பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தக்‌ கம்பி 251

உரிமைக்கோவை ஓய்வு நேரங்கள் அறை வெப்பநிலை யில் 10-8 நொடிக்கும் குறைவான மதிப்பிலிருந்து நீர்ம ஹீலிய வெப்பநிலைகளில் பல நொடி வரை காந்த ஓய்வைப் பற்றிய ஆய்வுகள் 1930 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கியன. எனினும் பாரா காந்த அயனிகளின் எலெக்ட்ரான் ஆற்றல் மட்டங்களின் சிக்கலான தன்மைகள் காரணமாக அவை அணுக்கரு ஓய்வின் அளவுக்கு முழுமையாகப் புரிந்து கொள்ளப் படவில்லை. அயக்காந்த ஓய்வு. அயக்காந்தப் பொருள்களில் எலெக்ட்ரான் தற்சுழற்சிகளுக்கு இடையில் வலிமை மிக்க பரிமாற்ற இணைப்புகள் தோன்றுவதால் எலெக்ட்ரான் தற்சுழற்சிகள் ஒன்றுக்கொன்று இணை யாக அமைய விழைகின்றன. இதன் காரணமாகவும், காந்த நீக்க விளைவுகளின் காரணமாகவும் அயக் காந்த ஓய்வு பாரா காந்த ஓய்விலிருந்து வேறுபட் டுள்ளது. . அயக்காந்தப் பொருள்களில் தற்சுழற்சிகள் இணையாகத் திசைமுகப்பட விழைவது இவ்விருவகை ஓய்வுகளுக்கு இடையில் வேறுபாடு காண உதவுகிறது. ஒன்றில் மொத்தக் காந்தமாக்கல் எண் எண் மதிப்பில் மாற்றம் அடையாமல் திசையில் மட்டும் மாற்றம் அடைந்து பரிமாற்று ஆற்றலில் மாற்றம் ஏற்படாமல் நிலையாக வைத்துள்ளது. மற்றதில் காந்தமாக்கலின் எண் மதிப்பு மாறுகிறது. இதனால் பரிமாற்று ஆற்றலில் மாற்றம் ஏற்படுகிறது. காந்த நீக்க ஆற்றல் களிலும் மாற்றங்கள் தோன்றுகின்றன. இந்த ரெண்டாம் செயல் முறை. மாதிரிப் பொருளின் வடிவத்தைப் பொறுத்துள்ளது. இது அயக்காந்த அணுக் கோவைகளில் போன்ற ஒழுங் கீனங்கள் இருப்பதன் காரணமாகவும், வெப்ப அதிர்வு களாலும் கூடத் தோன்றக்கூடும். மாசுகள் கே.என். ராமச்சந்திரன் நூலோதி. B.D, Cullity, Introdution of Magnetic Materials Addison. wesley Publishing Company, Califonia,1972. காந்தக் கம்பி அனைத்து வகை மின் காந்த எந்திரங்களிலும் ஏனைய கருவிகளிலும் பயன்படும் செம்பு அல்லது அலுமினியத் தாலான மின் காப்பிடப்பட்ட கம்பியே காந்தக் கம்பி (magnetic wire) எனப்படுகிறது. இது ஓர் ஒற்றைப் புலக் கம்பியாகும். கனிமப்பூச்சு (enamel), மெருகு வனம் (varnish), பருத்தி, கண்ணாடி. கல்நார் (asbes - tos) அல்லது இவற்றின் சேர்க்கைகள் மின் காப் பிறகுப் பயன்படுகின்றன. புதிய செயற்கைப் பொருள் களும் அவற்றின் சேர்க்கைகளும் சரிவரப் பயன்படுவ காந்தக் கம்பி 25/ தற்காக விளக்கமான ஆய்வு முறைகள் உருவாக்கப் பட்டுள்ளன. இவற்றால் வெப்பம், அதிர்ச்சி, கரையும் தன்மை, வெடிப்பு, உராய்வுத்தடை, நெகிழ் தன்மை போன்றவற்றை மதிப்பிட முடியும். உயர்ந்த வெப்ப நிலை, ஈரம், மின்னியல் அழுத்தம் ஆகியவற்றில் மீண்டும் மீண்டும் உட்படுத்தப்படுவதன் மூலம் வெப் பத்தைத் தாங்கக் கூடிய தன்மை அறுதியிடப்படுகிறது. மின் காப்பு, குறைந்தது 20,000 மணிகளாவது (hours) ஆயுள் (life) கொண்ட உயர் வெப்ப எல்லை களுக்கான I.E.E.E. வெப்ப வகைகள், 0(50°C). A (105°C),; B (130*C), F (155°C), H (180°C) ஆகும். பொதுவாக, பருத்தி, தாள். பட்டு ஆகியவை 0 வகையில் அடங்கும். கனிம வேதியியற் பொருள்களான ஃபார்ம்வார் கனிமப்பூச்சு, மெருகு வனம் பூசப்பட்ட பருத்தி, தாள் ஆகியவை Aவகை ஆகும். கல்நார், சிலிகோன், மெருகு வனம், பாலி இமைடு ஆகியவை H வகை ஆகும். பல் வேறு செயற்கைக் கனிமப்பூச்சுகள் B, F வகைகளில் அடங்கும். பாலி எஸ்டரிமைடு கனிமப்பூச்சுகள் 180- 200° C வரை வெப்பத்தைத் தாங்கக் கூடியவை. அனைத்துக் காந்தக் கம்பிகளுமே மெதுவாக இழுக்கப் பட்ட மின்னாற்பகு செம்பாலானவையே. ஆனாலும் இடக் கட்டுப்பாடு இல்லாதபோது செம்பின் விலை உயர்வாக இருப்பதாலும் கிடைப்பதற்கரிதாக உள்ள தாலும் அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. உருண்டையான அலுமினியக் கம்பி அழுத்தத்தால் தட்டையாக மாறிவிடுகிறது. ஆகவே, எதிர்பார்ப்பதை விட மிகு இடக் காரணியைச் சுருள்களில் அளிக்கிறது. 200°C க்கு மேற்பட்ட வெப்பநிலைகளில் செம்பு விரைவில் ஆக்சைடாக மாறுகிறது. அத்தகைய வெப்ப நிலைகளில் அழுத்தத்திறன் காரணமாக இக் கம்பிகள் மென்மையாகின்றன. அதில் சிறிதளவு (டன்னிற்கு 30 அவுன்ஸ்) வெள்ளி சேர்ப்பதால் அதன் உயர் வெப்ப வலிமை மிகுதியாகின்றது. 300°C அல்லது மேற்பட்ட உயர் வெப்பநிலைகளில் நேர்மின் முனையாக (anode) உள்ள அலுமினியம் முன்னுரிமை பெறுகிறது. அலுமினியப் பூச்சுக் கொண்ட செம்பு - நிக்கல் கம்பி மேலும் உயர்ந்த வெப்பநிலைகளில் இயக்கப்படுகிறது. ஒரு கனிமப் பூச்சால் கம்பியின் விட்டம் உயர்வது 80 மி.மீக்கு 1லிருந்து 200 மி.மீக்கு 5 வரை இருக் கும். அடிக்கடி தேவைப்படும் இரட்டைப் பூச்சு இரண்டு பங்கு தடிமனாவதில்லை. இழைப்பூச்சு கனிம பூச்சுப் போன்று மூன்று மடங்கு தடிமனாகும். அவற்றை இரண்டு மடங்கு தடிமனிலும் பெற இயலும். எஸ். சுந்தரசீனிவாசன் நூலோதி. W. Landee, C. Davis, P. Albrecht, Electronics Designer's Hand Book, Second Edition. McGraw-Hill Book Company, New York. 1977.