவைகளைக் குளிர வைக்கும் நோக் கத்தின் காரணமாகவே காந்த ஓய்வுச் செயல் முறையின் மீது முதன் முறையாகக் கவனம் செலுத் தப்பட்டது. அயனிகளுக்கும் அவற்றின் சுற்றுச் சூழல் களுக்கும் இடையிலான பெரிய நிலைமின் இடை வினைகள், மொத்தத் தற்சுழற்சி ஆற்றலுக்குப் பெரும் பங்களிப்புச் செய்கின்றன. இந்த விளைவைப் புறக் கணிக்க முடியாது. இரு முனைகள், செலுத்தப்பட்ட புலங்களுடன் இணைப்புக் கொள்ளுதல், காந்த இருமுனையும், பரிமாற்றுச் செயல் முறைகளும் தற்சுழற்சி - தற்சுழற்சி இணைப்புக் கொள்ளுதல், அணுக் கருக்களுடன், குறிப்பாகப் பாரா காந்த அயனிகளின் அணுக்கருக்களுடன் காந்த இணைப்பு ஏற்படுதல் ஆகியவையும் தற்சுழற்சி ஆற்றலுக்குப் பெரும் பங்களிப்புச் செய்கின்றன. முதன்மையான தற்சுழற்சி - உரிமைக்கோவை ஓய்வுச் செயல் முறைகளில் உரிமைக் கோவையின் இயக்கத்தால் தற்சுழற்சி - ஓடுபாதை இணைப்பில் ஏற்படும் பண்பேற்றமும், உரிமைக்கோவையின் இயக்கத்தால் அணுக்கருக்களுடன் ஏற்படும் காந்த ணைப்பில் ஏற்படும் பண்பேற்றமும் பாரா காந்த மாசு அணுக்களுடன் ஏற்படும் இணைப்பும் இடம் பெறுகின்றன. மாதிரித் தன்மையான தற்சுழற்சி-