காந்தக் கோளம் 255
புலத்துடன் பரிமாற்று வினை செய்வதால் காந்தக் கோளம் (magnetosphere) உருவாகிறது. 1960 ஆம் ஆண்டில் வில்லியம் கில்பர்ட் என் பார். புவி ஒரு பெரிய கோள வடிவக் காந்தம் என்று மெய்ப்பித்தார். பிறவகைக் காந்தங்களைப் போலவே புவிக்கு வடமுனையும், தென்முனையும் உண்டு. இரண்டுக்குமிடையில் கற்பனையான காந்த விசைக் கோடுகள் (lines of force) அமைந்துள்ளன. இரண்டு முனைகளுக்கும் மையமான பகுதியில் அவை புவிப் பரப்பிலிருந்து பெரும உயரத்தை எட்டுகின்றன. காந்தக் கவர்ச்சிகளும் விலக்கங்களும் செயல்படுகிற திசைகளை இக்கோடுகள் குறிப்பிடுகின்றன. 1957 இல் நிக்கோலஸ் கிரிஸ்ட்டோஃபிலஸ் என்னும் கிரேக்க அறிவியலார் புவியைச் சுற்றியுள்ள பகுதியில் மின்னேற்றிய துகள்கள் புவியின் காந்தப் புலத்தால் பிடித்துக் கொள்ளப்பட்டு, காந்த விசைக் கோடுகளின் வழியாக இரு முனைகளுக்குமிடையே சுருள் வடிவப் பாதைகளில் சுற்றி வரும் என்னும் கருத்தை வெளியிட்டார். இதற்குக் கிரிஸ்ட்டோஃ பிலஸ் விளைவு என்று பெயரிடப்பட்டுள்ளது. துருவங் களுக்கு அருகில் காந்த விசைக் கோடுகள் புவிப் பரப்பை நெருங்கி வருகின்றன. அங்கு மின்னேற்றிய துகள்கள் மேல் வளி மண்டலத்திலுள்ள மூலக்கூறு களுடன் பரிமாறுவினை செய்கின்றன. இதன் காரண மாக, துருவ ஒளிகள் (arora) ஏற்படுகின்றன. 1958 இல் விண்வெளி ஏவூர்திகளின் உதவியுடன் செய்யப்பட்ட ஆய்வுகள், புவியைச் சுற்றி மின்னேற் றிய துகள்கள் நிறைந்த ஒரு பகுதி பரவியிருப்பதாகத் தெரிவித்தன. அவற்றுக்கு வான் ஆலன் வளையங்கள் எனப்பெயர். அவற்றிலுள்ள மின் துகள்கள் கிரிஸ்ட் டோஃபிலஸ் கருத்துக் கூறியவாறே செயல்பட்டன. விரைவில் வான் ஆலன் வளையங்கள் காந்தக் கோளங்கள் என மாற்றுப் பெயரிடப்பட்டன. காந்தக் கோளத்திற்கு நுணுக்கமாக வரையறுக் கப்பட்ட எல்லைகள் உண்டு. அது சூரியக் காற்றால் அருவிக் கோட்டமைப்பில் நீட்டப்பட்ட கண்ணீர்த் துளியின் உருவத்தை அடைகிறது. சூரியனை நோக் கிய திசையில் அது மழுங்கிய கோள வடிவிலும். மறுதிசையில் ஒருநீண்ட வாலுடனும் அமைந்துள்ளது. காந்தக் கோளத்தின் எல்லை (magnetopause) சூரிய னிருக்கும் திசையில் புவிப்பரப்பிலிருந்து 64 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் மறு திசையிலுள்ள அதன் வால் பதினாறு லட்சம் கிலோ மீட்டருக்கும் மேலாக நீண்டுள்ளது. புலியின் காந்தப் புலம் சூரியக்காற்றுக்கு ஒரு குறை தடையாக அமைகிறது. நீரில் செல்லும் படகின் முன் முனையில் தோன்றும் நீர் அலைகளின் (bow waves) வடிவத்தில் பாய்மக் காந்த மின்முனை அதிர்ச்சி அலைகள் உருவெடுத்துச் சூரியக்காற்றின் காந்தக் கோளம் 253 காந்தக் கோளத்தைச் சுற்றிப் பாயச் செய்கின்றன. சூரியக் காற்றையும் காந்தக் கோளத்தையும் பிரிக்கிற காந்தக் கோள எல்லையின் இருப்பிடம் சூரியக் காற்றின் இயக்கவியல் அழுத்தம், காந்தக் கோளத் தின் புலத்தைச் சமன் செய்யும் இடத்தில் அமை கிறது. 1- 14 7. I. காந்தக் கோன வால் பகுதி, 4. நடுநிலைப்படலம் 3. துருவ ஒளிப்பகுதி, 4. காந்தக்கோள எல்லை, 5. முன்முனை அதிர்ச்சி அலை, பி. வான் ஆவல் வளையங்கள், 7. மோதலுக்குப் பிந்திய பாய்வு, 8. சூரியக்காற்று. காந்தப் புலம் இணைதலும் காந்தக் கோளச் சலன மும். காந்தக் கோளம் என்பது ஒரு முடுக்கப்பட்ட பாய்மக் காந்த அமைப்பு ஆகும். அதன் உள்ளிட இயக்கவியல்கள் காந்தப் புல இணைப்பின் மூலம் உட்புகும் சூரியக் காற்று ஆற்றலின் அளவால் கட்டுப்படுத்தப்படுகின்றன. சூரியக் காற்று, சூரியனின் சையிலுள்ள காந்தக் கோள எல்லைப் பரப்புடன் வந்து மோதும்போது அதன் காந்தப் புலமும், காந் தக் கோளத்தின் காந்தப் புலமும் சந்திக்கின்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று இணையாக இருந்தால் தான், இரண்டு புலங்களும் ஒரு காந்த நடுநிலைக் கோட்டில் தடை செய்யும் விரவல் (resistive diffusion ) முறையில் ஒன்றுபட முடியும். சூரியக் காற்றுக்குத் தெற்கு நோக்கிய ஒரு பெரிய காந்தப் புல ஆக்கக் கூறு இருந்தால் அத்தகைய ஒன்றுபடும் பரிமாற்று வினை பெருமமாக அமைகிறது. பாய்மக் காந்தவியலில் (hydro-magnetics) காந் தப் புலம் பிளாஸ்மாவுடன் கூடவே நகருகிறது. காந்தக் கோளத்தைச் சுற்றிப் பாய்கிற சூரியக் காற்று ஒன்றுபட்ட புலக் கோடுகளை இழுத்துப் புவியின் இரவுப் பக்கத்தில் ஒரு நீண்ட காந்தவியல் வாலாக நீட்டி விடுகிறது. ஏறத்தாழ 3 × 108